உழைப்பாளி இல்லாத நாடுதான் எங்கும் இல்லேயா…? பணியாளர் பாராட்டு தினம்…!

சேதிகேளு  Published on: 02 மார் 2022, 6:55 pm Edited on: 04 மார் 2022, 9:08 am

தேசிய பணியாளர்களின் பாராட்டு நாள் இன்று…!

சாக்கடைக்குள் போயி சுத்தம் செய்யும் பேருநாலு நாளு லீவு போட்டா நாறிப் போகும் ஊரு…!

முடி வெட்டும் தொழில் செய்யும் தோழன் தான் இல்லையேல் நமக்கெல்லாம் ஏது அழகு..?

நதி நீரில் நின்று துணி துவைப்பவன் இல்லையேல்

வெளுக்குமா உடை அழுக்கு!

எந்த தொழில் செய்தால் என்ன

செய்யும் தொழில் தெய்வம் என்று பட்டுக்கோட்டை பாட்டில் சொன்னாரே…!”

ஆம்..! உலகின் படைப்புகளெல்லாம்… உழைப்பின் சிதறல்களே…  உலகத்தில் இருந்து உழைப்பைக் கழித்தால் வெறும் கல்லும், மண்ணுமே மிஞ்சும்..!

EmployeeAppreciationDay

உழைப்பாளர்களின் பாராட்டு நாள் இன்று…!

உழைப்பாளர் தினம் மே. 1  தான் கொண்டாடி வருகிறோமே..? பின்பு ஏன் ஊழியர் பாராட்டு தினம் என்று மார்ச்.2-ஆம் தேதியன்று கடைபிடிக்கப்படுகிறது என்று நீங்கள் யோசிக்கலாம்.

டாக்டர். பாப் நெல்சன் (Dr. Bob nelson) என்பவரால் உழைப்பாளர்களின் பாராட்டு நாள் உருவாக்கப்பட்டது. அவரின், “ஊழியர்களுக்கு வெகுமதி அளிக்கும் 1001 வழிகள்” என்ற புத்தகத்தின் வெளியீட்டைக் கொண்டாடுவதற்கும், முதலாளிகளை, தங்கள் தொழிலாளர்களுக்கு நன்றி தெரிவிக்க நினைவூட்டுவதற்கும்,  முதலாளிகளுக்கும், ஊழியர்களுக்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்துவதற்கும் உருவாக்கப்பட்டது தான் இந்த நாள்.

பணியாளர் பாராட்டு தினம் என்பது ஒரு நிறுவனத்தில் உள்ள மேலதிகாரிகள், தங்களது ஊழியர்களை நினைவில் கொண்டு பாராட்டும் நாளாகும். பெரும்பாலான நிறுவனங்கள் ஊழியர்கள் நிறுவனத்தை விட்டு வெளியே செல்லும் போது பாராட்டுகளை நடத்தும். அவ்வாறு அல்லாமல் தங்கள் நிறுவனத்தின் ஊழியர்களின் முயற்சியை அங்கீகரிக்கவும், வெகுமதி மற்றும் பாராட்டு மூலம் ஊழியர்களை உற்சாகப்படுத்தவும் இந்நாள் கொண்டாடப்படுகிறது.

EmployeeAppreciationDay

ஒரு கணக்கெடுப்பில், தொழிற்சாலையில் இருந்து அதிகம் பேர் தானாகவே வெளியேறினர்; ஏன் என்று அவர்களிடம் கேட்டபோது, அதில் 60% மக்களிடையே இருந்து வந்த பதில் “நாங்கள் என்ன தான் வேலைப் பார்த்தாலும், எங்களின் முழுத் திறமையையும் காட்டினாலும்; ஒரு சிறிய பாராட்டுக் கூட எங்களுக்கு கிடைத்தது இல்லை. அப்படிப்பட்ட தொழிற்சாலையில் எங்களால் பணிபுரிய முடியாது” என்று வந்துவிட்டோம் என்று கூறியுள்ளனர்.

பெரும்பாலான தொழிற்சாலைகளின் முதலாளிகளிடம் இருந்து , “நாங்கள் தான் சம்பளம் தருகிறோமேஎன்ற பதிலைத் தான் எதிர்பார்க்க முடிகிறது. அனைவரும் மனிதர்கள் தான் , அவர்களுக்கு தேவையான ஊக்கத்தை நாம் அளித்தாலே போதும். ஊழியர்களுக்கு தன் உழைப்பினால் வரும் பணத்தை விட, தனது மேலதிகாரிகளின் ஒரு பாராட்டு அவர்களை இன்னும் உற்சாகத்தோடு வேலை செய்யத் தூண்டும், இதனால், தொழிற்சாலையும் முன்னேற்றம் அடைய வழிகோலும்!

EmployeeAppreciationDay

பாராட்டு ஏன் தேவைப்படுகிறது?;உதாரணத்திற்கு ஒரு கிரிக்கெட் வீரரை எடுத்துக்கொள்வோம், அவர் ஒரு நாள் நன்றாக ஆடவில்லை. ஆனால், நிறைய போட்டிகளில் நன்கு ஆடி இருக்கிறார்; இவரால் தான் அணி வெற்றிபெற முடியவில்லை என்று அந்த ஒரு நாள் ஆட்டத்தில் கோட்டை விட்டதற்காக அணியில் உள்ளவர்கள் அவர்மீது கோவம் கொள்கின்றார்கள். அவரும் அணியை விட்டு வெளியேறுகிறார்; அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்காமல் அவர் கையை மீறிப் போகின்றன;

இதே விஷயத்தில், இவரின் நண்பர்கள் அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம் என உற்சாகப்படுத்தி இருக்கலாம். அவர் தன்மீதுள்ள நம்பிக்கையை இழக்காமல் இருக்கலாம். நன்றாக ஆடி அடுத்த ஆட்டத்தில் வென்று காட்டி இருக்கலாம்;

மற்றவர்கள் குறை சொல்லி விட்டார்கள் என்பதால் இனி தன்னால் எதுவுமே முடியாது என்ற எண்ணுவது தவறு. என்ன ஆகிவிடப் போகிறது என்று ஒரு கை பார்த்து விட வேண்டும் தானே.

