z About Us - News TN - Tamil Nadu News | Latest News Update | Live News

About Us

News TN என்பது தமிழ் இணையதள ஊடகங்களில் தலை சிறந்த ஒன்றாக உள்ளது. இது முழுக்க முழுக்க இணையதளத்தில் மட்டுமே வெளியாகும் ஒரு உலகத் தரம் வாய்ந்த இணைய செய்தித் தளம் ஆகும். இதில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளும் பல கோணங்களில் திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன. மேலும் நுண் ஆய்வுகள் பலவற்றை மேற்கொண்டு உண்மையாகவும் துல்லியமாகவும் ஒவ்வொரு செய்திகளும் இருக்கும். தமிழ்நாட்டிலேயே சிறந்த முறையில் ஒவ்வொரு செய்தியின் பின்னணியிலும் தனிக்கவனம் செலுத்தி அதன் உண்மைத்தன்மை மாறாமல் செய்திகள் வழங்கப்படும்.

உரிய நேரத்தில் மிகச்சரியான செய்திகளை உடனடியாக வழங்குவதில் முதன்மையான ஒரு இணையதள செய்தி சேனல், News TN. இன்றைய சூழலில் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் நான்காவது தூணாக விளங்கும் ஊடகத்தில் ஒரு பங்கு என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதேசமயம் தற்கால இணையதள ஊடகத்திலும் மக்களின் பங்கு பெருமளவில் இருந்து வருகிறது. தங்களுக்கு கிடைத்த தகவல்களை சமூக வலைதளங்களில் தொடர்ந்து மக்கள் பகிர்ந்து வருகின்றனர். இவ்வாறு பகிரப்படும் தகவல்களின் முழுமையான உண்மைத்தன்மையினை அறிந்து அதனை உலக மக்கள் அனைவரும் அறிந்திட சிறந்த செய்திகளாக வெளியிடுவதில் உங்களின் News TN என்றும் தயார் நிலையில் உள்ளது.

ஒரு மூலையில் இருக்கும் கிராமத்தின் சாதாரண குடிமகன் முதல், நாட்டின் முதல் குடிமகன் வரை அனைவருக்கும் மிகத்துல்லியமான செய்திகளை வழங்கும் வகையில் செய்தியாளர்களையும் செய்திகளையும் கொண்டதாக News TN விளங்குகிறது.

மேலும் News TN இணையதள ஊடகத்தில் உள்ள நிறை குறைகளை சுட்டிக்காட்டி எங்களுக்கு ஆலோசனைகளை வழங்க வாசகர்களாகிய உங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு. இதன்படி News TN உடனான உங்களது நட்புறவு, செய்திகளின் மூலம் சேவைகளாக தொடர வேண்டும் என்பதுதான் News TN நிறுவனத்தின் தலையாய நோக்கம் என்பதை மனநிறைவோடு தெரிவித்துக் கொள்கிறோம்.