நம் சமையலறையில்… தினசரி பிரச்சனைக்கு தீர்வு இருக்கு…

உடலும் உணவும்  Published on: 26 ஜன 2022, 9:00 am Edited on: 27 ஜன 2022, 10:06 am

நம் அனைவரது வீட்டில் சாதாரணமாக கிடைக்கும் ஒரு பொருள் நம் உடல் மற்றும் மன ரீதியான பிரச்சனைகளுக்கு தீர்வு தரக் கூடிய ஆற்றல் கொண்டுள்ளது. வாங்க விரிவாக பார்க்கலாம்.

இந்திய சமையலில் இடம்பெற்றுள்ள மிக முக்கியமான மசாலா உணவுப் பொருள் என்றால் அது கிராம்பு தான். இதில், ஏராளமான ஆன்டி ஆக்ஸிடன்கள் உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துகள் இருக்கு. இதனால், நாம் அன்றாட நாட்களில் அனுபவிக்கும் பிரச்சனைகளை எளிதில் சரிசெய்ய முடியும்.

அதற்காக கிராம்பை அப்படியே சாப்பிட வேண்டியதில்லை. கிராம்பு தண்ணீரை குடித்தால் மட்டுமே போதும். கொதிக்கும் தண்ணீரில் கிராம்பை போட்டு காய்ச்சி வடிகட்டி எடுத்துக் கொண்டால் கிராம்பு தண்ணீர் ரெடி.

இதனால், உடம்பில் இருக்கும் கெட்ட பாக்டீரியாக்கள் அழியும். கல்லீரலின் ஆரோக்கியம் மேம்படும். இரத்தத்துல சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். எலும்பு ஸ்டாராங்க் ஆகும். வயிற்றுப் புண் ஆறும்.

 clove water

இந்த நன்மைகள் கிடைக்க கிராம்பில் இருக்கும், கார்போஹைட்ரேட், நார்ச்சத்துக்கள், மாங்கனீஸ், விட்டமின் ஈ, கே போன்ற ஊட்டச்சத்துகள் தான் காரணம்.

முன்பு சொன்னதுபோல கிராம்பில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்கள் உடலில் செல்கள் ஆக்ஸினேற்ற அழுத்தத்தால் அழிவதைத் தடுத்து, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

கிராம்பில் மாங்கனீஸ் இருப்பதால் மூளை மற்றும் எலும்பு ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளும்.

கிராம்பில் ஆன்டி-செப்டிக், ஆன்டி-வைரல் மற்றும் ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள் அதிகமாக இருப்பதால் அடிக்கடி ஏற்படும் சலதோஷம், இருமல், தலைவலி, செரிமான பிரச்சனை, வைரஸ் காய்ச்சல் போன்ற நேரங்களில் இந்த கிராம்பு தண்னீரை குடிப்பது நல்ல தீர்வு தரும்.

ALSO READ: டீ குடிப்பவர்களுக்கு பசியே எடுக்காதுஏன் தெரியுமா?

ஈறுகளில் வீக்கம், சொத்தை பல் இருப்பவர்கள், பலவீனமான பற்களை கொண்டவர்கள் கிராம்பு தண்ணீரில் வாய்க் கொப்பளித்தாலும், அல்லது தினமும் குடித்து வந்தாலும் பல் வலுவாகும். சொத்தைப் பல் குணமாகும்.

கிராம்பு தண்ணீரை இளம்சூடாக தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் உடல் எடை குறைவதாகவும் சொல்கிறார்கள்.

சைனஸ் போன்ற சுவாசப் பிரச்சினைகள் இருப்பவர்களும் கிராம்பு தண்ணீரை குடிப்பதால், அதிலுள்ள யூஜெனால் சளியை அகற்றி சீரான சுவாசத்தை தர உதவுகிறது.

 clove water

கிராம்பு தண்ணீரால் உடலில் இருக்கும் நச்சுகள் வெளியேறி சருமத்தையும், மேனியையும் ஆரோக்கியமாக வைக்க உதவும்.

குளிர்ச்சியான கிராம்பு தண்ணீரை குடித்தால் நாள்பட்ட மூட்டுவலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும். கால் வீக்கமும் குறையும்.

கிராம்பு தண்ணீரை குடிப்பதால் மன அழுத்தம் குறைகிறது என்றும் ஆய்வுகள் சொல்கின்றன. ஏனென்றால். கிராம்பு தண்ணீரை குடிக்கும்போது எண்டார்பின் என்ற ஹார்மோன் சுரப்பதால் மகிழ்ச்சியான உணர்வு ஏற்படுமாம்.

இப்படி நம் அன்றாட வாழ்வில் நாம் அனுபவிக்கும் சின்ன சின்ன உடலியல் பிரச்சனைகளில் இருந்தும், பெரிய பெரிய மன ரீதியான பிரச்சனைகளில் இருந்தும் விடுபட அதிக செலவுகள் இல்லாமல் வீட்டில் அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் மசாலா பொருளான கிராம்பை எடுத்து ஒரு முறை பயன்படுத்தி அதன் நன்மையை தாராளமாக அடையலாம் தானே!

உங்கள் கருத்து

Your email address will not be published.

ட்ரெண்டிங் நியூஸ்

News TN Special

News TN Special