z Privacy Policy - News TN | Latest News Update | TamilNadu

Privacy Policy

NEWS TN நிறுவனத்தின் சேவைகளை நீங்கள் பயன்படுத்தும் போது உங்களைச் சார்ந்த தகவல்களை பாதுகாப்பதில் NEWS TN நிறுவனம் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. NEWS TN இணையதளத்தினை நீங்கள் பயன்படுத்தும் போது உங்களைப்பற்றிய தகவல்களை (உதாரணத்திற்கு பெயர், மின்னஞ்சல் முகவரி, கைப்பேசி எண், முகவரி உள்ளிட்ட தனிநபர் சார்ந்த தகவல்கள்) நாங்கள் பெறவேண்டிய தேவை ஏற்படலாம். 

அவ்வாறு பெறப்படும் தகவல்கள், NEWS TN இணையதளத்தின் மூலம் தங்களுக்கு சேவை வழங்குவதற்காக மட்டுமே பயன்படுத்தப்படும். மேலும் இத்தகைய தகவல்கள் எக்காரணம் கொண்டும் உங்களின் அனுமதியின்றி பிறருக்கு வழங்கப்பட மாட்டாது.

தற்போது நடைமுறையில் இருக்கும் தனிநபர் சார்ந்த சட்டங்களை NEWS TN தவறாது பின்பற்றும். 1998 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தகவல் பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட தனிநபர் பாதுகாப்பு தொடர்பான சட்டங்களுக்கு உட்பட்டு நாங்கள் செயல்பட வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் எங்களுக்கு உண்டு. ஒருவேளை சட்டம் உங்களது தனிநபர் சார்ந்த தகவல்களைக் கேட்கும் பட்சத்திலும், தனிநபர் சார்ந்த தகவல்களை வழங்கக்கோரும் பட்சத்திலும் தான், நாங்கள் அனுமதியின்றி வெளியில் வழங்குவோம்.

அதேபோல NEWS TN இணையதளத்தில் முறைதவறிய, மிகமோசமான தகவல்களை கமெண்ட்களாக நீங்கள் பதிவேற்றம் செய்தாலோ அல்லது  எங்களை அச்சுறுத்தும் விதமான செயல்களில் ஈடுபட்டாலோ, NEWS TN அதை கடுமையான முறையில் அணுகும். இவை தொடரும் பட்சத்தில் உங்களது தனிநபர் தகவல்களை பயன்படுத்தி சட்டரீதியிலான அணுகுமுறை கையிலெடுக்கப்படும்.

நமது இணையதள பக்கங்களில் காட்சியாகும் விளம்பரங்களை நீங்கள் தொடும்போது, அது பிறரால் நடத்தப்படும் இணையதளங்களுக்கு உங்களை இட்டுச்செல்லும். அத்தகைய இணையதளங்களில் உங்களது தனிநபர் சார்ந்த தகவல்கள் சேமிக்கப்படலாம். அதனால் உண்டாகும் பிரச்சனைகளுக்கு NEWS TN பொறுப்பாகாது. அதற்கு நீங்களே முழுப்பொறுப்பு.

குக்கீஸ் எனப்படும் இணைய தகவல் சேகரிப்பு மென்பொருளை நாங்கள் பயன்படுத்துகிறோம். குக்கிகள் என்பது இணையதளத்தில் உங்களது விருப்பங்களைப் பதிவதற்கான ஒரு சிறிய தரவு ஆகும். குக்கிகளை நீங்கள் ஏற்பதன் மூலம் NEWS TN இணையதளம் உங்களின் ஆர்வத்திற்கு ஏற்றவாறு காட்சியளிக்கும். வாசகர் இணையதள பக்கங்களைப் பார்வையிட்டது, ஒரு குறிப்பிட்ட பக்கத்தில் பார்வையாளர் எவ்வளவு நேரம் இருந்துள்ளார்கள் உள்ளிட்ட தனிநபர் தகவல் அல்லாத பிற புள்ளிவிவரங்களைப் பெறவே குக்கிகள் பயன்படுகின்றன. அனைத்து குக்கிகளையும் ஏற்கவோ, எச்சரிக்கவோ அல்லது நிராகரிக்கவோ பார்வையாளரால் முடியும். குக்கிகளை நிராகரிப்பதன் மூலம் சில சிறப்பு சேவைகளை நீங்கள் நிராகரிக்கும் சூழல் ஏற்படலாம்.  

நீங்கள் 16 வயதுடையவராக அல்லது 16 வயதிற்கு குறைவானவராக இருந்தால் உங்களது தகவல்களை அனுப்புவதற்கு முன் உங்களது பெற்றோரின் அனுமதி பெற்று எங்களுக்கு அனுப்பவும். அவ்வாறு அனுமதி பெறாத தகவல்களை எங்களுக்கு அனுப்புவதை தவிர்க்கவும்.