சம்மர் வந்தாச்சு; இந்த உணவுகளை தாராளமா சாப்பிடுங்க!

லேட்டஸ்ட்  Published on: 20 ஏப் 2022, 12:26 pm Edited on: 20 ஏப் 2022, 12:26 pm

சம்மர் என்றாலே வெப்பமும் வியர்வையும் தான் நியாபகம் வரும். அதுமட்டுமல்லாமல், அதிகமான நீர் இழப்பும் கோடையில் தான் ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் வழிகளை தான் நாம் பார்க்கப்போகிறோம்.

என்ன தான் சம்மர் வந்தாச்சு, லீவு விட்டாச்சுன்னு ஒரு பக்கம் ஜாலியா இருந்தாலும் மற்றொரு பக்கம் அய்யோ வெயில்லையா வெளிய போனும் tired ஆகிருமே என்ற எண்ணமும் வரும்.

அதுமட்டுமல்லாமல், சூரியனின் அதிகப்படியான வெயிலால் உடலில் இருந்து வியர்வை வெளியாகும் பொழுது அதிகமான வைட்டமின்கள் இழப்பு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகிறது. அதனால், நாம் அதற்கான உணவுகளை சரியாக தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஒவ்வொரு பருவக்காலத்திற்கும் ஒவ்வொரு விதமான பழவகைகள் உள்ளன. அப்படியாக, கோடை காலத்திற்கு ஏற்றவாறும் பலவிதமான பழவகைகள் உள்ளன.

SUMMER

கோடைக்கால பழவகை என்றாலே நமக்கு முதலில் நினைவில் தோன்றுவது தர்பூசணி தான். இது கோடை காலத்தில் உடலை ஹைட்ரேட் செய்யும் ஒரு சூப்பர் ஹைட்ரேஷன் உணவாகும்.

தர்பூசணிகள் அதிகப்படியான நீரை கொண்டுள்ளதால் அவை உங்களை குளிர்ச்சியாகவும் நீரேற்றமாகவும் வைத்துக்கொள்ள உதவுகின்றன. மேலும், தர்பூசணி சூரிய வெப்பத்தால் தோல் சேதமடையாமல் பாதுகாக்கிறது.

அடுத்ததாக, நமக்கு மிகவும் பழக்கப்பட்ட எப்பொழுதும் நமது வீட்டில் இருக்கும் தக்காளி மற்றும் காய்கறிகளை சாப்பிடுவதால் உங்கள் சருமத்திற்கான கூடுதல் பாதுகாப்பை நீங்கள் பெற முடியும்.

மேலும், தக்காளியை சிவப்பு நிறமாக்கும் கரோட்டினாய்டு மற்றும் அதிக லைக்கோபீனை உட்கொள்வது மூலம் உங்கள் சருமத்தை வெயிலில் இருந்து பாதுகாக்க முடியும்.

SUMMER

இதுமட்டுமல்லாமல், சம்மர் ஆரோக்கிய உணவுகளில் முலாம் பழமும் முக்கிய பங்கு வகிக்கிறது. இது ஊட்டச்சத்துக்கள், நீர் மற்றும் அதிக சுவையையும் கொண்ட பழமாக உள்ளது.

அதன்படி, முலாம்பழம் உடலில் நீரிழப்பை குறைக்கிறது. எனவே, ஹார்மோன் மாற்றங்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு முக்கியமான பழமாக முலாம்பழம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கொளுத்தும் வெயிலில் வெளியில் போய் வந்து சாப்பிட உட்காரும் போது நம் கண்கள் முதலில் தேடுவது தயிராக தான் இருக்கும். எப்படி, பழவகைகளில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளதோ அதே அளவு தயிரிலும் உள்ளது. தயிர் மிக முக்கியமான பால் உணவாகும்.

