வயசானாலும் இன்னும் 2 பேருக்கும் அழகும் ஸ்டைலும் மாறல! 23 வருடங்கள் கழித்து ரஜினியுடன் கைக்கோர்க்கும் நடிகை!

சினிமா  Published on: 23 ஏப் 2022, 4:50 pm Edited on: 23 ஏப் 2022, 4:50 pm

வயசானாலும் இன்னும் அந்த அழகும் ஸ்டைலும் மாறல! 23 வருடங்கள் கழித்து ரஜினியுடன் கைக்கோர்க்கும் அந்த நடிகை யார் என்று உங்களுக்கே தெரிந்திருக்கும். நீலாம்பரி படையப்பாவில் கூறிய டயலாக் சூப்பர் ஸ்டாருக்கு மட்டுமின்றி நீலாம்பரிக்கும் பொருந்தும்.

படையப்பாவில் தான் நீலாம்பரியின் காதல் தோற்றுவிட்டது. இந்த படத்திலாவது நீலாம்பரியின் காதல் ஜெயிக்குமா? என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் கைவிடப்பட்டதாக இணையத்தில் செய்திகள் உலா வந்தன.

கோலமாவு கோகிலா என்ற வித்தியாசமான திரைக்கதையுடன் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன். அதற்கு முன்பு சின்னத்திரையில் பலவிதமான நிகழ்ச்சிகளுக்கு இயக்குனராக பணியாற்றியவர்.

டாக்டர் படம் வெளியாவதற்கு முன்பே நெல்சன் விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. டாக்டர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின் பீஸ்ட் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமானது.

nelson

ஏப்ரல் 13-ஆம் தேதி பீஸ்ட் படம் உலகம் முழுவதும் வெளியானது. படத்திற்கு இரண்டு விதமான விமர்சனங்கள் வந்த போதிலும் பாக்ஸ் ஆபிசில் வெற்றி கண்டது. பீஸ்ட் படம் வெளியாவதற்கு முன்பே நெல்சன் அடுத்ததாக ரஜினியை வைத்து இயக்கப் போகிறார் என்ற செய்தி வெளியானது.  இதனால் ரஜினி ரசிகர்களும் பீஸ்ட் படத்தின் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பில் இருந்தனர்.

இந்நிலையில் பீஸ்ட் படத்திற்கு வந்த விமர்சனங்களின் எதிரொலியால் நெல்சன் இயக்கவிருந்த ரஜினி படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியானது.

Also read: இளைய நிலா பொழிகிறதே மோகன் …! இளைய தளபதி விஜய்யுடன் இணைவாரா?

கடந்த ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியான ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் மிகப்பெரிய தோல்வியடைந்தது. இதனால் ரஜினி தான் அடுத்ததாக நடிக்கவிருக்கும் படத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

பீஸ்ட் படத்திற்கு வந்த நெகட்டிவ் விமர்சனங்ளின் காரணமாக ரஜினி நெல்சனை அடுத்த படத்தின் இயக்குனரில் இருந்து மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் கடந்த சில நாட்களாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தது. 169 படத்தில் இருந்து நெல்சன் வெளியேறிவிட்டார் என்று கூறப்பட்டது. ஆனாலும் இவையெல்லாம் பொய்யான தகவல் என்றும் படத்திற்கான வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டது.

nelson

விரைவில் இந்த சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அடுத்த ஒரு அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் பிரமாண்டமான பொருட்செலவில் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவிருக்கிறார்.

இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை ரம்யாகிருஷ்ணன் நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. படையப்பா படத்தில் ரஜினியோடு நடித்த ரம்யாகிருஷ்ணனின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்ட நிலையில், சுமார் 23 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ரஜினியுடன் கைகோர்க்கவிருக்கிறார் ரம்யாகிருஷ்ணன். இது ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.  இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாத தொடக்கத்தில் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து

Your email address will not be published.

ட்ரெண்டிங் நியூஸ்

News TN Special

News TN Special