சாதாரணம் என்று அலட்சியப்படுத்த முடியாத குறட்டை!

உடலும் உணவும்  Published on: 26 மார் 2022, 6:32 pm Edited on: 29 மார் 2022, 4:12 pm

நம் நாட்டில் மன உளைச்சலால் விவாகரத்து வாங்குபவர்களை விட, “என் கணவர் குறட்டை சத்தத்தால் நான் தூக்கத்தை இழந்தேன்” என்று கூறி விவாகரத்து வாங்கியவர்கள் தான் அதிகம். குறட்டையை சாதாரணம் என்று அலட்சியப்படுத்த முடியாது.

ஒரு மனிதனுக்கு தூக்கம் என்பது மிக முக்கியமான ஒன்று. காலை முழுவதும் ஆடி, ஓடி அலுத்துவிட்டு இரவு நிம்மதியாக தூங்கலாம் என்று நினைக்கும் பொழுது பக்கத்தில் ஒரு பெரும் சத்தம் கேட்டால் எப்படி இருக்கும். அந்த மன நிலைமையில் தான் பலர் உள்ளனர்.

முன்பு, வயதில் மூத்தவர்களுக்கு மட்டுமே குறட்டை பிரச்சினை இருந்தது. ஆனால், தற்போது சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் குறட்டை பிரச்சினை உள்ளது.

குறட்டையை ஸ்லீப் அப்னியா (sleep apnea) என்று கூறுவார்கள். நாம் தூங்கும் பொழுது சுவாசிக்கும் காற்றானது மூக்கு, வாய், தொண்டை, மூச்சுக் குழல் வழியாக நுரையீரலுக்குச் செல்கிறது.

இந்தப் பாதையில் எங்காவது தடை ஏற்படும்போது குறட்டை வருகிறது. விழித்திருக்கும்போது வராத குறட்டை, தூங்கும்போது மட்டும் ஏன் வருகிறது? என்று சிந்திக்க தோணும்.

தூங்கும்போது தொண்டை தசைகள் தளர்வடைந்து ஓய்வெடுக்கின்றன. அப்போது மூச்சுப் பாதையின் அளவு குறுகிவிடுகிறது. இப்படிக் குறுகிய பாதையில் காற்று செல்ல முற்படும்போது சத்தம் எழுவது வழக்கம்தான். இது புல்லாங்குழல் தத்துவத்தைச் சார்ந்தது.

SNORING

சளித் தொல்லை, சைனஸ், அதிக எடை கொண்டவர்கள், அடினாய்டு/டான்சில் வளர்ச்சி, தைராய்டு பிரச்சினை, அதிக கொழுப்புச் சத்து, குடிப்பழக்கம், மது அருந்துதல், போன்றவற்றால் குறட்டை ஏற்படுகிறது.

குறட்டை விடுபவர்களை பார்த்தால் பலரும் கூறுவது, அவனுக்கு என்ன நிம்மதியா தூங்குவான் என்பது தான். ஆனால், குறட்டையை சாதாரணம் என்று நினைத்துவிட கூடாது. சில சமயங்களில் குறட்டை ஆபத்தாகவும் முடியும்.

குறட்டையின் சத்தம் ஒரே சீராக இல்லாமல், அடிக்கடி கூடிக் குறையும். அப்போது, மூச்சுக் குழாயில் முற்றிலுமாக அடைப்பு ஏற்பட்டு, ஒட்டுமொத்த சுவாசமும் நின்றுவிடும். இதனால், மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் அளவு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டே வந்து, ஒரு கட்டத்தில் முற்றிலுமாக நின்றுவிடும் (Obstructive Sleep Apnea).

ஆனால், இந்த மாதிரி நேரத்தில் மூளை விழித்துக்கொண்டு, உடலில் ஒருவித அதிர்வை உண்டாக்கி, சுவாசப் பாதையை மீண்டும் திறந்துகொள்ள வழி செய்கிறது.

இதனால்தான், தூங்கிக் கொண்டிருப்பவரின் குறட்டைச் சத்தம் திடீரென்று நின்றுவிடும், அடுத்த சில நொடிகளில் அவர் உடம்பைக் குலுக்கிக்கொண்டு மீண்டும் சுவாசிக்கத் துவங்குவார்.

இரவில் குறட்டை விடுவது மன அழுத்தம், இதயப்பிரச்சினை, மறதி என பல பிரச்சினைகளை ஏற்படுத்தும். மேலும், எந்த விஷயத்திலும் கவனம் செலுத்த முடியாமல் போகும். அதுமட்டுமல்லாமல், பகலிலும் தூங்கி வழிவார்கள். சரியான தூக்கம் இல்லாததால் தலை வலி போன்றவையும் ஏற்படுகின்றன.

குறட்டை விடுவதை குறைக்க பல வழிகள் உள்ளன.

தூங்கும்போது தலைப் பகுதியை ஓரளவு உயர்த்திக்கொள்ள வேண்டும்.

மல்லாக்கப் படுக்காமல் ஒரு பக்கமாகத் தலையைச் சாய்த்துப் படுக்க வேண்டும்.

மது, புகைப்பழக்கத்தை நிறுத்த வேண்டும்.

தேவையில்லாமல் தூக்க மாத்திரை சாப்பிடக் கூடாது.

உயரத்துக்கு ஏற்ப, உடல் எடையை கொண்டு வருவதன் மூலம் குறட்டைவிடுவது குறையும்.

Also Read: ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு அண்ணாமலைக்கு நோட்டீஸ்!

அறை மிகவும் சூடாக இருந்தால் தொண்டையில் காற்று புகும்போது நெரிசல் ஏற்பட்டு சுவாசிக்க முடியாமல் குறட்டைவிட வாய்ப்பிருக்கிறது. இதனால் அறையை முடிந்த வரை குளுமையாக வைத்திருங்கள்.

வீட்டை சுத்தமாக வைத்துகொள்ளுங்கள். மூச்சுப் பயிற்சி, யோகா பயிற்சி நல்ல பலனைத் தரும்.

மருத்துவர்களின் ஆலோசனையுடன் ஆண்டி ஸ்னோரிங் மாத்திரைகளை வாங்கி கொள்ளலாம். இதன் மூலம் குறட்டை விடுவதை தவிர்க்கலாம்.

உங்கள் கருத்து

Your email address will not be published.

ட்ரெண்டிங் நியூஸ்

News TN Special

News TN Special