ஹோலி தெரியும்! ஹோலி ஏன் கொண்டாடுகிறோம் என்று தெரியாது!

சேதிகேளு  Published on: 17 மார் 2022, 3:03 pm Edited on: 31 மார் 2022, 12:24 pm

ஹோலியா அது மார்வாடி பண்டிகை-ல! என்று வடிவேலு ஜோக்கில் கேட்டு இருப்போம்! இன்னும் பல பேர் ஹோலி எதற்காக கொண்டாடுகிறோம் என்று தெரியாமலே கொண்டாடி இருப்போம்! சரி விடுங்க இவ்வளவு நாள் தெரியாம இருந்துட்டோம்… இனி தெரிஞ்சுபோம் வாங்க!

ஹோலி என்றாலே நமக்கு தெரிந்ததெல்லாம் கலர் பூசுவது மட்டுமே.

தமிழ்நாட்டில் எப்படி தீபாவளி, பொங்கலோ அதே போன்று தான் வடநாட்டில் கொண்டாடப்படும் ஒரு இந்துக்கள் பண்டிகையாகும். ஆனால், இப்பொழுதோ ஜாதி, மத, பேதமின்றி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்தியாவில் மட்டுமின்றி பல நாடுகளிலும் இந்த நாளை கொண்டாட ஆரம்பித்து விட்டோம். இந்தப் பண்டிகை முக்கிய இடங்களான நேபாளம், இந்தியா, வங்கதேசம், போன்ற நாடுகளிலும் சுரிநாம், கயானா, தென்னாப்பிரிக்கா, திரினிதாத், இங்கிலாந்து, மொரீசியசு மற்றும் பிஜி போன்ற இந்து மக்கள் பரவலாக வாழும் நாடுகளிலும் விரிவாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. பல வண்ணங்களை பூசி கொண்டாடும் இந்த நாள் அனைவருக்கும் ஒரு வித உற்சாகத்தை ஏற்படுத்துகிறது என்றே கூறலாம்.

holi

இந்த வண்ணமயமான நாளை கொண்டாடும் முன் இந்நாள் தோன்றின வரலாற்றை தெரிந்துகொள்ள வேண்டும் அல்லவா?

இந்த ஹோலி விழா கொண்டுவதற்கு பல்வேறு புராணங்கள் உள்ளன. ஹோலி அல்லது ‘அரங்க பஞ்சமி’ என்று அழைக்கப்படும் இந்த பண்டிகை, இந்து மதத்தின் பிரபலமான இளவேனிற்காலப் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகை தமிழ் மாதங்களில் இறுதி மாதமான பங்குனி மாதம், ஆங்கில மாதத்திற்கு மார்ச் மாதம் பெளர்ணமி அன்று கொண்டாடப்படுகிறது.

வண்ணங்களின் பண்டிகையான இந்த ஹோலி எப்படி வந்தது என்று பார்க்கும்போது, அதன் புராண கதைகளான ஹோலிகா பிரகலாதன் கதை, சிவன் பார்வதி காதலுக்கு உதவ நினைத்த மன்மதனின் கதை, இந்த பண்டிகை. கண்ணன் கருமையாக இருந்ததற்காக அவர் அன்னை கண்ணன்  மேல் வண்ணம் பூசிய கதை, மேலும் ராதாவும் கிருஷ்ணரும் விளையாடிய விளையாட்டே இந்த பண்டிகையாக மாறியது  போன்ற பல புராணங்களின் கதையை இங்கு காணலாம்.

அசுரர்களில் ஒருவனான ‘இரனிய கசிபு’ பிரம்மனை வேண்டி கடும் தவத்தினால் சிக்கலான ஒரு வரத்தை மேற்கொண்டார். அவன் தன்னையே எல்லோரும் கடவுள் என்று தொழ வேண்டும் என்று எண்ணினார். இரணியனின் மகன் பிரகலாதனுக்கு அவரின் அந்த கட்டளை பிடிக்கவில்லை.

பிரகலாதன் மகாவிஷ்ணு ஒருவரையே கடவுளாக வழிபட்டு வந்தான். இதையறிந்த இரணியன், மகனென்றும் பாராமல் பிரகலாதனை பல வகையில் துன்புறுத்தி, தன்னையே கடவுள் என தொழும்படி வற்புறுத்தினார்.  இதற்கு ஒரு வழியை காண நினைத்த இரணியன் தன் சகோதரி ஹோலிகாவின் உதவியை நாடினார்.

