இந்துக்கள் நான்கு குழந்தைகளை பெற்று இரண்டை RSS-ல் இணைக்க வேண்டும்!

லேட்டஸ்ட்  Published on: 19 ஏப் 2022, 12:11 pm Edited on: 19 ஏப் 2022, 12:11 pm

லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இந்துத்துவத் தலைவா் சாத்வி ரிதம்பரா இந்துக்கள் நான்கு குழந்தைகளை பெற்று அதில் இருவரை RSS, விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகளில் இணைக்க வேண்டும் என்று கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு டெல்லியில், ஜஹாங்கிர் பூரி பகுதியில் மொத்தம் மூன்று ஊர்வலங்கள் நடந்துள்ளன. கடைசியாக நடந்த ஊர்வலமானது போலீஸாரிடம் இருந்து எவ்வித அனுமதியும் பெறாமல் நடைபெற்றுள்ளது. இந்த ​​அனுமதி வழங்கப்படாத ஊர்வலத்தில் தான் பிரச்சினை ஏற்பட்டுள்ளது .

இந்த ஊர்வலம் கோவிலுக்கு அருகில் உள்ள மசூதி வழியாக சென்றுள்ளது. ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் காவிக் கொடிகளை ஏந்தியபடி, மசூதியைக் கடந்து சென்றுள்ளனர். அப்போது, சிலர் முஸ்லிம் பிரார்த்தனைகளுக்கு எதிராக உரத்த குரலில் கோஷங்களை எழுப்பி உள்ளனர்.

இதன் காரணமாக ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களுக்கும் மசூதியில் இருந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது மோதலாக வெடித்துள்ளது.

மேலும், அனுமன் ஜெயந்தி ஊர்வலத்திற்கு வந்தவர்கள் ஆயுதங்களை எடுத்து வந்ததாகவும் அவர்கள் மசூதியைச் சேதப்படுத்த முயன்றதாகவும் அப்பகுதி முஸ்லிம்கள் கூறியுள்ளனர். அதன்படி, ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் தாங்கள் ஆயுதங்கள் எடுத்து வந்ததை ஒப்புக்கொண்டனர்.

RSS

ஆனால், முஸ்லிம்கள் முதலில் கற்களை வீசி தாக்கத் தொடங்கியதாலேயே வன்முறை ஏற்பட்டதாக ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் கூறினர்.

இதற்கிடையே, உரிய அனுமதியின்றி ஊர்வலம் நடத்தியதற்காக விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் உறுப்பினர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தில் விஷ்வ இந்து பரிஷத் செயல்பாட்டாளரான பிரேம் சர்மாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இந்த வன்முறையின் போது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் நபரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்துத்துவத் தலைவா் சாத்வி ரிதம்பரா பேசியதாவது, “டெல்லியில் உள்ள இடங்களில் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் வன்முறை ஏற்பட்டுள்ளது. அந்த ஊா்வலத்தின் மீது பொறாமை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்துக்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்க அரசியல் நடத்துபவர்களைப் புறந்தள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல், இந்துக்கள் இப்போது பெரும்பாலும் இரு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்வது இல்லை.

RSS

அதனால், இந்துக்கள் 4 குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். அதில், இரண்டு குழந்தைகளை நாட்டுக்காக அா்ப்பணிக்க வேண்டும். இரு குழந்தைகள் குடும்பத்துக்காக வைத்துக் கொள்ளலாம். இந்த நிலை உருவானால் விரைவில் இந்து தேசம் மலரும்.

குறிப்பிட்ட ஒரு தரப்பினரின் எண்ணிக்கை மட்டுமே அதிகரித்துச் செல்வது நாட்டின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல. பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தினால் மட்டுமே மக்களிடையே பாகுபாட்டை அகற்ற முடியும் என்றாா்.

Also Read: டெஸ்லா ஓனருக்கு சொந்த வீடு இல்லையாம்… நம்புங்க!

இதைத்தொடர்ந்து, பெற்றோா் தங்கள் குழந்தைகளை RSS அமைப்பில் இணைக்க வேண்டும் என்று கூறுகிறீா்களா? என்று செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ‘ஆம், RSS, விஷ்வ இந்து பரிஷத் அமைப்பில் இணைந்து செயல்படுவதன் மூலம் நாட்டுக்குத் தொண்டாற்ற முடியும்’ என்று அவர் பதிலளித்தாா்.

சாத்வி ரிதம்பரா, விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் மகளிர் பிரிவான ‘துர்கா வாஹினி’ அமைப்பை நிறுவியவர் மேலும், ராமஜென்மபூமி அமைப்பில் தீவிரமாகச் செயல்பட்டவா். அதுமட்டுமல்லாமல், இவர் சர்ச்சைக்குரிய பேச்சுக்களால் பிரபலமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து

Your email address will not be published.

ட்ரெண்டிங் நியூஸ்

News TN Special

News TN Special