பீஸ் பீஸாகும் ‘பீஸ்ட்’; தளபதி ரசிகர்கள் அப்செட்!

லேட்டஸ்ட்  Published on: 13 ஏப் 2022, 12:04 pm Edited on: 17 ஏப் 2022, 4:55 pm

அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ‘பீஸ்ட்’ திரைப்படம் இன்று அதிகாலை திரையரங்குகளில் வெளியாகிய நிலையில் தளபதி ரசிகர்கள் பெரும் அப்செட்டில் உள்ளனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருக்கும் ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

ஈஸ்ட் கோஸ்ட் மாலில் நடக்கும் ஹைஜாக்கை வீரராகவன் எப்படி தடுக்கிறார் என்கிற கதையுடன் உருவாகி உள்ள ‘பீஸ்ட்’ படத்தின் டிரைலர் ஏப்ரல் 2-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியானது.

இந்நிலையில், ஏப்ரல் 3-ஆம் தேதி மாலை 6 மணிக்குள் 30 மில்லியன் ரியல் டைம் வியூஸ்ஸை அள்ளி ‘பீஸ்ட்’ டிரைலர் அபார சாதனையை படைத்திருப்பதாக சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

அதன்படி, நடிகர் அஜித்தின் வலிமை டிரைலர் வெளியாகி 3 மாதங்கள் ஆகியும் வெறும் 23 மில்லியன் வியூஸ் மற்றும் 1.6 மில்லியன் லைக்ஸ் மட்டுமே பெற்றிருக்கிறது என்ற விமர்சனங்களும் எழுந்தன.

BEAST

மேலும், ‘பீஸ்ட்’ படத்தின் ட்ரைலரில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக காட்சிப்படுத்தி இருப்பதால், இப்படம் குவைத்தில் தடை செய்யப்பட்டது. மேலும், மாஸ்டர் திரைப்படமும் வன்முறை காட்சிகள் காரணமாக குவைத்தில் திரையிட அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குவைத்தை தொடர்ந்து கத்தாரிலும் ‘பீஸ்ட்’ படத்திற்கு தடை விதிக்கப்பட்டது. வெளிநாடுகளில் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில், கரூரிலும் ‘பீஸ்ட்’ படத்திற்கு தடை விதிக்கப்பட்டது.

அதுமட்டுமல்லாமல், புதுச்சேரியில் ‘பீஸ்ட்’ திரைப்பட பேனர்களில் முதல்வர் ரங்கசாமியின் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இப்படியாக, பல தடைகளை தாண்டி ‘பீஸ்ட்’ படம் இன்று அதிகாலை முன்னணி நடிகர்களுக்கு உண்டான ரசிகர்களின் வரவேற்புடன் திரையரங்குகளில் வெளியானது.

ஒருபுறம், அருமையான ஆக்ஷன் த்ரில்லர். விஜய் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் திரையில் வரும்போது ஒரு நொடி கூட டல்லாக இல்லை. நம்மை எல்லாம் கவர்கிறார்.

BEAST

கொஞ்சம் கூட யோசிக்காமல் போய் ‘பீஸ்ட்’ படம் பாருங்கள் மக்களே. விஜய்யின் நடிப்பு ராக்கிங் நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் ஆகிய படங்கள் ஹிட்டாகின.

இந்நிலையில் பீஸ்ட் படம் ஹிட்டாகும் என்பதில் சந்தேகமே இல்லை. அதனால், நெல்சனுக்கு இது ஹாட்ரிக் வெற்றி ஆகும். என்று பாசிடிவ் கமெண்ட் வந்து கொண்டிருக்க

மறுபுறம் “நெல்சா இந்த கருமத்த எடுக்குறதுக்கு தான் இத்தனை நாளா இவ்வளவு ஒட்டிட்டு இருந்தியா… இதுல இன்டர்வியூ வேற”

“இப்பவே கண்ணை கட்டுதே.. தலைவர் 169 படத்தை பார்த்து பண்ணுப்பா நெல்சா”

போன்ற நெகட்டிவ் கமெண்டுகளையும் ரசிகர்கள் பதிவு செய்து கொண்டிருக்கின்றனர். இதைத் தொடர்ந்து, சுவாரஸ்யமான தகவல்களும் வருகின்றன.

Also Read: பிரேமம் டைரக்டருக்கு ‘நோ’ சொன்ன விஜய் மகன்!

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள Le Grand Rex தியேட்டரில் ‘பீஸ்ட்’ படத்தை உற்சாகமாக பார்த்த ரசிகர்கள் மொபைல் ஃபிளாஷ் அடித்து அரங்கையே ஒளிரச் செய்த வீடியோ வைரலாகி வருகிறது

‘பீஸ்ட்’ படம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் ரிலீஸாக இருக்கிறது.

இதற்கிடையே ‘பீஸ்ட்’ படத்திற்கு விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரும் விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து

Your email address will not be published.

ட்ரெண்டிங் நியூஸ்

News TN Special

News TN Special