தலைவலி ஒரு தனி வலி…! அதை குணப்படுத்த என்ன தான் வழி?

உடலும் உணவும்  Published on: 08 மார் 2022, 8:36 pm Edited on: 31 மார் 2022, 1:07 pm

நம் வீடுகளில் எல்லாம் வயிறு வலி என்றாலே “எப்போதும் போன பாத்துட்டு இருந்தா அப்படி தான் வலிக்கும்” என்ற அம்மாவின் குரல் எட்டிப்பார்க்கும். வயிற்று வலிக்கே அந்த நிலைமை. தலை வலிக்கு சொல்லவா வேண்டும்!

 தற்போது சிறியவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் ஒரு வலி என்றால் அது தலைவலி தான். முதுகு வலி, கால் வலியைக் கூட சரி செய்து விடலாம். ஆனால், இந்த தலை வலியை மட்டும் சரி செய்யவே முடியாது.

headache

நமக்கு வரும் இந்த தலை வலியை என்ன தான் செய்வது என்று பல முறை யோசித்து இருப்போம். சில நேரங்களில் தலையை தனியே கழற்றி வைத்து விடலாம் என்ற வேதனையை இந்த தலை வலி கொடுத்து இருக்கும். தற்போது இருக்கும் வேதனை தீர்ந்தால் போதும் என்று பக்க விளைவு ஏற்படும் என்று தெரிந்தும் சிலர் மாத்திரைகளை உபயோகிப்பதும் உண்டு. முதலில் நமக்கு ஏற்பட்ட தலை வலியின் வகைகளை அறிந்து அதற்கு ஏற்ற சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

தலை வலியை சரி செய்ய இயற்கை மருத்துவத்தை முதலில் மேற்கொள்ளலாம். அதில் பயனில்லை என்றால் மருத்துவரை அணுகலாம்.

முதலில் தலை வலி ஏற்படாமல் இருக்க என்ன தான் வழி என்று பார்க்கலாம்!

பின்பு தலை வலியை தனியாக கவனித்துக் கொள்ளலாம்.

headache

 கம்ப்யூட்டர் காலம் ஆனதால் எல்லா வேலைகளும் கம்ப்யூட்டரில் தான்.  நிறைய நேரம் கம்ப்யூட்டர் உபயோகிப்பதினாலும், வேலையில் உள்ள அழுத்தம், வீட்டில் இருக்கும் பிரச்சினைகள், நிறைய நேரம் மொபைல் உபயோகிப்பதனாலும், தீவிர உடற்பயிற்சியை மேற்கொள்வதினாலும், இந்த தலை வலி ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. ஆனால், தலைவலி அனைவருக்கும் ஒரே மாதிரி இருக்காது.

இது மாதிரியான தலைவலி எல்லாம் வராமல் தடுக்க வேண்டுமென்றால், அதிகாலையில் எழுந்து மெடிடேட் செய்வது, முடிந்த அளவு மன அழுத்தத்தில் ஈடுபடாமல் இருப்பது. நாலு பேரிடம் நன்றாக சிரித்து பழகுவது. நல்ல சத்துள்ள உணவை எடுத்துக்கொள்வது இது போன்ற நிகழ்வுகளில் ஈடுபட்டால் தலை வலி வருவதை முடிந்த அளவு குறைக்கலாம்.

Also read: உங்களுக்கு சிக்கன் பிடிக்குமா? எனக்கும் பிடிக்கும்! நம் அனைவருக்கும் பிடித்த சிக்கன் தரமானதா? கெட்டுபோகாததானு கண்டு பிடிப்பது எப்படி?

headache

நோய் நீக்கும் நொச்சி:

 கிராமங்களில் நொச்சி இலை என்று ஒன்று கிடைக்கும். அந்த இலையை தலையணையில் வைத்து நன்கு ஓய்வு எடுத்தாலே போதும், தலையில் கோர்த்து இருக்கும் நீர் இறங்கி விடும். ஓய்வு முடிந்த பின் நல்ல ஒரு புத்துணர்ச்சியை உணர முடியும். அதே இலையை தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து ஆவி பிடித்து வந்தால், காய்ச்சல், மார்புச்சளி போன்ற தொல்லை தரும் நோய்களில் இருந்தும் விடுதலைக் கிடைக்கும். இந்த இலையைத் தான் அந்த காலங்களில் பாராசிடமால்-ஆக எனது பாட்டி பயன்படுத்தி இருக்கிறார். இன்னும் சில இயற்கையான முறையில் வலியை குறைக்கக் கூடிய மருந்துகள் உள்ளன.

headache

இஞ்சி:

கொதிக்க வைத்த நீரில் இஞ்சியை நசுக்கி 10 நிமிடம் நன்றாக கொதிக்க வைத்துப் பின்னர் அதனை இறக்கி எலுமிச்சை சாறு சில துளிகள் பிழிந்து, அதனை வெதுவெதுப்பாக பருகினால் வலி சட்டென குறையும்.

headache

உருளைக் கிழங்கு:

உருளைக் கிழங்கை துண்டாக்கி, அதனை அரைத்து தலையில் பற்று போட்டால், சில நிமிடங்களில் தலை வலி மறைந்து விடும்.

சுக்கு:

சுக்கு ஒரு துண்டை எடுத்து நீர் விட்டு அரைத்து தலையில் பற்று போட்டால் தலைவலி குணமாகிவிடும்.

headache

நீர்:

சில சமயங்களில்  உடலில் தேவையான அளவு நீரில்லாதபோது சூடேறி தலைவலி ஏற்பட வாய்ப்புக்கள் உண்டு. இதற்கு இரண்டு டம்ளர் நீர் குடித்து பாருங்கள்.

headache

முட்டைக் கோஸ்:

முட்டைக் கோஸ் இலையை தண்ணீர் சேர்க்காமல்  அரைத்து  அதன் சாற்றினை நெற்றியில்  பற்று போட்டால் வலி குறையும்.

பால் கலக்காத வரகாபியில் சில துளி எலுமிச்சை சாறு கலந்து குடிக்க வலி தீரும்.

நல்ல ஓய்வு, நல்ல தூக்கம், நல்ல சத்தான உணவு, நல்ல மனநிலை, நல்ல உடற்பயிற்சி, போன்றவற்றை மேற்கொண்டாலே தலை வலியில் இருந்து விடுதலை பெறலாம். ‘ம்ம்க்கும்’ அது எங்க நம்ம கிட்ட  இருக்கு!…போவியா என்று சொல்லும் உங்களின் மனநிலையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இதை ஒரு முறை கடைபிடித்துத் தான் பாருங்களேன்!.

உங்கள் கருத்து

Your email address will not be published.

ட்ரெண்டிங் நியூஸ்

News TN Special

News TN Special