ஆன்லைன் சூதாட்டத்தால் சீரழியும் மக்கள்! தடை போட தடங்கலா?

லேட்டஸ்ட்  Published on: 12 ஏப் 2022, 2:42 pm Edited on: 17 ஏப் 2022, 4:56 pm

ஆன்லைன் சூதாட்டத்தால் மக்கள் பலர் கடனாளியாகி உயிரிழந்துள்ள நிலையில் அதனை தடை செய்ய வேண்டும் என பாமக தலைவர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சூதாட்டம் என்பது பெரும் குற்றம் என்று கூறிக் கொண்டிருந்த நிலையில், தற்போது ஆன்லைன் சூதாட்டம் ட்ரெண்ட் ஆகி வருகிறது. அதுமட்டுமல்லாமல், ஆன்லைன் சூதாட்டத்திற்காக பல ஆப் வசதிகளும் உள்ளன.

இதற்கான விளம்பரங்களில் பிரபலங்கள் பலரும் நடித்து வருகின்றனர். அதற்காக, பல கோடி சம்பளங்களும் வாங்குகின்றனர். அதுமட்டுமல்லாமல், பின் குறிப்பாக 18 வயதிற்கு மேற்பட்டோர் மட்டும் ஆன்லைன் சூதாட்டத்தில் கலந்து கொள்ளுங்கள் என்று கூறுகின்றனர்.

ஆன்லைன் சூதாட்டம் மூலம் பலர் பலியாகின்றனர் அல்லது பலியாக்குகின்றனர். அப்படியான ஒரு சம்பவம் தான் வேலூர் குடியாத்தம் பகுதியில் நடைபெற்றுள்ளது.

RUMMY

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கூட நகரம் கிராமத்தைச் சேர்ந்தவர். அசோக், பிசிஏ படித்துள்ளார். இவர் ஓசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில தினங்களாக சரிவர வேலைக்கு செல்லாமல் பல இடங்களில் கடன் வாங்கியது மட்டுமல்லாமல் மனைவியின் நகைகளை அடகு வைத்து ஆன்லைன் ரம்மி விளையாடியுள்ளார்.

இதனால், மனைவி கோபித்துக் கொண்டு ஒரு மாதத்திற்கு முன்பு அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அசோக் வீட்டிற்கு பின்புறம் இடுப்புக்கு கீழே முழுவதும் எரிந்த நிலையில், சடலமாக கிடந்துள்ளார்.

அதன்படி, குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி, சப்-இன்ஸ்-பெக்டர்கள் சிவச்சந்திரன், குணசேகரன், பெருமாள் உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

RUMMY

மேலும், போலீஸார் அசோக்கின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடமும் விசாரித்து வருகின்றனர். அசோக்கின் சடலத்தை கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்காக வேலூர், அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதன்படி, இந்த சம்பவம் குறித்து ஆன்லைன் சூதாட்டத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டுவிட்டர் பதில், “வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே கூடல் நகரில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர் அவரது வீட்டின் பின்புறம் அடித்து கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டிருக்கிறார்.

முதலில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர்கள்  தற்கொலை செய்து கொண்டனர், பின்னர், ஆன்லைனில் சூதாட மற்றவர்களை கொலை செய்தனர், இப்போது ஆன்லைனில் சூதாடியவர்கள் கொல்லப்படுகின்றனர். இப்படி பலவகையான குற்றங்களின் பிறப்பிடமாக ஆன்லைன் சூதாட்டம் உருவெடுத்துள்ளது.

ஆன்லைன் சூதாட்டத்தால் மக்களும், குடும்பங்களும் சீரழிவதை நாம் இன்னும் எத்தனை நாட்களுக்கு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கப் போகிறோம்.

Also Read: நீங்க மட்டும் தான் கொடுப்பீங்களா, நாங்களும் கொடுப்போம்; 100 ஊழியர்களுக்கு கார் பரிசு!

இது உடனடியாக தடை செய்யப்படாவிட்டால், வெகு விரைவில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பெரும் பிரச்சினையாக பேருருவெடுக்கும்ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் ரத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

ஆனால், இதுவரை எந்த விசாரணையும் இல்லை. அதனால், உச்சநீதிமன்றத் தீர்ப்புக்காக காத்திருக்காமல், திருத்தப்பட்ட ஆன்லைன் தடை சட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

உங்கள் கருத்து

Your email address will not be published.

ட்ரெண்டிங் நியூஸ்

News TN Special

News TN Special