முட்டை இஸ் த சீக்ரெட் ஆஃப் அவர் எனர்ஜி!

உடலும் உணவும்  Published on: 24 மார் 2022, 2:55 pm Edited on: 31 மார் 2022, 2:36 pm

தற்போது அரக்கப்பரக்க கிளம்பி அலுவலகம், பள்ளி சென்று கொண்டிருக்கும் நிலையில், முட்டை ஒன்றே முழு எனர்ஜி-யாக இருந்து வருகிறது.

கோழி முதலில் வந்ததா…? முட்டை முதலில் வந்ததா…? என்ற கேள்விக்கு பதில் புதிராகவே இருந்து வருகிறது. ஏதோ முதலில் வந்துட்டு போகட்டும் நமக்கென்ன! நமக்கு முட்டை தான் முக்கியம்!

ஆரோக்கியத்தை தேடிச்செல்லும் இந்த பயணத்தை முட்டையில் இருந்து ஆரம்பிப்போம். உயிர்களின் உருவாக்கம் அனைத்தும் முட்டையின் கருவிலிருந்து தான் உருவாகிறது. எண்களில் முதல் வருவது ஒன்றுதான் என்றாலும், முட்டையில் இருந்து தான் எண்கள் ஆரம்பிக்கின்றன. எனவே, நாமும் இந்த கட்டுரையை முட்டையில் இருந்து ஆரம்பிப்போம்.

ஆம்ப்லேட், ஆஃப் ஆயில், பொறித்த முட்டை, அவித்த முட்டை என பல விதமாக முட்டையை சாப்பிட்டு இருப்போம்! முட்டை மட்டும் எந்த விதத்தில் சாப்பிட்டாலும் ஆரோக்கியம் தான். முட்டை ஆரோக்கியம் என்று அனைவருக்கும் தெரிந்தாலும், தினமும் முட்டை பற்றி புதிது புதிதாகத் தகவல்கள் வந்து கொண்டேதான் இருக்கின்றன.

Egg

முட்டை சாப்பிட்டால் குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் நல்லது. அதே சமயம், வாரத்துக்கு மூன்று முட்டைகளுக்கு மேல் எடுத்துக்கொண்டால் ஹார்ட் அட்டாக் வரும்; முட்டையின் மஞ்சள் கரு சாப்பிட்டால் கருவிலிருக்கும் குழந்தைக்கு அலர்ஜி வரும் என்று முட்டை பற்றிய தவறான வந்தந்திகள் பரவிய வண்ணம் தான் உள்ளன.

முட்டைகள் உணவாக மாறிய வரலாறு பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிவிட்டன. கோழிமுட்டை மட்டுமின்றி, வாத்து முட்டை, காடை முட்டை, ஏன் நெருப்புக்கோழி, வான்கோழி முட்டைகளையும் சாப்பிட ஆரம்பித்து விட்டோம்.

ஐரோப்பிய நாடுகளில் ஆரம்பக்காலங்களில் காடை முட்டைதான் முதன்மையாகப் பயன்பாட்டில் இருந்திருக்கிறது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில், குறிப்பாக இந்திய துணைக் கண்டத்தில் காட்டுப்பகுதிகளில் உலாவிய கோழிகளை வீடுகளுக்கு கொண்டு வந்து வளர்த்து பழகினார்கள். ஆரம்பத்தில் கோழிகளே உணவாக இருந்துள்ளன. காலப்போக்கில் முட்டைகளும் உணவாகிவிட்டன.

Egg

Also read: ஓ திவ்யா…! ஓ திவ்யா…! மாலத்தீவில் நீச்சலுடையில் நடமாடும் பேச்சிலர் திவ்யா!

