டீ குடிப்பவர்களுக்கு பசியே எடுக்காது… ஏன் தெரியுமா?

உடலும் உணவும்  Published on: 05 டிச 2021, 1:56 pm Edited on: 08 டிச 2021, 3:00 pm

தமிழ்நாட்டுல இருக்குற முக்கால்வாசி பேருக்கு ரொம்ப பிடிச்ச ஒரு டிரிங்க்னா அது டீ தான். தேசிய பானமா அறிவிக்க கூடிய எல்லா தகுதியும் டீக்கு இருக்கு. நிறம், சுவை, மணம் நிறைந்த சூப்பரான ஒரு டீயை எப்போ குடிச்சாலும் உடனே ஆற்றலும், உற்சாகமும் பீரிட்டு வரும். மூணு வேளை சோறு சாப்பிடுறாங்களோ இல்லையோ, ஒரு நாளைக்கு 10, 15 டீ குடிச்சிட்டு சுத்துறவங்க கூட இருக்காங்க.

பசிக்கல அதனால டீ குடிக்கிறேன்னு நிறையபேர் சொல்லி கேட்டு இருப்பீங்க. ஏன். நாம கூட சொல்லியிருப்போம். உங்களுக்கு தெரியுமா? இப்படிப்பட்டவங்களுக்கு பசிக்காம இருக்க காரணமே டீ தான்.

“வெறும் வயிற்றில் டீ குடிப்பது, அடிக்கடி டீ குடிப்பது” அப்படின்னு நிறைய காரணங்கள் இருக்கு. அந்த காரணங்களை தான் பார்க்க போறோம்.

முதல் காரணம்: வெறும் டீ குடிப்பது

வெறும் டீ குடிப்பதால் உடலில் அமிலத்தன்மை அதிகரிக்கும். இதனால் பசி எடுக்காது. பசித்தாலும் வயிறார சாப்பிட முடியாது. எனவே, வெறும் டீயை குடிப்பதை நிறுத்திவிட்டு டீயுடன் பிஸ்கட், ஸ்நாக்ஸ் சாப்பிடலாம்.

இரண்டாவது காரணம்: அடிக்கடி டீ குடிப்பது

காலை எழுந்ததில் இருந்து எண்ணிக்கையே இல்லாமல் அதிகமாக டீ குடிப்பதால் வளர்சிதை மாற்றத்தை குறைத்து இயற்கையான பசியைக் கட்டுப்படுத்தும். எனவே, அதிகமாக டீ குடிப்பதை நிறுத்தி அளவோடு குடிக்கலாம்.

மூன்றாவது காரணம்: சூடாக டீ குடிப்பது

மிகவும் சூடாக டீ குடிப்பதால் வாய், தொண்டை, உணவுக் குழாய் மற்றும் வயிறு எரிச்சலடையும். இதனால் வயிறு மிகவும் பாதிக்கப்பட்டு பசியே எடுக்காது.

நான்காவது காரணம்: உணவிற்கு முன் டீ குடிப்பது

உணவிற்கு முன் டீ குடிப்பதால் உணவை சுவையற்றதாக மாற்றி உங்களுக்கு சாப்பிடும் எண்ணத்தையே போக்கிவிடும். அதுமட்டுமின்றி, உணவில் இருக்கும் ஊட்டச்சத்துக்களை உடல் ஏற்காத அளவுக்கு டீ மாற்றிவிடும். எனவே, உணவுக்கு முன் டீ குடிப்பதை தவிர்ப்பது நல்லது.

ஐந்தாவது காரணம்: ஸ்ட்ராங்க் டீ குடிப்பது

சர்க்கரை தூக்கலா, ஸ்ட்ராங்கா டீ குடிப்பதால் கூட பசி எடுக்காது. ஸ்ட்ராங்க் டீ உண்ட உணவை கூட செரிக்கவிடாமல் செய்து அடுத்து உணவே எடுக்க முடியாதபடி மாற்றிவிடும். எனவே, லைட்டான டீ குடிக்கலாம்.

இந்த ஐந்து காரணங்கள் பசியை தடுக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொண்டோம். இனி டீயை இந்த மாதிரி குடிக்காமல் அளவோடு ரசித்து, ருசித்து குடித்து உடலுக்கு ஊட்டச்சத்து அளிக்கும் உணவையும் எடுப்போம்.

உங்கள் கருத்து

Your email address will not be published.

ட்ரெண்டிங் நியூஸ்

News TN Special

News TN Special