திரும்பி வந்த கொரோனா; மாஸ்க் போடலென்னா அபராதம்!

லேட்டஸ்ட்  Published on: 22 ஏப் 2022, 12:20 pm Edited on: 22 ஏப் 2022, 12:20 pm

கொரோனா தொற்றின் பாதிப்பானது தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் மீண்டும் பாதிப்பு தலை தூக்க ஆரம்பித்துவிட்டதால் மாஸ்க் அணிவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பானது தொடர்ந்து குறைந்து வந்ததை அடுத்து மத்திய அரசானது கொரோனா கட்டுப்பாடுகளை கைவிட்டது.

இந்நிலையில், கிண்டியில் உள்ள IIT-யில் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து மேலும் 18 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, IIT-யில் 3 நாட்களில் மட்டும் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இதைத்தொடர்ந்து, 666 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டதில் 18 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

CORONA

மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி தமிழக அரசு கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை தளர்த்தி உள்ளது. 2 ஆண்டுகளாக கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்ற உத்தரவு கடந்த ஒரு மாதமாக தளர்த்தப்பட்டது. மேலும், மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படாது எனவும் அரசு அறிவித்தது.

தற்போது, பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்தியாவில், டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகமாகி வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு, சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் போர்டிங் பாஸ் வாங்கும் இடம் மட்டுமல்லாமல், அனைத்து பிரிவுகளிலும் மாஸ்க் அணிந்து வருமாறு அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

பயணிகள் மட்டுமல்லாது பார்வையாளர்கள், விமான நிலைய ஊழியர்கள், பாதுகாவலர்கள் மற்றும் விமான நிலையத்தில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றுபவர்கள் உள்பட அனைத்து பிரிவினரையும், மாஸ்க் அணியும்படி வலியுறுத்துகின்றனர்.

இதையடுத்து, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் “IIT வளாகத்தை நேரில் ஆய்வு செய்து பரிசோதனைகளை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளார். மேலும், கோவிட் தடுப்பு நெறிமுறைகளை கடைப்பிடிக்கவும், வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், மீண்டும் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதமாக வசூலிக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

தமிழ்நாடு மட்டுமல்லாமல், தெலுங்கானாவிலும் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.1000 அபராதம் வசூலிக்கப்படும் என அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

CORONA

இதனிடையே, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்    “சென்னை IIT-யில் கொரோனா தொற்று உறுதியானவர்களில் பலரும் வட இந்தியாவில் இருந்து வந்தவர்கள். மேலும், தொற்று அதிகரிப்பால் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம்.

அதுமட்டுமல்லாமல், மே 8-ஆம் தேதி ஒரு லட்சம் இடங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும்” என்றும் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 24 மணி நேரத்தில் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 256 -ஆக உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து  குணமடைந்தோர் எண்ணிக்கை 34,15,109 ஆக உள்ளது.

Also Read: ரஷ்யாவுக்கு எதிராக டாடா ஸ்டீல் எடுத்த அதிரடி முடிவு!

டெல்லியில் 15 நாட்களுக்கு முன்பு வரை, தமிழகத்தை போன்று தினசரி கொரோனா பாதிப்பு 30 பேர் என்ற எண்ணிக்கையில்தான் இருந்தது. ஆனால், தற்போது அது பல மடங்காக அதிகரித்து கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளது.

இதன்மூலம், டெல்லியில் தொற்று பரவல் விகிதம் 1 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக அதிகரித்துள்ளது. கொரோனா பரவலால் டெல்லியில் நான்கு பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டுள்ளன.

உங்கள் கருத்து

Your email address will not be published.

ட்ரெண்டிங் நியூஸ்

News TN Special

News TN Special