பாஜக மதத்தை வைத்து வெறுப்பை பரப்புகிறது – சிவசேனா தலைவர் சரமாரி தாக்கு!

லேட்டஸ்ட்  Published on: 11 ஏப் 2022, 5:52 pm Edited on: 17 ஏப் 2022, 4:56 pm

பாஜக மதத்தை வைத்து வெறுப்பை பரப்புகிறது என்று மகராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே சாடியுள்ளார்.

கோலாப்பூர் வடக்கு தொகுதியில் ஏப்ரல் 12- ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் காங்கிரஸைச் சேர்ந்த மஹா விகாஸ் அகாடியின் வேட்பாளர் ஜெயஸ்ரீ ஜாதவுக்கு ஆதரவாக மகராஷ்டிர முதல்வரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே வாக்கு சேகரிப்பதற்காக நடந்த பிரச்சாரத்தில் வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக  கலந்துகொண்டார்.

அப்போது அவர் கூறியதாவது, “சிவசேனா காவிக்கொடியிலும், இந்துத்துவாவிலும் எப்போதும் உறுதியாக உள்ளது.

ஆனால், பாஜகவோ தனது அடையாளத்தை மறைத்து பாரதிய ஜன்சங்கம், ஜனசங்கம் போன்று வெவ்வேறு பெயர்களைக் வைத்துக் கொண்டு வெவ்வேறு சித்தாந்தங்களை பிரச்சாரம் செய்கிறது.

காவி மற்றும் இந்துத்துவா ஆகியவற்றின் கலவையானது மத்தியில் ஆட்சியை அடைய உதவும் என்று மறைந்த சிவசேனா தலைவர் எனது அப்பா பால் தாக்கரே தான் பாஜகவுக்குக் காட்டினார். இதனை அவர்கள் மறந்து விட்டார்கள்.

uddhavthackeray

பாஜக இந்துத்துவாவுக்கு காப்புரிமை வைத்திருக்கவில்லை. ராமர் பிறக்காமல் இருந்திருந்தால், பாஜக அரசியலில் எந்த பிரச்சினையை எழுப்பி வாக்கு வாங்கியிருக்கும், அந்த கட்சிக்கு எவ்வளவு வாக்குகள் கிடைத்து இருக்கும் என்று எண்ணி பார்த்து நான் ஆச்சரியப்படுகிறேன்.

பாஜகவுக்கு எந்த பிரச்சினையும் இல்லாமல் இருப்பதால் அந்த கட்சி மதம் மற்றும் வெறுப்பு பற்றி பேசுகிறது. பாஜகவால் எந்த பிரச்சினையும் எழுப்பி அதற்கான தீர்வை தர முடியாது.

பால்தாக்கரேயை மதிப்பதாக பாஜக கூறினால், வரவிருக்கும் நவி மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு அவரது பெயரை வைக்கும் திட்டத்தை அந்தக் கட்சி ஏன் எதிர்க்கிறது?

2019- ஆம் ஆண்டில் இதே தொகுதியில் சிவசேனா வேட்பாளர் தோல்வியடைந்ததற்கு பாஜகவே காரணம். அப்போது, இரு கட்சிகளும் கூட்டணி வைத்திருந்தாலும் தேர்தலில் பாஜகவினர் அப்போது காங்கிரஸுக்கு ஆதரவாக பணியாற்றினர்.

2014- ஆம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடும்போது 2019 –ஆம் ஆண்டு தேர்தலில் கோலாப்பூர் வடக்கில் காங்கிரஸின் வாக்குகள் அதிகரித்தன. இதன், விளைவாக பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தாலும் சிவசேனாவின் வேட்பாளர் தோல்வியடைந்தார். 2019-ல் பாஜகவின் வாக்குகள் எங்கே போனது?

uddhavthackeray

2019- ஆம் ஆண்டு தேர்தலில் இந்த தொகுதியில் காங்கிரஸுடன் பாஜக மறைமுக கூட்டணி வைத்திருந்ததா? என நான் கேள்வி எழுப்ப விரும்புகிறேன்.

நான் கோயிலாகக் கருதும் பாலாசாகேப் பால்தாக்கரேயின் அறையில் வைத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 2019- ஆம் ஆண்டு  தேர்தலில் சிவசேனாவுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் பாஜக ஏன் பின்வாங்கிவிட்டது. .

2019 -ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு முதல்வர் பதவியைப் பகிர்ந்து கொள்வதில் கொடுக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேறாததால் சிவசேனா – பாஜக கூட்டணியில் பிளவுக்கு வழிவகுத்தது. இதற்கு, பாஜக தலைவர்களின் செயல்பாடுளே காரணம்.

மேலும், மத்திய அரசு எரிபொருள் விலையை உயர்த்துகிறது. ஆனால், மாநில அரசு அதை, குறைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. ஜிஎஸ்டி நிலுவைத் தொகையைக் கூட இதுவரை மாநிலத்திற்கு வழங்கப்படவில்லை.

Also Read: ஜெயம் ரவி, நயன்தாரா இணையும் அடுத்த படம்! சர்ப்ரைஸும் இருக்கு!

அதுமட்டுமல்லாமல், பிரதமர் மோடி ஏழை மக்களுக்கு உணவு வழங்குவதாக பட்னாவிஸ் கூறுகிறார். அது உண்மை தான். ஆனால், அதை எப்படி பச்சையாகவா சாப்பிட முடியும்? உணவைக் கொடுத்துவிட்டு எரிபொருள் விலையை உயர்த்தினால் எப்படி?

சிவசேனா வெளிப்படை அரசியல் செய்யும் ஒரு போதும் யாரையும் முதுகில் குத்தமாட்டோம்” என்று கடுமையாக பாஜகவை தக்கியுள்ளார்.

உங்கள் கருத்து

Your email address will not be published.

ட்ரெண்டிங் நியூஸ்

News TN Special

News TN Special