1500 ஆண்டுகளுக்கு முன்புதான் முட்டைக்காக கோழி வளர்க்கும் நுட்பம் பரவியிருக்கிறது. இந்த வரிசையில் ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் தான் முட்டை உற்பத்தி பட்டியலில் முதலில் உள்ளன. உலகத்தில் சராசரியாக ஒரு நபர்  ஆண்டுக்கு 16௦ முட்டைகளை  சாப்பிடுகிறார் என்று புள்ளி விவரங்கள் சொல்லுகின்றன. இன்று முட்டை கிடைக்காத நாடே இல்லை என்று சொல்லும் அளவிற்கு முட்டை ஒரு பொது உணவாக இருந்து வருகிறது.

முட்டை ஒரு முழு உணவு

உலகில் எத்தனையோ உணவுகள் இருந்தாலும் முட்டைக்கென்று ஒரு தனிச்சிறப்பு இருக்கிறது. காய்கறிகள், பழங்கள், தானியங்கள், இறைச்சிகள் போன்றவை முழுமையான உணவு இல்லை. முட்டை என்ற ஒற்றைச் சொல்லில் ஓர் உயிர் வெளிவரும் அளவுக்கு, தேவையான அனைத்துச் சத்துக்களையும் தன்னுள்ளே அடக்கி வைத்துள்ளது. வெளியிலிருந்து வேறெந்த சத்துக்களையும் பெறாமல் தனக்குள்ளேயே நிறைவான சத்துக்களை பொதித்து வைத்திருப்பதால் இதனை முழு உணவு என்கின்றோம்.

பொதுவாக சத்துக்களை இரண்டு வகையாகப் பிரிப்போம். மேக்ரோ நியூட்ரியன்ட்ஸ், மைக்ரோ நியூட்ரியன்ட்ஸ்.

Egg

மேக்ரோ நியூட்ரியன்ட்ஸ்:

மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து இவை மூன்றும் மேக்ரோ நியூட்ரியன்ட்ஸ். இது நேரடியாக நமக்கு எரிசக்தி தரக்கூடியது. இதற்கு கிராம் கணக்கில் சத்து தேவைப்படும்.

மைக்ரோ நியூட்ரியன்ட்ஸ்:

மைக்ரோ நியூட்ரியன்ட்ஸ் என்பவை நுண்சத்துக்கள். மிகவும் குறைந்த அளவு தேவைப்படக்கூடியவை. ஆனால், நம் உடல் இயக்கத்திற்கு மிகவும் தேவையான சத்துக்கள். வைட்டமின், மினரல்கள், இரும்பு, கால்சியம் போன்றவை.

ஒரு முட்டை, சுமார் 67 கலோரி எரிசக்தியை நமக்குத் தருகிறது. இதில், 6.5 கிராம் புரதங்கள், 5 கிராம் கொழுப்புச்சத்து உள்ளது. மாவுச்சத்து மிகவும் குறைவு ௦.6 கிராம். முட்டையின் வெள்ளைக்கரு முழுவதும் புரதம், மஞ்சள் கரு முழுவதும் கொழுப்பு என்று நினைத்துக்கொண்டு உள்ளோம். வெள்ளைக்கரு, மஞ்சள்கரு இரண்டிலுமே கிட்டதட்ட சரிக்கு சரியான அளவு புரதம் இருக்கிறது. மஞ்சள் கருவையும் சேர்த்து எடுத்துக்கொண்டால்தான் அதிலிருக்கிற 6.5 கிராம் புரதம் முழுமையாகக் கிடைக்கும்.

நீங்கள் சத்தான உணவு என்று எதனை எடுத்துக்கொண்டாலும் அதன் பயலாஜிக்கல் வேல்யூ 60-70 சதவிகிதம் தான். ஆனால், முட்டையை சைவம், அசைவம் என்று எந்த உணவுடன் ஒப்பிட்டாலும் இதன் பயலாஜிக்கல் வேல்யூ 95 தான்.

பல உணவுகளில் புரதம் இருந்தாலும், முட்டையின் புரதத்திற்கு தனி எனர்ஜி தான்.

உங்கள் கருத்து

Your email address will not be published.

ட்ரெண்டிங் நியூஸ்

News TN Special

News TN Special