என்னது அதிக ஓய்வு இரத்த அழுத்தத்தை அதிகரிக்குமா??

உடலும் உணவும்  Published on: 27 ஆக 2021, 8:00 am Edited on: 27 ஆக 2021, 2:27 pm

ஓய்வு என்பது உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் தேவையான ஒன்று. உயிரினங்களின் அடுத்தகட்ட நகர்வை முடிவு செய்வது இந்த ஓய்வு தான். தூக்கத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த ஓய்வானது அமைகிறது. தொழில்நுட்பம் வளர்ச்சியடையத் தொடங்கிய நாள் முதல் தூக்கம் மனிதர்களுக்கிடையே சற்று குறைந்தே காணப்படுகிறது. அதாவது சரியான தூக்கமின்மை, கால நேரம் அறியாமல் தூங்குவது போன்றவை.

இதனை தற்போது இருக்கும் சூழ்நிலையில் சற்று ஒப்பிட்டுப் பார்க்கலாம். கொரோனா தொற்று உலகத்தையே புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. அலுவலகம் அனைத்தும் தங்களின் ஊழியர்களை வீட்டிலேயே பணி செய்ய அறிவுறுத்தியுள்ளனர். பிரச்சனை இங்குதான் ஆரம்பமாகிறது, அலுவலகத்தில் ஊழியர்கள் பணி செய்வதை விட, வீட்டில் நீண்ட நேரம் பணி செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், வாரத்தில் 55 மணி நேரத்திற்கு மேலாகப் பணி செய்பவர்களுக்கு இதய நோய் ஏற்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

NEWSTN

இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பு கூறுகையில், வாரத்தில் 40 மணி நேரம் வேலை செய்பவர்களை ஒப்பிடுகையில், 55 மணி நேரத்திற்கு மேலாக வேலை செய்பவர்கள் இதய நோயால் உயிரிழக்கும் அபாயம் 17 சதவீதம் அதிகம் உள்ளது. மேலும், மக்களின் அன்றாட வாழ்க்கை முறைதான் இதயத்தின் ஆரோக்கியத்தை முடிவு செய்கிறது எனத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மருத்துவர்களின் கூற்றுகள், மனிதர்களின் எதிர்காலத்தை, ஓய்வு நேரத்தில் இருக்கும் இதயத் துடிப்பே முடிவு செய்கிறது. அதன் அளவு சரியாக இருக்கும் பட்சத்தில், எதிர்காலம் சரியாக இருக்கும். அதனைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது. உங்களின் இரு விரல்களை நாடி துடிக்கும் இடத்தில் வைத்து ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை துடிக்கிறது என்பதை கணக்கிட வேண்டும். இதனை எப்போது வேண்டுமானாலும் ஆராயலாம்; ஆனால் படிக்கும் போது செய்யக்கூடாது. ஏனென்றால் அப்போது இதயத்தின் வேகம் சற்று அதிகமாக இருக்கும்.

NEWSTN

பொதுவாக நாடித்துடிப்பு கணக்கிடுகையில், நிமிடத்திற்கு 80க்கு மேல் இருந்தால் அதிக கொழுப்பு, அதிக ரத்த அழுத்தம், இதயம் சம்மந்தப்பட்ட நோய் இரண்டு மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், உங்களிடம் உடற்பயிற்சியில் அதிக கவனம் தேவை என்பதை அதிகரிக்க வேண்டும் என்பதை அறிவுறுத்துகிறது.

தற்போதைய சூழ்நிலையில் வீட்டில் பணிபுரிபவர்கள் அதிக நேரம் பணிபுரிவதாக ஆய்வு கூறுகிறது. அவ்வாறு நீண்ட நேரம் வேலை செய்பவர்கள், இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை 10 முதல் 15 நிமிடங்கள் இடைவேளை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த சிறு இடைவேளை, உங்களின் மூளையை சுறுசுறுப்பாகவும், அதிக கவனத்துடன் செயல்பட வைக்கும். இதுபோன்ற செயல்முறைகளை பலர் செய்வதில்லை. இதுவே பல துயரங்களை ஏற்படுத்துகிறது. இதுதான் சரியான நேரம் என அதிக ஓய்வெடுக்கச் செல்லக்கூடாது.

NEWSTN

அதிக ஓய்வு கூட உயர் ரத்த அழுத்தத்தை உருவாக்கும். குறைந்த ஓய்வினால் மன அழுத்தம் அதிகரிக்கும், முறையற்ற ஓய்வினால் உயர் அழுத்த ஹார்மோன்கள் உடலிலிருந்து வெளிப்படும். இவ்வாறு வெளிப்படுகையில் ரத்த அழுத்தம் மறைமுகமாக அதிகரித்து துக்கமின்மையை ஏற்படுத்துகிறது. மேலும் உடலில் அலர்ஜியை ஏற்படுத்துகிறது. இதன் மூலம் ஏற்படும் அதிக மன உலைச்சல் இதயத்தை பாதித்து, கடைசியில் மாரடைப்பை ஏற்படுத்துகிறது.

இதனைத் தவிர்க்க, உடற்பயிற்சி, யோகா, தியானம், மனமகிழ்ச்சி தரும் செயல்களில் ஈடுபடுவது போன்றவற்றைச் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கின்றனர்.

இதன்மூலம் நாம் சரியான ஓய்வை, சரியான நேரங்களில் எடுத்துக்கொண்டால் வாழ்வை மகிழ்ச்சிக்காகக் கொண்டாடலாம் எனத் தெரிகிறது. நாம் சொல்வதையெல்லாம் நம் உடல் கேட்க வேண்டுமென  வற்புறுத்த வேண்டாம். எதுவாயினும் ஓய்வெடுக்கத் தவற வேண்டாம். இது உங்களுக்கு அல்ல உங்களின் உடலுக்கு.

உங்கள் கருத்து

Your email address will not be published.

ட்ரெண்டிங் நியூஸ்

News TN Special

News TN Special