உங்களுக்கு சிக்கன் பிடிக்குமா? எனக்கும் பிடிக்கும்! நம் அனைவருக்கும் பிடித்த சிக்கன் தரமானதா? கெட்டுபோகாததானு கண்டு பிடிப்பது எப்படி?

உடலும் உணவும்  Published on: 05 மார் 2022, 8:36 pm Edited on: 30 மார் 2022, 6:37 pm

அது என்ன மாயமோ! மந்திரமோ! தெரியல பொண்ணுல தொடங்கி போண்டா கோழி வர பளப்பளன்னு இருந்த தான் ரசிக்கிறோம்! சாப்டுறோம்! சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஓர் உணவு சிக்கன் என்றே சொல்லலாம்.

இதனை பொரித்தால் ஒரு ருசி, வறுத்தால் ஒரு ருசி, குழம்பு வைத்தால் ஒரு ருசி என எந்த வகை எடுத்தாலும் நாக்கில் எச்சில் ஊற்றெடுக்கும்.

chicken

கோழி நல்லது தானே என்று சொல்லலாம். நாட்டுக் கோழி நல்லது. ஆனால் சிட்டிகளில் நாட்டு கோழிகளுக்கு எங்கே போவது. அப்படியே போனாலும் விலை வாசி கொஞ்சம் நஞ்சமா என்ற கேள்விகள் தான் எழும்புகிறது. மலிவான விலை இறைச்சி என்றாலே பிராய்லர் கோழி தான்.

பிராய்லர் கோழி ஜெர்மெனியில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட ஒன்று. இதனை இந்தியாவில் அறிமுகப்படுத்திய காலங்களில் இதில் புரோட்டின் அதிகம் இருப்பதாகவும் உடல் வலிமைக்கு மிகவும் நல்லது என்றும் சிக்கன் கம்பெனிகளிலும், மருத்துவமனைகளிலும் சிக்கன் இறக்குமதியான காலங்களில் சொல்லப்பட்டது. 1990-களில் இதை பற்றி பேசினாலே அறிவியலையே குறை கூறுவதாய் பேசப்பட்டது. ஆனால் தற்போதோ மக்களிடையே பிராய்லர் கோழி பற்றிய விழிப்புணர்வு இருந்து வருவது என்னவோ சிறிது மகிழ்ச்சி அளிக்கிறது.

chicken

இந்த பிராய்லர் கோழியின் வளர்ச்சி மற்றும் அதனால் வரும் தீமைகள் என்னவோ யாருடைய கண்ணிற்கும் தெரிவதில்லை. முழு கோழிகள் மட்டுமே கண்ணிற்கு தெரிகின்றன. 6 மாதங்கள் வளர்ச்சி அடைய வேண்டிய கோழிகள் வெறும் 40 நாட்களில் வளர்ச்சி அடைகின்றன. இவ்வளவு வேகமான வளர்ச்சிக்கு சிக்கன் தயாரிப்பாளர்கள் 12 விதமான கெமிக்கல்களை உபயோகிக்கின்றனர். அதுமட்டுமில்லாமல், கோழிகளுக்கு நோய்த்தொற்று வராமல் தடுக்க ஆன்டி பயாடிக் மருந்துகள் செலுத்தப்படுகின்றன. இவ்வளவு வீரிய மருந்துகளை கோழிக்கு உபயோகிப்பதன் மூலம் ஆண்களின் விந்து அணு உற்பத்தி அழிகின்றது, பெண் குழந்தைகள் 10 வயதிலே பருவம் அடைகின்றனர். கோழியின் சதையில் உள்ள கெட்ட கொழுப்பினால் கல்லீரல் வீக்கம் அடைகிறது.

Also Read :ஹஹான்!…ஹாஷினி! க்யூட் லேடி ஜெனிலியாவின் ரீ என்ட்ரீக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!

