தமிழக பாடப்புத்தகத்தில் ரம்மி டிப்ஸ்; அதிர்ச்சியில் பெற்றோர்கள்!

லேட்டஸ்ட்  Published on: 13 ஏப் 2022, 4:00 pm Edited on: 17 ஏப் 2022, 4:55 pm

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட ஆறாம் வகுப்பு மூன்றாம் பருவத்துக்கான கணிதப் பாடப் புத்தகத்தில் ரம்மி விளையாடுவது குறித்து விவரிக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இன்றைய நிலையில் மனிதனுக்கு பணம் என்பது மிகவும் முக்கியமான தேவையாக இருக்கிறது. எவ்வளவு உழைத்தாலும் பணம் என்பது மனிதனுக்கு போதுமானதாக இல்லை. அதற்காக, சிலர் பல வேலைகளை செய்கிறார்கள். பலர் சூதாட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.

சூதாட்டம் என்பது மிகப்பெரிய குற்றம் என்று கருதிய நிலை மாறி தற்போது ஆன்லைன் மூலம் சூதாடலாம் என்ற நிலை வந்துவிட்டது. இதற்காக, பல App- களும் உள்ளன.

அதுமட்டுமல்லாமல், ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் பிரபலங்கள் பயன்படுத்தப்படுகின்றனர். பின்குறிப்பாக 18 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் விளையாடுங்கள் என்று கூறுகின்றனர்.

ஆன்லைன் ட்ரேடிங்க், ஆன்லைன் ரம்மி மூலமாக மக்கள் விட்டதை பிடித்து விடலாம் என நினைத்து கடனுக்கு மேல் கடன் வாங்கி வேறு வழியின்றி தற்கொலை செய்யும் அவல நிலை ஏற்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன.

Online

இதனையடுத்து, எழுந்த எதிர்ப்புகள் மற்றும் கோரிக்கைகளால் ஆன்லை சூதாட்டத்திற்கு தடை கொண்டுவரப்பட்டது.

ஆனால், ரம்மி நிறுவனங்கள் மேலமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அந்த சட்டத்திற்கு தடை பெற்றனர். இதையடுத்து, மீண்டும் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி நுழைந்தது.

தற்பொழுது, அளவுக்கு அதிகமாக ஆன்லைன் சூதாட்டங்கள் பல உயிர்களை தனது பசிக்கு இறையாக்கி வருகிறது. அதன்படி, ஆன்லைன் சூதாட்டத்திற்கு கொடுத்த தடை ரத்தை நீக்க வேண்டும் என பல தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்

இப்படி, ஆன்லைன் சூதாட்டம் மூலம் பல பிரச்சினைகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது மற்றொரு பிரச்சினை எழுந்துள்ளது.

ஆறாம் வகுப்பின் மூன்றாம் பருவத்திற்கான கணித தமிழ் மற்றும் ஆங்கில பாடப்புத்தகங்களை தமிழக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

Online

பாடத்திட்டத்தில் முழு எண்களை விளக்கும் உதாரணத்திற்காக ரம்மி விளையாடுவது எப்படி என விவரிக்கப்பட்டு இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அதுமட்டுமல்லாமல், இந்த நடவடிக்கை மாணவர்களை ரம்மி விளையாடுவதற்கு ஊக்குவிக்கும் வகையில் இருக்கிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

மாணவர்களுக்கு எண்கள் குறித்து தெளிவாக விளக்கவே ஆறாம் வகுப்பு கணிதம் புத்தகத்தில் இது வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும், இதனை படிக்கும் மாணவர்கள் வீட்டில் படிப்பார்களா? அல்லது, மற்றவர்களுடன் சேர்ந்து விளையாட நினைப்பார்களா? என கேள்வி எழுப்பியுள்ள கல்வி ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்கள் இதனை நீக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Also Read: தமிழ்நாட்டில் தமிழர்களுக்கே இடமில்லையா? அதிகரிக்கும் வட மாநிலத்தவர் ஆதிக்கம்!

மற்ற மாநிலங்களில் வேறு பொருட்களை உதாரணமாக வைத்து பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் ரம்மி விளையாட்டை வைத்து பாடத்திட்டம் எப்படி தயாரிக்கப்பட்டது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மேலும் மாணவர்களுக்கு சூதாட்டம் என்பது என்னவென்று தெரியாத போது, புத்தக்கத்தின் உதாரணம் மூலமாக அவர்களுக்கு நாமே சூதாட்டத்தை கற்று கொடுக்கும் நிலை ஏற்படும். அதனால், அடுத்த பருவத்தில் இந்த சீட்டு கட்டும் மூலம் கொடுக்கும் விளக்கத்தை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது.

உங்கள் கருத்து

Your email address will not be published.

ட்ரெண்டிங் நியூஸ்

News TN Special

News TN Special