நாட்டை விற்கும் மோடி – பிரகாஷ்ராஜ் ஆவேசம்!

லேட்டஸ்ட்  Published on: 23 ஏப் 2022, 1:36 pm Edited on: 23 ஏப் 2022, 1:53 pm

பிரபல நடிகரான பிரகாஷ்ராஜ் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்துப் பதிவு செய்துள்ள ட்வீட் இணையத்தில் வைரலாகி உள்ளது.

பாஜக-வினர் சமீபகாலமாக பல மத பிரச்சினை சர்ச்சைகளில் ஈடுபட்டு பேசுப்பொருளாகி வருகின்றனர். இதனால், ஆளும் பாஜக அரசை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

அதன்படி, திரைப்பட நடிகரான பிரகாஷ்ராஜ் பல்வேறு சமூகப் பிரச்சினைகளுக்குக் கடந்த சில ஆண்டுகளாகக் குரல் கொடுத்து வருகிறார். பல பிரச்சினைகளில் தனது நிலைப்பாட்டையும் வெளிப்படையாகக் குறிப்பிட்டு இருக்கிறார்.

மேலும், பிரகாஷ் ராஜ் தொடர்ச்சியாகப் பிரதமர் நரேந்திர மோடியையும் ஆளும் மத்திய பாஜக அரசின் செயல்பாடுகளையும் விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிரபல எழுத்தாளர் கௌரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்ட பின்னர், நடிகர் பிரகாஷ்ராஜ் சமூக ஊடகங்களில் அரசியல் ரீதியாக தொடர்ச்சியாக தனது கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்.

PRAKASHRAJ

கடந்த 2019-இல் பெங்களூர் மத்திய மக்களவைத் தொகுதியில் அவர் சுயேச்சை வேட்பாளராகக் களமிறங்கினார். அந்தத் தேர்தலில் அவரால் வெற்றி பெற முடியவில்லை. எனினும் 3-ஆம் இடத்தை பிடித்தார்.

அதன்பின்னர், அவர் ஆளும் பாஜகவை அவ்வப்போது விமர்சித்து வந்தார். தற்போது, பிரதமர் மோடியை நேரடியாக விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்ட பதிவை இணையத்தில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

நடிகர் பிரகாஷ்ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், “பிரதமர் மோடி தேநீர் விற்றதை நம்பியவர்கள். அவர் நாட்டையும் விற்றுக் கொண்டிருப்பதை நம்ப மறுக்கிறார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

பிரகாஷ் ராஜ் ஆளும் பாஜக அரசை விமர்சிப்பது இது முதல்முறை அல்ல. டெல்லி ஜஹாங்கீர்பூரில் இஸ்லாமியர்களின் வீடுகள் ஆக்கிரமிப்பு நிலங்களில் கட்டப்பட்டுள்ளதாகக் கூறி அவற்றை இடிக்க மாநகராட்சி உத்தரவிட்டது.

PRAKASHRAJ

இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கட்டிடங்களை இடிக்க இடைக்காலத் தடை விதித்தது. ஆனால், நீதிமன்ற ஆணை தங்களுக்குக் கிடைக்கவில்லை எனக்கூறி அதிகாரிகள் ஏராளமான வீடுகளை இடித்துத் தள்ளினர்.

Also Read: மீண்டும் மீண்டுமா…! IIT–யில் 55 பேருக்கு தொற்று பாதிப்பு…!

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதற்கு பல்வேறு தரப்பினர் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். இதுகுறித்து, நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டரில், “சிலைகள் கட்டப்படுகின்றன. வீடுகள் இடிக்கப்படுகின்றன. மக்கள் பேசாவிட்டால் கூடிய விரைவில் நாட்டையும் அவர்கள் அழித்துவிடுவார்கள்” என்று பதிவிட்டு இருந்தார்.

பிரகாஷ் ராஜ் கடந்த சில மாதங்களாகவே நேரடி அரசியலில் ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் பிரபல தேர்தல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர் தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர ராவை சந்தித்து, தேர்தல் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தி இருந்தார். அப்போது, பிரஷாந்த் கிஷோர் உடன் பிரகாஷ் ராஜும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து

Your email address will not be published.

ட்ரெண்டிங் நியூஸ்

News TN Special

News TN Special