தமிழ்நாட்டில் தமிழர்களுக்கே இடமில்லையா? அதிகரிக்கும் வட மாநிலத்தவர் ஆதிக்கம்!

லேட்டஸ்ட்  Published on: 13 ஏப் 2022, 2:43 pm Edited on: 17 ஏப் 2022, 4:55 pm

தமிழ்நாட்டில் மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில்  வடமாநிலத்தவர்கள் ஆதிக்கம் அதிகரித்து உள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் டெல்லியில் பாராளுமன்ற அலுவல் மொழி கமிட்டி கூட்டத்தில் இந்தியை, ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும் என்று உள்துறை மந்திரி அமித்ஷா கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதுமட்டுமல்லாமல், பல தலைவர்கள் அமித்ஷாவின் உரைக்கு தங்களது ட்விட்டர் பதிவின் மூலம் கண்டனங்களும் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், தமிழக மாணவர்களுக்காக மாநில அரசு பல திட்டங்கள் மற்றும் முயற்சிகளை நடைமுறைப்படுத்தி வரும் நிலையில்,

தமிழகத்தில் படித்து பட்டம் வாங்கிய   இளைஞர், மாநிலத்தில் இயங்கும் மத்திய அரசு நிறுவனங்களிலோ, ரெயில்வே, NLC போன்ற நிறுவனங்களிலோ வேலையில் சேர முடிவதில்லை.

GovernmentJobScam

தமிழ்நாட்டில் மத்திய அரசு வேலைவாய்ப்பில் உள்ளூர்வாசிகளுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்கிற உத்தரவு கடைப்பிடிக்கப்படாமல் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது.

பொதுவாக, வடமாநிலத்தவர்களுக்கு தான் மத்திய அரசு வேலையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது என்று கருத்துக்கள் உள்ள நிலையில்,

தற்போது, அதனை உறுதிப்படுத்தும் விதமாக தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் டெல்லி, உத்தரப்பிரதேசம், அரியானா, ராஜஸ்தான் ஆகிய வட மாநிலத்தவர்கள் அதிக அளவில் வேலைவாய்ப்பில் இடம் பிடித்துள்ளார்கள்.

மேலும், வடமாநிலத்தவர் மோசடி செய்து தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் சேருவதாக பல ஆண்டுகளாக புகார்கள் இருந்து வருகின்றன.

அதன்படி, 2016- ஆம் ஆண்டு, அஞ்சலக துறை நடத்திய தேர்வில் வட மாநிலத்தவர் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதினார்கள். இவர்கள் தமிழ் பாடத்தில் 25 -க்கு 24 மதிப்பெண் பெற்றது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து, அவர்களது தேர்ச்சி நிராகரிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்,  தற்போது தமிழ்நாட்டில் மத்திய அரசு நிறுவனங்களில் 20- க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் போலி ஆவணங்கள் மூலம் வேலையில் சேர்ந்திருப்பது தெரியவந்து உள்ளது.

தமிழ்நாடு தேர்வுத்துறை வழங்கியது போல் போலி ஆவணம் கொடுத்து மத்திய அரசு பணிகளில்  பல்வேறு துறைகளில் வடமாநிலத்தவர்கள் சேர்ந்து உள்ளனர்.

அதன்படி, மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் சுமார் 200 பேர் போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்து உள்ளனர். அஞ்சலக துறை, CRPF, இந்தியன் ஆயில் போன்ற நிறுவனங்களில் இவ்வாறு நடந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

UPSC கொடுத்த சான்றிதழ் சரிபார்ப்பு நடவடிக்கையில் பல சான்றிதழ்கள் போலி சான்றிதழ்கள் என அரசு தேர்வுகள் துறை உறுதி செய்து உள்ளது.

GovernmentJobScam

மேலும், போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்தவர்கள் குறித்து போலீஸில் புகார் அளிக்க அரசு தேர்வுகள் துறை, அஞ்சலக துறைக்கு பரிந்துரை செய்து உள்ளது.

போலி சான்றிதழ் தந்த நபர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க, அரசுத் தேர்வுகள் இயக்ககம் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு பரிந்துரை செய்து உள்ளது.

2012 -ஆம் ஆண்டு சென்னை ரயில்வே மண்டலம் 884 காலிப்பணியிடங்களை நிரப்பியது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த  80 பேர்  மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர்.

2014-ஆம் ஆண்டு சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் 78 பணியிடங்கள் நிரப்பப்பட்ட போது தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேருக்கு மட்டுமே வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Also Read: பீஸ் பீஸாகும் ‘பீஸ்ட்’; தளபதி ரசிகர்கள் அப்செட்!

2019- ஆம் ஆண்டு மாநில மின்வாரியத்தில் 300 உதவி பொறியாளர்கள் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் 39 பேர் வட மாநிலத்தவர்கள்.

இப்படியாக, தமிழே தெரியாது என்றாலும் தமிழ்நாட்டில் மத்திய அரசு வேலைகளில் வடமாநிலத்தவர்களே அதிக இடம் பெற்று வருகின்றனர்.

இன்று வரையிலும் தமிழர்கள் மத்திய அரசு வேலைக்காக போராடி கொண்டு தான் இருக்கிறார்கள்.

உங்கள் கருத்து

Your email address will not be published.

ட்ரெண்டிங் நியூஸ்

News TN Special

News TN Special