EmployeeAppreciationDay

உங்களின் மேலதிகாரிகள் வந்து உங்களுக்கு இந்த வருடம் ரூ.1000 கூட்டுகிறோம். அதே போல் நீங்கள் எங்களுக்கு உற்பத்தித்திறனை கூட்டித் தாருங்கள் என்று கேட்டால் நம்முடைய முயற்சி எப்படி இருக்கும்? இதே போல் நீங்கள் செய்த வேலைக்காக உங்களைப் பாராட்டி “well done” என்று கூறினால் அது கிளர்ச்சியை நமக்குள் உருவாக்கி அவர்கள் கேட்பதற்கு முன்னமே அந்த வேலையை முடிக்க உற்சாகப்படுத்தும்.

நடத்தை மற்றும் அறிவியல் பேராசிரியரான டாக்டர்.ஆஷ்லே வில்லன்ஸ் (DR.ASHLEY WHILLANS)” என்பவர், “குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தனக்கான பாராட்டையே அதிகம் எதிர்பார்க்கின்றனர்; அதனால், தொழிற்சாலையில் ஒரு பணியாளர் தனக்கான பாராட்டை எதிர்பார்ப்பது ஒன்றும் தவறு அல்லவே” என்கிறார்.

also read: “எவன்டா மேல.. எவன்டா கீழ.. எல்லா உயிரையும் ஒன்னாவே பாரு…!” பூஜ்ஜிய பாகுபாடு தினம் இன்று!

பாராட்டுதலின் நன்மைகள்:

நமக்கான பணியை நாம் சிறப்பாய் செய்தால், பாராட்டுகள் நிச்சயமாய் நம்மை வந்து சேரும். இதனைத் தான் வள்ளுவர்

“தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும்” என்றார்.

இவ்வாறு, நாம் பெறும் பாராட்டு, நம்முடைய உற்பத்தித்திறனையும், வேலையில் நமக்கு இருக்கும் மன அழுத்தத்தையும் குறைக்கும்.  நிறுவனத்தை குறைகூறிக் கொண்டே இருக்கும் சிலருக்கும் அவர்களுக்குகான அங்கீகாரத்தை நாம் கொடுக்கும் பொழுது, அவர்களின் குறைகளும் குறையும். பணியாளர்களுக்கு நிறுவனத்தின் மேல் நம்பிக்கையும் அதிகரிக்கும். நல்ல பாராட்டும், அங்கீகாரமும் கிடைத்த ஒருவர் அந்த நிறுவனத்தை விட்டு வெளியேற வாய்ப்புகளும் குறைவு தான்.

EmployeeAppreciationDay

நம் எல்லோருக்கும் தெரிந்த வால்ட் டிஸ்னி ரெசார்ட் வேர்ல்ட் (walt disney resort world) அங்கு இருக்ககூடிய மேற்பார்வையாளர், அடிக்கடி அங்கு இருக்ககூடிய ஊழியர்கள் எடுக்கக் கூடிய சிறிய முயற்சியிலிருந்து பெரிய முயற்சி வரை பாராட்டுவாராம். அதனால், 15% ஊழியர்களுக்கு அங்கு வேலை பார்ப்பது திருப்தியாக இருந்ததாம்; சுற்றுலா பயணிகளும் ஊழியர்களின் கவனிப்பால் திருப்தி அடைந்தனராம். அதனால் அந்த நிறுவனத்திற்கு லாபமும், பேரும், புகழும் கிடைத்தது.

AON என்றழைக்கப்படும் நிறுவனம் ஒரு மிகப் பெரிய கணக்கெடுப்பை மேற்கொண்டது. 80 இலட்சம் ஊழியர்கள், 1000 தொழிற்சாலையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களிடம் உங்களுக்கு ஊக்கத்தை தருவது எது? என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு, பாராட்டும், அங்கீகாரமும் தான் தங்களுக்கு ஊக்கமளித்ததாக கூறியுள்ளனர். மேலும், “அதிகமாக சம்பளமும் வேண்டாம், அதிகமான வசதிகளும் வேண்டாம், எங்கள் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைத்தாலே போதும்” என்று கூறி அசத்தியுள்ளனர்;

EmployeeAppreciationDay

நீங்களே ஒரு நிறுவனராகவும், மேலதிகாரியாகவும், குழுதலைவராகவும் இருக்கலாம். உங்கள் குழுவில் உள்ளவர்களுக்கு பாராட்டையும், அவர்கள் அடுத்தபடி உயர்வதற்கான வழியையும் கூறுங்கள்.

உங்கள் ஊழியர்களை பாராட்டும் முன், அவர்களின் பெயர், மற்றும் அவர்கள் செய்த வேலை மற்றும் அது நிறுவனத்திற்கு எந்த மாதிரியான மதிப்பை ஏற்படுத்தியது என்பதனைக் கூறி பாராட்டினால் இன்னும் உற்சாகமடைவார்கள்.

சக்தியெல்லாம் ஒன்று சேர்ந்தாலே…, சொர்க்கம் வரும் இந்த மண் மேலே…”

உங்கள் கருத்து

Your email address will not be published.

ட்ரெண்டிங் நியூஸ்

News TN Special

News TN Special