ஹாலிவுட் லுக்கில் கவின்; டாடா பட போஸ்டரை வெளியிட்ட இயக்குநர் பா.ரஞ்சித்!

சினிமா  Published on: 22 ஏப் 2022, 5:49 pm Edited on: 23 ஏப் 2022, 4:30 pm

டாடா பட போஸ்டர் மற்றும் கவினின் இந்த தோற்றத்தைப் பார்க்கும்போது கதை ஹாலிவுட் பட பாணியில் இருப்பது போன்று தோற்றமளிக்கிறது. இந்த போஸ்டரை இயக்குநர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கவின், விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி, போன்ற தொடர்களின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். பின்பு ஆங்கரிங்கிலும், பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் இவருக்கென பெருமளவு ரசிகர் பட்டாளம் குவிந்தது.

அதன் பின்பு லிஃப்ட் திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

கவின் நடித்த ஆகாஷ் வாணி என்ற வெப் தொடர் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியானது.

மேலும் கவின், விக்னேஷ் சிவன், நயன்தாரா இணைந்து தயாரித்துள்ள ஊர்க்குருவி படத்தில் கவின் கதாநாயகனாக நடித்து முடித்துள்ளார். இந்த படம் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

kavin

கவின் தற்போது ஒலிம்பியா மூவீஸ் தயாரிக்கும் ‘டாடா’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக பீஸ்ட்டில் நடித்த நடிகை அபர்ணா தாஸ் நடிக்கிறார். இந்த படத்தை கணேஷ் கே.பாபு என்பவர் இயக்குகிறார். ச.அம்பேத்குமார் தயாரிக்கிறார். இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டரை இயக்குநர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கவினின் மாறுபட்ட தோற்றத்தில் வெளியாகியிருக்கும் இந்த போஸ்டர் தற்போது கவின் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.  

Also read: கே.ஜி.எஃப் சேப்டர்-2 டீமுடன் இணைந்த சூரரைப்போற்று சுதா கொங்கரா!

அந்த போஸ்டரில் கவின் ஒரு குழந்தையை வைத்துக்கொண்டு கூட்ட நெரிசலில் மிகவும் பரிதாபமாக நிற்பதுபோல் இருக்கிறது. இதை பார்க்கும் போது கவின் இந்த படத்தில் ஒரு குழந்தைக்கு அப்பாவாக நடிப்பது போல் தோன்றுகிறது. மேலும் கவின் சோகம் சூழ்ந்து தன்னந்தனியே நிற்கும் இந்த போட்டோ ஹாலிவுட் திரைப்படத்தை நினைவுபடுத்துகிறது.

பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் நடிப்பில் வெளியான “தி பர்சூட் ஆப் ஹேப்பினஸ்” என்ற திரைப்படம் பல விருதுகளை குவித்தது. மனைவியை பிரிந்து ஒரு குழந்தையுடன் வாழும் ஹீரோ தன் வாழ்வில் எந்த மாதிரியான கஷ்டங்களை சந்திக்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை.

kavin

இதில் ஹீரோ தன் குழந்தையை வைத்துக்கொண்டு ரயில்வே பிளாட் பார்ம், டாய்லட், உள்ளிட்ட பல இடங்களில் தங்குவது போன்ற காட்சிகள் மிகவும் உணர்ச்சிபூர்வமாக எடுக்கப்பட்டிருக்கும். இப்படி பலரையும் கவர்ந்த இந்த திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரை செய்யப்பட்டது.

இப்போது கவினின் இந்த பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்க்கும்போது இது ஸ்மித்தின் ஹாலிவுட் திரைப்படத்தின் கதை போல்தான் இப்படமும் எடுக்கப்பட்டிருக்குமோ என்று யோசிக்க வைக்கிற்து. தற்போது வெளியாகி இருக்கும் இப்பட போஸ்டருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள், இயக்குநர்கள் என அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

உங்கள் கருத்து

Your email address will not be published.

ட்ரெண்டிங் நியூஸ்

News TN Special

News TN Special