பிரேமம் டைரக்டருக்கு ‘நோ’ சொன்ன விஜய் மகன்!

சினிமா  Published on: 12 ஏப் 2022, 6:27 pm Edited on: 17 ஏப் 2022, 4:55 pm

‘பிரேமம்’ இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன், நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய்யை தன்னுடைய படத்தில் நடிப்பதற்காக கேட்டுள்ளார். `

நடிகர், இயக்குநர், திரைப்பட தொகுப்பாளர், திரைப்பட ஆசிரியர் என பல கதாபாத்திரங்களாக திகழ்பவர் தான் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன்.

இவர் தமிழில் ஹிட்டான ‘நேரம்’ திரைப்படத்தை மலையாளம் மற்றும் தமிழ் என இரு மொழிகளில் இயக்கி திரைத்துறைக்கு இயக்குநராக அறிமுகமானவர்

மேலும், 2015- ஆம் ஆண்டு இவர் இயக்கிய மலையாள திரைப்படமான ‘பிரேமம்’ மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

‘பிரேமம்’ என்றாலே நிவின்பவுலி, சாய்பல்லவி, மடோனா செபாஸ்டியன், அனுபமா பரமேஸ்வரன் போன்றோர்களின் பெயர்கள் தான் நியாபகத்தில் வரும் அப்படிப்பட்ட ஒரு தாக்கத்தை இளைஞர் மத்தியில் ஏற்படுத்திய திரைப்படம் தான் ‘பிரேமம்’.

Sanjayvijay

வருடங்கள் பல ஆனாலும், இன்று வரையிலும், கல்லூரி மாணவர்களிடையே ஜார்ஜும், மலர் டீச்சரும் நீங்கா இடம் பெற்றுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல், அல்போன்ஸ் புத்திரன் இயக்குநராக மட்டுமல்லாமல் தான் இயக்கிய படத்தில் நடித்தும் உள்ளார்.

2012-ஆம் ஆண்டு நளன் குமாரசாமி இயக்கத்தில் ‘துரும்பிலும் இருப்பார்’ என்ற குறும்படத்தில் சாத்தானாகவும், 2015-ஆம் ஆண்டு ‘பிரேமம்’ படத்தில் செலினுக்கு நிச்சயிக்கப்பட்ட மணமகனாகவும், 2015- ஆம் ஆண்டு வெளியான ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ திரைப்படத்தில் நண்பராகவும் நடித்துள்ளார்.

இந்நிலையில், தற்போது நடிகர் விஜய் மகனான ஜேசன் சஞ்சய் வைத்து படம் தயாரிக்க விஜய்யை அணுகி உள்ளார்.

‘வேட்டைக்காரன்’ திரைப்படத்தில் நான் அடிச்சா தாங்கமாட்ட பாடலுக்கு தன் தந்தையுடன் சேர்ந்து நடனமாடிய ஜேசன் சஞ்சய், சென்னையில் சர்வதேச பள்ளியில் படித்துவிட்டு, தற்போது கனடாவில் இயக்குநர் ஆவதற்கான சினிமாத்துறை படிப்பை படித்து வருகிறார்.

Sanjayvijay

அதன்படி, அப்பா விஜய்யைப் போல் கேமராவின் முன் இல்லாமல், கேமராவின் பின்னால் இருப்பதையை அதிகம் விரும்புகிறவர் ஜேசன் சஞ்சய்.

அதுமட்டுமல்லாமல், அப்பாவை வைத்து படம் இயக்க வேண்டும் என்பது ஜேசன் சஞ்சய்யின் நீண்ட நாள் ஆசையாம்.

மேலும், தமிழ் சினிமாவில் விஜய் மகன் ஜேய்சன் சஞ்சய்யை வைத்து படமெடுக்க பல இயக்குநர்கள் கால் ஷீட் கேட்டு வர விஜய் இல்லை என்ற பதிலையே கொடுத்து வருகிறார்.

இதைத்தொடர்ந்து, நாளை ‘பீஸ்ட்’ திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், ‘பிரேமம்’ இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் சந்திப்பை குறித்து விஜய் கூறுகையில், “தன்னிடம் ஒரு கதை இருப்பதாக அல்போன்ஸ் புத்திரன் கூறினார். ஆனால், கதை கேட்ட பின்பு தான் தெரிந்தது அது எனக்கானது அல்ல என் மகன் ஜேய்சன் சஞ்சய் காணது என்று.

Also Read: வட்டி கட்ட முடியாது! கடன் வாங்கிய இலங்கை கைவிரிப்பு!

கதை நன்றாக இருந்தது எனக்கு பிடித்திருந்தது. என் மகன் ஜேய்சன் சஞ்சய் அந்த கதையை ஏற்று நடிப்பான் என்று நினைத்தேன். ஆனால், என் மகன் தற்போது எனக்கு நடிப்பதில் விருப்பமில்லை என்று கூறிவிட்டார்.

ஒரு தந்தையாக நான் என் மகன் முடிவில் தலையிட மாட்டேன். எப்போது என் மகனுக்கு கேமரா முன் தோன்ற விருப்பமுள்ளதோ அப்போது அவர் நடிக்கட்டும்” என்று விஜய் கூறியுள்ளார்.

உங்கள் கருத்து

Your email address will not be published.

ட்ரெண்டிங் நியூஸ்

News TN Special

News TN Special