திடீரென்று ஏற்படும் விக்கலால் பல சிக்கல்கள் வருகின்றதா…?

உடலும் உணவும்  Published on: 16 மார் 2022, 11:41 am Edited on: 29 மார் 2022, 5:29 pm

விக்கல் எப்பொழுது வரும் என்றே தெரியாது. விறுவிறுப்பாக வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது வரும் அல்லது சும்மா உட்கார்ந்திருக்கும் போது திடீரென்று விக்கல் ஏற்படும்.

அப்பொழுது, நமது பாட்டி யாராவது பக்கத்தில் இருந்தால் உன்னை யாரோ நினைக்கிறாங்கன்னு அல்லது எதையோ யாருக்கும் தெரியாம சாப்பிட்டு வந்துருக்கன்னு சொல்லி கேலி செய்வார்கள். நமது தோழர்களாக இருந்தால் கேட்கவே வேண்டாம். மேலும், சிலர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது விக்கல் ஏற்படும் அது அவர்களது உயிருக்கே ஆபத்தாகவும் முடியும்.

இப்படி பல கருத்துகளை கொண்டு உலவும் விக்கல் எதனால் வருகிறது? அதனால் வரும் பாதிப்பு தான் என்ன?

பொதுவாக நாம் சுவாசிக்கும் போது மார்பு தசைகள் விரிகின்றன. அதனால், மார்புக்கும், வயிற்றுக்கும் இடையே நுரையீரலை ஒட்டியுள்ள சதைகளும் அப்பொழுது விரிகிறது.

அப்பொழுது, தொண்டையில் உள்ள குரல் நாளங்கள் திறக்கின்றன. அப்போது நுரையீரலுக்குள் காற்றின் அழுத்தமானது குறைகிறது. மேலும், நுரையீரலுக்குள் காற்று செல்ல அதிக இடம் கிடைக்கிறது. இதனால் நாம் சுவாசிக்கும் காற்று, திறந்த குரல் நாளங்கள் வழியாகத் தங்கு தடையின்றி நுரையீரல்களுக்குள் நுழைந்துவிடுகிறது. இது தான் நாம் இயல்பாக சுவாசிக்கும் முறை.

HICCUPS

சில நேரங்களில், மார்புப் பகுதியில் உள்ள நரம்புகள் தசைப்பகுதிகளை எரிச்சலூட்டினால், அது மூளைக் கட்டுப்பாட்டை மீறி, தன்னிச்சையாகத் திடீரென்று சுருங்க ஆரம்பித்துவிடும். அப்போது குரல் நாளங்கள் சரியாகத் திறப்பதில்லை.

அந்த நேரங்களில் நாம் சுவாசிக்கும் காற்று குரல் நாளங்களின் குறுகிய இடைவெளி வழியாகத்தான் நுரையீரல்களுக்குள் சென்று திரும்ப வேண்டும். அப்போது புல்லாங்குழலில் காற்று தடைபடும்போது இசையொலி உண்டாவதைப் போல, தொண்டையில் ‘விக்… விக்…’என்று ஒருவித ஒலியை எழுப்புகிறது. இதுதான் ‘விக்கல்’.

பெரும்பாலும் விக்கல் வர காரணமாக இருப்பது நேரமாகிவிட்டது என்று உணவை வேகவேகமாக உண்பது, மிகவும் சூடானா உணவுகளை உண்பது மற்றும் தேவையான அளவு தண்ணீர் அருந்தாதது போன்ற காரணங்களால் ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல், வலிநிவாரணி மாத்திரைகள், ஸ்டீராய்டு மாத்திரைகளைச் சாப்பிடுவதாலும் விக்கல் வரும்.

பொதுவாகவே விக்கல் என்பது ஒரு சில மணி நேரங்களில் நின்று விடுவதாக தான் நாம் நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால், விக்கல் இரண்டு நாட்களுக்கு மேல் தொடர்ந்தால் அது நோய் உள்ளதற்கான அறிகுறியாம்.

Also Read: தமிழ்நாட்டை 60 மாவட்டங்களாக பிரிக்கணும் – பா.ம.க. நிழல் நிதிநிலை அறிக்கை!

எடுத்துக்காட்டாக, அல்சர் இருக்கும்போது, சிறுநீரகம் பழுதாகி ரத்தத்தில் யூரியா அளவு அதிகரிக்கும்போது விக்கல் வரும். தசைப்பகுதியில் நோய்த்தொற்று, கல்லீரல் கோளாறு, நுரையீரல் நோய்த்தொற்று, குடல் அடைப்பு, மூளைக் காய்ச்சல், கணைய அழற்ஜி, நரம்புவாதம் போன்றவற்றாலும் விக்கல் வரும்.

இப்படி பல பிரச்சினைகளை கொண்ட விக்கல்கள் தண்ணீர் குடித்தால் நின்று விடும் என்று கூறுவார்கள். ஆனால், அந்த தண்ணீரை எப்படி குடிக்க வேண்டும் என்று இதுவரை யாரும் கூறியதில்லை.

தண்ணீரை சும்மா குடித்தால் விக்கல் நிற்காது தொடர்ந்து பத்து முறை மடமடவென குடிக்கவேண்டும். அப்படி வேகமாக குடிப்பதால் விக்கல் நிற்கும்.

HICCUPS

தொடர் விக்கல் வரும் நேரத்தில் ஸ்ட்ராவால் தண்ணீரை உறிஞ்சிக்கொண்டு காதுகளை அடைத்துக்கொண்டு காதுகளுக்கு பின்புறம் அழுத்தம் கொடுக்க வேண்டும். இதனால் சீக்கிரத்தில் விக்கல் நிற்கும்.

நாக்கை நன்றாக வெளியே நீட்டி அப்படியே சில நொடிகள் வைக்கவேண்டும். இவ்வாறு செய்தால் விக்கல் எளிதில் நின்று விடும்.

விக்கல் வரும்போது இரண்டு காதுகளையும் குறைந்தது 30 நொடிகள் அடைத்து வைக்கவும். அடைத்துக்கொண்டிருக்கும்போதே காதுகளுக்கு பின்புறம் இருக்கும் மென்மையான காது எலும்புகளை மெதுவாக அழுத்தவும். இதனால் விக்கல் நின்றுவிடும்.

விக்கலை நிறுத்த மற்றொரு சிறந்த முறை சிறிது எலுமிச்சம் பழத்தை எடுத்து அதை வாயில் வைத்து நன்றாக உறிஞ்சி சாப்பிட வேண்டும். இப்படி செய்வதால் குறைந்தது 98 சதவீதம் பேருக்கு விக்கல் நின்றுவிடும்.

பெரும்பாலும் எல்லாராலும் சொல்லப்படும் ஒரு டிப்ஸ் என்னவென்றால் ஒரு ஸ்பூன் சர்க்கரையை அப்படியே விழுங்குவதன்மூலம் விக்கல் நின்றுவிடும். ஆனால் இது உணவுக்குழாயில் சற்று எரிச்சலை ஏற்படுத்துவதால் ஒரு ஸ்பூன் பீனட் பட்டரை வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்குவதன் மூலம் விக்கல் அப்படியே நிற்கும். இந்த செயல்முறைகளினால் விக்கலால் ஏற்படும் சிக்கலை நிறுத்திவிடலாம்.

உங்கள் கருத்து

Your email address will not be published.

ட்ரெண்டிங் நியூஸ்

News TN Special

News TN Special