இலங்கையை வைத்து இந்தியா, சீனா ஆடும் சதுரங்க ஆட்டம்!

லேட்டஸ்ட்  Published on: 18 ஏப் 2022, 4:43 pm Edited on: 23 ஏப் 2022, 4:34 pm

இலங்கையின் கடுமையான பொருளாதார நெருக்கடியால் பல நாடுகளிடம் இருந்து கடன்களை பெற்றுள்ளது. இதனை, திருப்பி செலுத்த முடியாத நிலையில் இந்தியா, சீனா கைப்பிடிக்குள் சிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிடும்.

இலங்கை அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக வெளிநாடுகளிடம் இருந்து 51 பில்லியன் டாலர் கடன்களை வாங்கி இருந்தது. அதன்படி, ஏப்ரல் 12 அன்று வெளிநாட்டு கடன்களுக்கான தவணைகளை கட்ட முடியாது என்ற அறிக்கையை வெளியிட்டது.

மேலும், நாட்டில் நிலவும் உணவு பஞ்சம் காரணமாக மக்கள் ராஜபக்சேவின் அரசை எதிர்த்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.

அதன்படி, முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேனா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மகிந்த ராஜபக்சே தலைமையிலான ஆளும் கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற முடிவு செய்தது.

அதுமட்டுமல்லாமல், இலங்கை நாடாளுமன்றத்தில் 42 உறுப்பினர்கள், ராஜபக்சேவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனாவைச் சேர்ந்த 12 பேர் உட்பட ஆளும் கூட்டணியில் இருந்து தங்கள் ஆதரவை வாபஸ் பெற்றுள்ளனர். இது இலங்கை அரசு பெரும்பான்மையை இழக்க வழிவகை செய்தது.

Srilanka

அரசியல் எதிர்காலம் சஜித் பிரேமதாசவின் சமகி ஜன பலவேகய கட்சி, அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை அறிவித்ததுடன், 20-வது திருத்தத்தை நீக்கி நிறைவேற்றும் அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை நீக்குவதற்கான மசோதாவையும் கொண்டுவந்துள்ளது.

இதேவேளை, கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிரான பதவி நீக்க நடவடிக்கையையும் கட்சி ஆரம்பித்துள்ளது. ஜனாதிபதியின் அதிகாரங்களை கட்டுப்படுத்தும் கோரிக்கைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிடமிருந்து ஆதரவு கிடைத்துள்ளது.

இதனால், ராஜபக்சே சகோதரர்களின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. அதன்படி, இலங்கைக்கு தற்போது 57 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் உள்ளது.

இதில், 35 பில்லியன் டாலர் கடன்களை திரும்ப செலுத்துவதை தள்ளி வைத்திருக்கிறது இலங்கை அரசு. இந்த ஆண்டில் 7 பில்லியன் அமெரிக்க டாலர் கடனை திரும்ப செலுத்த வேண்டியிருக்கும் நிலையில் இலங்கையின் தற்போதைய அமெரிக்க டாலர் கையிருப்பு 1.93 பில்லியனாக உள்ளது.

கடனை செலுத்தாவிட்டால் புதிய கடன்கள் வாங்குவது நிறுத்தப்படும் அதோடு கூடுதல் வட்டி செலுத்த வேண்டிய நிலைமையும் ஏற்படும்.

Srilanka

இதனால், நாட்டில் தற்போது இருக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேற வாய்ப்பு உள்ளது. மேலும், அந்நாட்டின் பங்கு துறை திவால் அடைவதோடு பொருளாதாரம் மந்த நிலையை நோக்கி செல்லும் அபாயம் உள்ளது.

சீனாவிடம் கடன் பெற்ற இலங்கை தவறான பொருளாதார கொள்கைகளால் தான் பொருளாதார பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது என்று கூறப்படும் நிலையில், மீண்டும் சீனா மற்றும் இந்தியாவிடம் கடன் பெற்று வருகிறது.

இதன்மூலம், இந்தியா மற்றும் சீனா விதிக்கின்ற நிபந்தனைகளை ஒரு சேர நிறைவேற்ற வேண்டிய சூழ்நிலையில் இலங்கை தள்ளப்பட்டுள்ளது.

மார்ச் 2020 -இல் தொற்றுநோய் தொடங்கியவுடன் இலங்கையில் பொருளாதார நிலைமை மோசமடைந்ததால், சீனா ஆரம்பத்தில் 1 பில்லியன் டாலர் கடனை வழங்கியது. அதைத் தொடர்ந்து, 1.5 பில்லியனை நாணய மாற்று ஒப்பந்தத்திலும் வழங்கியது.

Also Read: எந்த படமும் செய்யாத சாதனையை படைத்த ‘பீஸ்ட்’

இந்நிலையில், தொடர்ச்சியான பொருளாதார நெருக்கடியின் போது, இலங்கைக்கான இந்தியாவின் ஆதரவு மிகப்பெரிய அளவிலான நன்மதிப்பைப் பெற்றுள்ளது. தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு 11,000 மெட்ரிக் டன் அரிசியை அனுப்ப இந்தியா முடிவு செய்துள்ளது.

மேலும், நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே குடும்பம் இடைக்கால அரசாங்கத்தை ஏற்படுத்தினால் மட்டுமே தீர்வு சாத்தியமாகும்.

உங்கள் கருத்து

Your email address will not be published.

ட்ரெண்டிங் நியூஸ்

News TN Special

News TN Special