மீண்டும் மீண்டுமா…! IIT–யில் 55 பேருக்கு தொற்று பாதிப்பு…!

லேட்டஸ்ட்  Published on: 23 ஏப் 2022, 12:34 pm Edited on: 23 ஏப் 2022, 12:34 pm

கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் சென்னை IIT–யில் 55 பேருக்கு தொற்று பாதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

IIT–யில் ஏற்கனவே 30 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது, மேலும் 25 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 1,420 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 4 நாட்களில் மட்டும் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டதால் தமிழக அரசு கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கடந்த ஒரு மாதமாக தளர்த்தியது.

இந்நிலையில், கொரோனா தொற்று, பல்வேறு நாடுகளில் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்தியாவில் டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகமாகி வருகிறது.

CORONA

அதுமட்டுமல்லாமல், சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த சிலருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

இதைத்தொடர்ந்து, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், “சென்னை, IIT வளாகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடைய எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது.

1,420 பேருக்கு பரிசோதனை செய்ததில் 55 பேருக்கு IIT வளாகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே, 30 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று மேலும் 25 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

CORONA

நோய் பாதிப்பு அதிகரித்தாலும் பரிசோதனைக்கு ஏற்ப நோய் பரவல் விகிதம் குறைவாகவே உள்ளது. தொற்று பாதித்த அனைவருக்கும் லேசான அறிகுறிகளே உள்ளன.

தமிழகத்தில் இதுவரை எக்ஸ்.இ வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை.  அறிகுறிகள் தென்பட்டால் உடனே பரிசோதனைக்கு செல்ல வேண்டும்” என்றார்.

அதன்படி, கொரோனா தொற்று அதிகமானதை தொடர்ந்து முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என நேற்று அறிவித்திருந்தார்.

தமிழ்நாடு மட்டுமல்லாமல் தெலுங்கானாவிலும் முகக்கவசம் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.1000 அபராதமாக வசூலிக்கப்படும் என தெலுங்கான சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,527- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 33- பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 15,079- ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து ஒரே நாளில் 1,656- பேர்  குணம் அடைந்துள்ளனர்.

குணம் அடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 16 ஆயிரத்து 068-ல் இருந்து 4 கோடியே 25 லட்சத்து 17 ஆயிரத்து 724- ஆக உயர்ந்துள்ளது.

Also Read: திரும்பி வந்த கொரோனா; மாஸ்க் போடலென்னா அபராதம்!

மேலும், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறுகையில், “இந்தியாவில் இதுவரை 187.46 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.  கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 0.56 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

அதனால், பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம். அதுமட்டுமல்லாமல், வரும் மே 8-ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் ஒரு லட்சம் இடங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும்” என்று கூறியுள்ளார்.

உங்கள் கருத்து

Your email address will not be published.

ட்ரெண்டிங் நியூஸ்

News TN Special

News TN Special