இளைய நிலா பொழிகிறதே மோகன் …! இளைய தளபதி விஜய்யுடன் இணைவாரா?

சினிமா  Published on: 23 ஏப் 2022, 1:45 pm Edited on: 23 ஏப் 2022, 1:45 pm

சில்வர் ஜூப்ளி நாயகன் மைக் மோகன், இளைய தளபதி விஜய் நடிக்கும் 66 –ல் இணைவாரா? என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.

பீஸ்ட் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, விஜய்யின் அடுத்த படம் துவங்கியுள்ளது.

பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பின் போதே விஜய் தனது 66வது படத்தை இயக்க வம்சி என்பவருக்கு வாய்ப்பு கொடுத்திருப்பது தெரியவந்தது. விஜய்யின் இப்படத்தை ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். தெலுங்கில் பல வெற்றிப்படங்களை தயாரித்துள்ள தில்ராஜூ தயாரிப்பில், தமன் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ‘66’ .

rashmika

 

இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிவடைந்ததை தொடர்ந்து விரைவில் அடுத்த கட்டப்படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இந்த படத்தில் விஜய்யின் தந்தையாக சரத்குமாரும், விஜய்யின் இரண்டு சகோதரர்களாக 90களில் பிரபலமாக இருந்த இரண்டு நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் விஜய்யின் சகோதரர்களில் ஒருவராக சில்வர் ஜூப்ளி ஸ்டார் மோகன் நடிக்க இருப்பதாக கடந்த இரண்டு நாட்களாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தளபதி விஜய்யுடன் முதல் முறையாக இணைவது மகிழ்ச்சி என்றும், இந்த படம் குறித்த மற்ற முக்கிய தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. உங்கள் அனைவரது வாழ்த்துக்களுடன் விரைவில் இப்படம் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also read: ஹாலிவுட் லுக்கில் கவின்; டாடா பட போஸ்டரை வெளியிட்ட இயக்குநர் பா.ரஞ்சித்!

மோகன், மகேந்திரன் இயக்கிய நெஞ்சத்தை கிள்ளாதே படத்தில் அறிமுகமாகி, 1980-களில் முன்னணி கதாநாயகனாக கொடி கட்டி பறந்தவர் மோகன். இவர் நடித்த கிளிஞ்சல்கள் 250 நாட்களுக்கு மேல் ஓடியது. பயணங்கள் முடிவதில்லை, உதய கீதம், விதி, கோபுரங்கள் சாய்வதில்லை, இளமை காலங்கள், நூறாவது நாள், உயிரே உனக்காக, மவுன ராகம் உள்பட பல வெற்றி படங்களில் நடித்து 80’s, 90’s – கிட்களின் நீங்காத நினைவில் இருப்பவர்.

mohan

மோகன் படங்களில் இடம்பெற்ற பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தன. இவரை மைக் மோகன் என்று அழைத்தனர். 15 வருடங்களுக்கு முன்பு சினிமாவை விட்டு விலகினார். புதிய படங்களில் நடிக்க வைக்க அழைப்புகள் வந்தும் மறுத்து வந்தார். தற்போது, இயக்குனர் விஜய் ஸ்ரீ சொன்ன ‘ஹரா’ படத்தின் கதை பிடித்திருந்ததால் அந்த படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், விஜய் நடிக்கும் 66-வது படத்தில் விஜய்யின் அண்ணன் கதாபாத்திரத்திற்கு கேட்டதாகவும், அதில் நடிக்க சம்மதித்தகாகவும் கோடம்பாக்கத்தில் தகவல் கிளம்பியது. இதுபற்றி மோகனின் வட்டாரத்தில் விசாரித்தால், அண்ணன் ரோல், அப்பா ரோல் எல்லாம் பண்ற ஐடியாவே அவருக்கு இல்லை என்று மறுக்கிறார்கள். இப்போதும் அவருக்கென தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். விஜய் படத்தில் அவர் இல்லை என்கிறார்கள்.

இதுகுறித்து மோகனிடம் கேட்டபோது, விஜய் படத்தில் நடிக்கவில்லை. ‘ஹரா’ படத்தில் நடித்து முடித்த பிறகே, அடுத்த படத்தில் நடிப்பது குறித்து யோசிப்பேன் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து கதாநாயகனாக மட்டுமே நடிக்க முடிவு செய்து இருப்பதாகவும் மோகன் தெரிவித்தார்.

உங்கள் கருத்து

Your email address will not be published.

ட்ரெண்டிங் நியூஸ்

News TN Special

News TN Special