இது பயணத்தின் போது சாப்பிட எளிதானது. தயிரில் அதிகமான புரதசத்து இருப்பதால் உடலுக்கு தேவையான சத்தை அளிக்கிறது. மேலும், அதிக கலோரி கொண்ட உணவுகளை உண்பதில் இருந்து இது தடுக்கிறது. தயிரில் புரோபயாடிக்குகள் உள்ளதால் நமது செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

 SUMMER

இவ்வாறு, பழவகைகள் மட்டும் நம் உடலுக்கு நன்மை அளிக்காமல் கொழுப்பு அமிலங்களும் கோடைக்காலத்தில் நமக்கு பெரிதும் உதவுகின்றது. அப்படியான ஒரு அமிலம் தான் ஒமேகா 3.

இது இயற்கையாக நமது உடலில் சுரப்பதில்லை. இவை சில தாவரங்கள் மற்றும் இறைச்சிகள் மூலமே நமக்கு கிடைக்கின்றன. அந்த வரிசையில், சால்மன் மீனானது அதிகமான அளவில் ஒமேகா 3 அமிலங்களை கொண்டுள்ளது. மேலும், சால்மன் மீன் இதயத்திற்கு நன்மை செய்யும் உணவாகவும் புரதத்தின் சிறந்த மூலமாகவும் உள்ளது.

இவை மட்டும் அல்லாமல், அதிகப்படியான தண்ணீர் பருகுவதாலும் கீரை, வெள்ளரிக்காய், ஸ்ட்ராபெர்ரி போன்ற சத்தாண உணவுகளை உண்பதன் மூலமாகவும் வெயிலின் தாக்கத்தில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும்.

சம்மர் டைம்மில் இவைகளை உண்ணலாம் என்று சில பொருட்கள் இருப்பது போல இவைகளை கட்டாயம் உண்பதை தவிர்க்க வேண்டும் என்று சில பொருட்கள் இருக்கின்றன.

SUMMER

நம்மில் பல பேர் டீ, காஃபிக்கு அடிமையாக இருப்பார்கள். ஆனால், கோடையில் டீ, காஃபி குடிப்பதை தான் அதிகம் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதில் உள்ள அதிகப்படியான கஃபைன் நீர் வறட்சியை ஏற்படுத்தும். அதுமட்டுமல்லாமல் நெஞ்சு எரிச்சல், அல்சர், அசிடிட்டி போன்றவற்றையும் ஏற்படுத்தும்.

அடுத்ததாக கியாஸ் இருக்கும் குளிர்பானங்கள் மற்றும் ஐஸ் வாட்டர்களை தவிர்க்க வேண்டும். இவை நம் தொண்டையில் பாதிப்பை ஏற்படுத்தும்.

வெயிலில் சென்று வந்ததும் ஃபேன், ஏசி போன்ற குளிர் காற்று வரும் இடங்களில் இருப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் நமது உடலில் உள்ள வெப்பமானது வியர்வையின் மூலமாகவே வெளியேறுகிறது.

Also Read: உக்ரைன் போரை நிறுத்த முள் படுக்கை மேல் தவில் வாசித்த சிறுவன்!

அந்த நேரம், நாம் ஏசியின் கீழோ அல்லது ஃபேன்களின் அடியிலோ இருக்கும் பொழுது வியர்வை கட்டுப்படுத்தப்படுகிறது.

இதனால், வெப்பம் வெளியேறாமல் உடலிலே தங்கி விடுகிறது. அதனால், பல உடல் உபாதைகள் வருகின்றன. மேலும், அடர் நிறத்திலான ஆடைகள் மற்றும் இறுக்கமான ஆடைகளை தவிர்க்க வேண்டும்.

கோடைக்காலத்தில் ஏற்படும் எந்தவொரு பிரச்சினையையும் அலட்சியம் செய்ய வேண்டாம். உடலில் பிரச்சினைகளோ அல்லது மாற்றங்களோ ஏற்பட்டால் உடனே மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

உங்கள் கருத்து

Your email address will not be published.

ட்ரெண்டிங் நியூஸ்

News TN Special

News TN Special