சர்க்கரைப் பொங்கலில் ஏன் வெல்லம் சேர்க்கிறார்கள்?

உடலும் உணவும்  Published on: 14 ஜன 2022, 6:30 pm Edited on: 12 ஜன 2022, 6:46 pm

இனிப்புக்காக சேர்க்க வெள்ளைச் சர்க்கரை, நாட்டுச் சர்க்கரை, ஸ்வீட் எசன்ஸ் என நெறய இருக்கும்போது சர்க்கரைப் பொங்கலில் வெல்லம் சேர்ப்பது ஏன் தெரிஞ்சுக்கலாம் வாங்க.

மத பாகுபாடு இல்லாமல் எல்லாரும் கொண்டாடும் ஓர் பண்டிகை என்றால் அது பொங்கல் தான். இயற்கைக்கும், பயன்படுத்தும் விலங்குகளுக்கும் நன்றி சொல்லும் விதமாக அறுவடை செய்த அரிசி, காய்கறி, பழங்கள், கிழங்குகளை படைத்து வழிபடுவார்கள்.

சர்க்கரை பொங்கல் செய்ய பச்சரிசி, நெய், திராட்சை, முந்திரி என்று பல பொருட்கள் இருந்தாலும் வெல்லம் இல்லையென்றால் சர்க்கரை பொங்கல் தித்திக்காது.

jaggery

வெல்லம் ஏன் சிறந்தது?

கரும்பில் இருந்து தயாரிக்கப்படும் ஆரோக்கியமான இனிப்பு வெல்லம் தான். வெள்ளைச் சர்க்கரையில் இருக்கும் அதேஅளவு கலோரிகள் தான் வெல்லத்திலும் இருக்கிறது. எனினும், வெள்ளைச் சர்க்கரையை விட ஆரோக்கியமானது வெல்லம் தான்.

சாப்பிட்ட முடித்து பிறகு ஒரு சின்ன துண்டு வெல்லம் சாப்பிட்டால் செரிமானம் எளிதாகும். அதேபோன்று, மிளகுகுடன் சேர்த்து வெல்லம் சாப்பிடும்போது பசியை அதிகரித்து நன்றாக சாப்பிடலாம். கல் உப்போடு வெல்லத்தை சேர்த்து சாப்பிட்டால் புளித்த ஏப்பம் போன்ற தொல்லைகளில் இருந்து குணமாகலாம்.

இப்படி தனியாக சாப்பிடும்போது ஒருவிதமான பயனையும், மற்ற உணவுப் பொருட்களோடு சேர்த்து சாப்பிடும்போது ஒருவிதமான பயனையும் சீராக கொடுக்கவல்லது வெல்லம்.

sweet pongal

பச்சரிசி, நெய், திராட்சை, முந்திரி போன்றவற்றை வெல்லத்தோடு சேர்த்து சர்க்கரைப் பொங்களாக சாப்பிடும்போதும் ஏராளமான சத்துக்கள் கிடைக்கின்றன.

தனித்தனியாக, பச்சரிசியில் வைட்டமின் பி, கார்போஹைட்ரேட், புரோட்டீன்,, போன்ற சத்துக்களும்,

நெய்யில் வைட்டமின் K, A, மற்றும் E, ஒமேகா 3 போன்ற சத்துக்களும்,

உலர் திராட்சையில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள், தாமிரம், ஃபோலிக் அமிலம் போன்ற சத்துக்களும்,

முந்திரியில் மெக்னீசியம், பொட்டாசியம், ஒமேகா-6 போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.

Also Read: டீ குடிப்பவர்களுக்கு பசியே எடுக்காதுஏன் தெரியுமா?

அவை,  வெல்லத்தில் உள்ள போலேட், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற சத்துக்களோடு சேரும்போது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், தசை, எலும்புகளை வலுப்படுத்தவும், பார்வைத்திறனை அதிகரிக்கவும், உடலில் உள்ள நச்சுக்களை நீக்கவும் உதவுகிறது.

அதுமட்டுமல்லாமல், சுகாதாரத்தை மேம்படுத்தும் உயர் கனிமங்களான இரும்பு, கால்சியம், மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் பாஸ்பரஸ் போன்றவற்றால் ஊட்டச்சத்து குறைபாடு நீங்கும்.

இரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்கும். ஆண்களுக்கு மட்டுமின்றி பெண்களுக்கும் அனீமியா ஏற்படாமல் தடுக்கும்.

periods

உடலில் நொதித்தல் விளைவை ஏற்படுத்தி நச்சுகளை நீக்கி, கல்லீரல் மற்றும் சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்துதல், இரத்தத்தை தூய்மைக்குதல் போன்ற பணிகளை செய்யும்.

மூளையின் சமிக்ஞைகளை பராமரித்து, மேம்படுத்த உதவும் கனிமமான மாங்கனீஸை வெல்லம்  கொண்டுள்ளதால், இதனை சாப்பிடும்போது நினைவாற்றல் வலுப்படும்.

இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதோடு, பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் உண்டாகும் வயிற்று வலியை குறைக்கவும் வெல்லம் பயன்படுகிறது.

இப்படி, தான் சேர்க்கப்படும் பொருளோடு உருகி, கலவையாகி இணைந்து சாப்பிடுபவருக்கு ஆளவற்ற பலன்காளை ஒருசேர தருவதால்தான் சர்க்கரைப் பொங்கலுக்கு வெல்லம் சேர்க்கின்றனர்.

உங்கள் கருத்து

Your email address will not be published.

ட்ரெண்டிங் நியூஸ்

News TN Special

News TN Special