நீங்க மட்டும் தான் கொடுப்பீங்களா, நாங்களும் கொடுப்போம்; 100 ஊழியர்களுக்கு கார் பரிசு!

லேட்டஸ்ட்  Published on: 12 ஏப் 2022, 11:55 am Edited on: 17 ஏப் 2022, 4:56 pm

சென்னையில் பிரபல மென்பொருள் நிறுவனமான IDEAS2IT நிறுவனம் தனது ஊழியர் 100 பேருக்கு கார் கொடுத்து அசத்தியிருக்கிறது.

நிறுவனம் மற்றும் வளர்ச்சி பெற்றால் போதும் என்ற நிலை மாறி, நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் வளர்ச்சி பெற்றால் தான் நிறுவனம் வளர்ச்சி பெறும் என்னும் நிலைக்கு சமூகம் வந்துவிட்டது.

அப்படியான சில சம்பவங்கள் தான் சென்னையில் நடந்து கொண்டிருக்கிறது. அண்மையில் KISSFLOW நிறுவனமானது தன்னிடம் பத்து வருடமாக வேலை பார்த்துக் கொண்டிருந்த ஊழியர்கள் எந்த நிலையிலும் தன்னை விட்டு செல்லாமல் நிறுவன வளர்ச்சிக்கு உதவியதால்

KISSFLOW நிறுவனத்தின் CEO சுரேஷ் சம்பந்தம் தன்னிடம் வேலை பார்த்த ஐந்து ஊழியர்களின் குடும்பத்தை சிறிய பார்ட்டி என்று வரவழைத்து விலை உயர்ந்த BMW காரை பரிசாக வழங்கினார்.

CAR

இந்த வீடியோவானது சமூக வலைதளத்தில் வைரலாகியது. இந்நிலையில், தற்போது நீங்க மட்டும் தான் கொடுப்பீங்களா நாங்களும் கொடுப்போம் என்ற பாணியில் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் Ideas2IT நிறுவனம்,

தனது நிறுவனத்தின் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் தொடர்ந்து உறுதுணையாக இருந்து, இணையற்ற பங்களிப்பை கொடுத்த 100 ஊழியர்களுக்குப் புதிய மாருதி கார்களைக் கொடுத்து அசத்தியுள்ளது.

Ideas2IT நிறுவனம் 2009-ஆம் ஆண்டு ஆறு இன்ஜினியர்களால் மட்டுமே நிறுவப்பட்டது. தற்போது, அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் இந்தியா உட்பட பல இடங்களில் 500- க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்டு இயங்கி வருகிறது.

அதுமட்டுமல்லாமல், இந்நிறுவனம் பேஸ்புக், ப்ளூம்பெர்க், மைக்ரோசாப்ட், ஆரக்கிள், மோட்டோரோலா, ரோச்சே, மெட்ரானிக் உட்பட பல முன்னணி நிறுவனங்களுக்கு மேம்பட்ட மென்பொருள் திட்டங்களை வழங்குகிறது.

CAR

Ideas2IT நிறுவனத்தின் CEO காயத்திரி விவேகானந்தன் 100 ஊழியர்களுக்கு, Ideas2IT நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவரான முரளி விவேகானந்தன் முன்னிலையில் காரை பரிசாக வழங்கினார்.

அதுமட்டுமல்லாமல், சென்னை கிண்டியில் Ideas2IT நிறுவனத்தின் புதிய அலுவலகமும் திறக்கப்பட்டுள்ளது. 100 ஊழியர்களுக்கு கார்களைக் கொடுத்தது குறித்து Ideas2IT நிறுவனத்தின் நிறுவனர் முரளி விவேகானந்தன் கூறுகையில், “கார்களைப் பரிசளிப்பது குறித்த முடிவானது ஊழியர்களால் இணைந்து எடுக்கப்பட்ட முடிவாகும்.

அதன் அடிப்படையில், நிறுவனத்தில் ஐந்தாண்டுகள் பணியாற்றிய அனைத்து ஊழியர்களுக்கும் கார் வழங்கப்பட்டு உள்ளது.

100 ஊழியர்களுக்கு கார் பரிசு என்பது அவர்கள் இனிமேல் செய்யப்போகும் பணிகளுக்கானது அல்ல, இதுவரை அவர்கள் செய்த பணிக்கானது.

Ideas2IT நிறுவனத்தின் ஊழியர்களுக்கான ஊக்கத் திட்டங்களின் முதல் படி தான் இது, நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர்களுக்கு வளர்ச்சி ஒரு பங்கை அளிக்கும் முயற்சியாக இத்தகைய திட்டத்தை கையில் எடுத்துள்ளோம் என முரளி விவேகானந்தன் கூறியுள்ளார்.

Also Read: பல நாள் கனவு பலித்தது; ஜெகன் அமைச்சரவையில் ரோஜாவுக்கு இடம்!

100 ஊழியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சிக்காக  கார்களை வழங்கி கவுரவித்த முதல் இந்திய ஐடி நிறுவனம் என்பதில் பெருமை கொள்கிறோம் என Ideas2IT நிறுவனத்தின் CEO காயத்ரி விவேகானந்தன் கூறியுள்ளார்.

கொரோனாவிற்கு பிறகு தொழில் துறைகள் இப்பொழுது தான் மெல்ல மெல்ல தங்கள் இயல்பு நிலைக்கு திரும்புகிறது. இந்நிலையில், ஊழியர்களை ஊக்குவிக்கும் விதமாக பல நிறுவனங்கள் கார்களை பரிசாக வழங்குவது இளைஞர்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து

Your email address will not be published.

ட்ரெண்டிங் நியூஸ்

News TN Special

News TN Special