அசைவத்துடன் தயிர் சாப்பிடக் கூடாதா? என்னப்பா சொல்றிங்க…!

உடலும் உணவும்  Published on: 10 மார் 2022, 3:59 pm Edited on: 29 மார் 2022, 4:38 pm

அசைவம் என்று சொன்னால் எல்லாருக்கும் நாக்கில் எச்சில் தான் ஊறும். தினமும் சாப்பாடுடன் ஒரு அசைவமாவது இருக்க வேண்டும் என்று சிலர் நினைக்கையில், தினமும் அசைவமே சாப்பாடாக இருக்க வேண்டும் என்று எண்ணுகின்ற சாப்பாட்டு ராமன்கள் பலர் இங்குண்டு. இப்படி உணவை ருசித்து,,, ருசித்து சாப்பிடும் மக்கள் மத்தியில் ஒரு கேள்வி எழுந்துள்ளது. என்ன அசைவத்துக்கூட தயிர் சாப்பிடக் கூடாதா?

ஆமாங்க, பல காலமாக நம்பப்பட்டு வருகிற ஒரு விஷயம் தான் இந்த அசைவ உணவுடன் தயிர் சாப்பிடக் கூடாது என்பது. முக்கியமாக மீன் சாப்பிட்டால் அறவே தயிரை தவிர்த்து விட வேண்டும் என்று கூறுவார்கள்.

ஒரு பவுல் முழுவதும் நல்ல கடஞ்சி எடுத்த தயிர் சாதத்துடன், நல்ல சுட சுட மீனை வறுத்து கொடுத்தால் மனம் என்ன வேண்டாம் என்றா சொல்லும்?

அதற்காக, உடலுக்கு ஆபத்தான பொருள்களையா சாப்பிட முடியும்? அதுவும் உண்மை தான். உடலுக்கு தீங்கான உணவுகளை சாப்பிட வேண்டாம். ஆனால், உடலுக்கு தீங்கு விளைக்கும் என்று பரப்பப்பட்ட செய்திகளை நம்ப வேண்டாமே.

FISH

சரி மீன் சாப்பிட்டு விட்டு ஏன் தயிர் சாப்பிடக் கூடாது?

உடம்பில் வெண்புள்ளி பிரச்சினைகள் ஏற்படும்.

வெண்புள்ளி என்பது நமது உடலில் உள்ள மெலனின் சத்து குறைவதனால் மட்டுமே ஏற்படுகிறதே தவிர, அசைவத்துடன் தயிர் சாப்பிடுவதால் அல்ல.

அடுத்து, தயிர் சைவம் கோமாதாவிடம் இருந்து பெறப்படுவது. ஆனா மீன் அப்படியா? ஒரு உயிர கொன்னு சாப்பிடுறோம்…

தயிர் கோமாதாவிடம் இருந்து பெறப்படுகிறது என்றால், கோமாதா தனது ரத்தத்தை தானே பாலாக்கி தருகிறது. அதன் மூலமாக தானே தயிரை கடைந்து எடுக்கிறோம். அப்போ எப்படி தயிர் சைவத்தில் சேரும்.

சரி, தயிரும் அசைவம், மீனும் அசைவம் இரண்டையும் ஒன்றாக உண்பது ஆபத்தை ஏற்படுத்துமே என்று கேள்விகள் எழத்தான் செய்யும். ஆனால், நம் விருந்து பழக்கங்களில் பெரும்பாலும் அனைத்து வகையான அசைவ உணவையும் கலந்து தான் சாப்பிடுகிறோம். அதன் மூலம் நமக்கு இதுவரை எந்த பாதிப்பும் ஏற்பட்டது இல்லையே.

பொதுவாக, நாம் இல்லங்களில் சிக்கன் சமைக்கும் போது பலர் தயிர் அல்லது தேங்காய் பால் உற்றி தான் செய்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், மேலை நாடுகளில் மீனை பயன்படுத்தி செய்யும் பல சமையல்களில் தயிரை தான் பெரிதும் பயன்படுத்துகிறார்கள். இது நாம் சாப்பிடும் போது தெரியவில்லை என்றாலும் தயிருடன் கலந்து தான் இருக்கும்.

மேலும், பிரியாணி என்றால் பிடிக்காதவர்களே இருக்க முடியாது. பிரியாணி என்ற சொல் கேட்டதுமே நாவில் எச்சில் ஊறும் அப்படிப்பட்ட பிரியாணிக்கே தயிரையும், வெங்காயத்தையும் கலந்து தான் ரைத்தா தருவார்கள்.

Also Read: உக்ரைன் – ரஷ்யா போர்: தொடர்ந்து ஆதரவு தெரிவிக்கும் நேட்டோ நாடுகள்…!

அதுமட்டுமல்லாமல், இதுவரை அசைவத்துடன் தயிர் சாப்பிடக் கூடாது. அப்படி, சாப்பிட்டால் உடலில் பிரச்சினைகள் ஏற்படும் என்று அறிவியல் பூர்வமாக இன்னும் நிரூபிக்கவில்லை.  இப்படி நாம் விரும்பி உண்ணும் உணவுகள் ஒரு சில பொய்யான நிரூபிக்கப்படாத காரணங்களால் ஆய்வு செய்யப்படாமலேயே நிராகரிக்கப்படுகிறது. உணவானது சரிவிகிதத்தில் இருக்கும் வரை எந்த ஒரு தீங்கையும் ஏற்படுத்தாது.

மேலும், அசைவத்துடன் தயிர் சாப்பிடுவதால் தீங்கு ஏற்படும் என்று எந்த ஒரு ஆய்விலும் நிரூபிக்கப்படவில்லை. எனவே ”உணவே மருந்து, மருந்தே உணவு“ என்பதற்கேற்ப அளவோடு உண்டு, மகிழ்வோடு வாழ்வோம்…

உங்கள் கருத்து

Your email address will not be published.

ட்ரெண்டிங் நியூஸ்

News TN Special

News TN Special