சிக்கன் எல்லோருக்கும் மிகவும் பிடித்த உணவாக இருந்தாலும்  இந்த இறைச்சி மிக விரைவில் கெட்டுவிடும் என்பது உங்களுக்கு தெரியுமா?

கோழியை சமைப்பதற்கு முன், அதன் நிறத்தை கவனிக்கவும். பச்சையான கோழி இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை  நிறத்தில் கொழுப்புத் துண்டுகளுடன் இருந்தால், இறைச்சி புதியது என்று அர்த்தம். இருப்பினும், கோழி இறைச்சியின் நிறம் சாம்பல்/பச்சை நிறமாகவும், கொழுப்புத் துண்டுகள் பார்க்க மஞ்சள் நிறமாகவும் இருந்தால், பழமையான இறைச்சி சாப்பிடுவதற்கு ஏற்றது அல்ல என்று அர்த்தம்.

chicken

இறைச்சியின் அமைப்பை ஆராய்வது அது சாப்பிடக்கூடியதா என்று அறிய உதவும். பச்சைக் கோழியாக இருந்தால், மெலிதாகவோ அல்லது பிசுபிசுப்பாகவோ இருந்தால், இறைச்சி புதிதாக இல்லை என்று அர்த்தம், உடனடியாக குப்பைத் தொட்டியில் வீசி விட வேண்டும். புதிய கோழி இறைச்சி மென்மையாகவும், பளபளப்பாகவும், வழுக்கும் தன்மையுடனும் இருக்க வேண்டும். சமைத்த கோழியைப் பொறுத்தவரை, இறைச்சி எப்போதும் உறுதியாகவும் அடர்த்தியாகவும் இருக்கவேண்டும்.

கெட்டுப்போனதற்கான முதல் உறுதியான அறிகுறிகளில் ஒன்று அதன் துர்நாற்றம். புதிய சிக்கன் மிகவும் லேசான வாசனையைக் கொண்டு இருக்கும். இதன் துர்நாற்றம் அழுகிய முட்டைகளின் துர்நாற்றம் போன்று இருக்கும். நீங்கள் கடையில் இருந்து புதிய கோழி இறைச்சியை வாங்கும்போது, அது காலாவதி தேதியுடன் வருகிறதா என்பதை சரிபார்ப்பது நல்லது.

chicken

நிறமாற்றம் தவிர, கோழி கெட்டுப்போகும் போது, அதன் மேற்பரப்பில் அச்சு உருவாவதையும் நீங்கள் கவனிப்பீர்கள். சமைக்கப்படாத இறைச்சிகளில் அச்சு உருவாகாததால், இது பெரும்பாலும் சமைத்த கோழிக்காக மட்டுமே கண்டறியப்படுகிறது. உணவை வீணாக்காமல் இருக்க அச்சுகளை அகற்றுவது மற்றும் பாதிக்கப்பட்ட பகுதியை நீக்குவது பற்றி நீங்கள் நினைத்தால், அதை மறந்துவிடுங்கள். உங்கள் கண்களுக்குத் தெரியாத இறைச்சியில் அச்சு உருவாகக்கூடும். மேலும், பாக்டீரியா அச்சு முழுவதும் இருப்பதால், அதை உட்கொள்வது ஆபத்தானது மேலும் உணவு விஷத்தன்மை வாய்ந்ததாக இருக்கும்.

எப்பொழுது உணவு உற்பத்தியாளர்கள் தன்னுடைய உற்பத்தியை வியாபார நோக்கில் பார்க்க ஆரம்பித்தார்களோ, நாமும் ருசிகளுக்காக எதை வேண்டுமானாலும் உண்ண ஆரம்பித்தோமோ, அப்பொழுது இருந்தே நமக்கும் நமது உணவு ஆரோக்கியத்திற்கும் இடையே விரிசல் ஏற்பட ஆரம்பித்து விட்டது.

உங்கள் கருத்து

Your email address will not be published.

ட்ரெண்டிங் நியூஸ்

News TN Special

News TN Special