holi

ஹோலிகா, நெருப்பினால் எரியாத தன்மை படைத்தவள். எனவே, தன் மகன் பிரகலாதனை அழிக்கும் பொருட்டு இரணியன் ஒரு சதி செய்தார். பிரகலாதனை தன் மடியில் அமர்த்திக் கொண்டு ஹோலிகாவை நெருப்பின் நடுவில் அமரும்படி கட்டளையிட்டார். மகாவிஷ்ணுவை மனதில் நினைத்தபடி ஹோலிகாவின் மடியில் அமர்ந்தான் பிரகலாதன். பிரகலாதன் நெருப்பில் எரிந்து விடுவான் என்று இரணியன் எண்ணினார். அதன் படி ஒரு பெரிய தீ மூட்டி, அதில் பிரகலாதனுடன் அமர்ந்தாள். அப்போது பிரகலாதன் மகாவிஷ்ணுவை வேண்டியதும் ஒரு போர்வை பறந்து வந்து பிரகலாதனை மூடிக்கொண்டது. மகாவிஷ்ணுவின் கருணையால் பிரகலாதன் நெருப்பிலிருந்து காப்பாற்றபட்டான். ஹோலிகா நெருப்பில் எரிந்து சாம்பலாக்கப்பட்டார். இப்படி “தீங்கிழைக்க நினைத்த ஹோலிகா தீயில் பலியானதை தான் ஹோலி என எல்லோராலும் கொண்டாடப்படுகிறது”.

‘துலன்னி’ என்று அழைக்கப்படும் ஹோலியின் முக்கிய நாளில் ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளையும், வண்ணங்கள் கலந்து பொடிகளை நீரில் கலந்து தெளித்து விளையாடி மகிழ்வது வழக்கம். ஹோலிக்கு முன்னதாக பெரிதாக நெருப்பு மூட்டி கொண்டாடுவார்கள். அதற்கு ‘சோட்டி ஹோலி’ அல்லது ‘ஹோலிகா தகனம்’ என்று வேறு பெயர்களும் உண்டு.

Also read: துல்கர் சல்மானின் நடிப்பிற்கு இனி தடை! – கேரள திரையரங்கம் அதிரடி!

holi

ஹோலி பற்றி எவரும் அறிந்திராத உண்மைகள் மற்றும் நன்மைகள்!

வசந்த காலப் பருவ மாற்றத்தின்போது நச்சுயிரிகள் சார்ந்த காய்ச்சலும் சளியும் ஏற்படும். இதனால் இயற்கையான வண்ணம் நிறைந்த தூள்களை விளையாட்டாகத் தூக்கி எறிவதால் பல்வேறு மருத்துவப் பயன்கள் கிடைப்பதாகக் கருதப்படுகிறது. இந்த வண்ணங்கள் ஆயுர்வேத மருத்துவர்களால் பரிந்துரைச் செய்யப்பட்டு வேப்பிலை, குங்குமம், மஞ்சள், வில்வம், மற்ற மருத்துவ மூலிகைகளினால் மரபு முறையில் செய்யப்படுகின்றன.

இப்பண்டிகையின் போது ‘தண்டை’ என்றழைக்கப்படும் ஒரு சிறப்பு பானம் செய்யப்படும். ஈர வண்ணங்களுக்காக மஞ்சள் வண்ண நீரைத் தயாரிக்க, பாரம்பரிய பலாஷ் மலர்களைக் கொதிக்கவைத்து தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து இந்த மருத்துவ குணங்கள் கொண்ட வண்ண நீரை பூசுவதும் உண்டு. துரதிர்ஷ்டவசமாக, இக்கொண்டாட்டத்தின் வணிகநோக்குப் பார்வை, செயற்கை வண்ணங்களை அதிகமாகப் பயன்படுத்துவதற்கு வழிவகுத்துள்ளது. தற்போது, வண்ணங்கள் அனைத்திலும் நஞ்சு கலந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

முன்பு, ஹோலியைக் கொண்டாடுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட வண்ணங்களைக் கொடுத்துக்கொண்டிருந்த இளவேனிற்காலத்தில் இருந்த அரும்பும் மரங்கள் அழிந்துவிட்டதால், அதற்குப் பதிலாகத் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் செயற்கைச் சாயங்களே இந்தியாவின் பெரும்பாலான நகர்புறங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

ரசாயனம் கலந்த பொடிகளை நாம் உபயோகிப்பதால் தோல் நிறமாற்றம் தோல் அழற்சி போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, ரசாயனம் கலந்த பொடிகளை தவிர்ப்பது சிறந்தது.

holi

பாரம்பரிய ஹோலி தின கொண்டாட்டத்திற்காக உண்டாக்கும் நெருப்பே, சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடிய பிரச்சனையாக உள்ளது. இந்த நிகழ்வு வன அழிப்புக்கு வழிவகுப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த மரக்கட்டை பயன்பாட்டைத் தடுப்பதற்காக மரக்கட்டைகளுக்கு பதிலாக தேவையில்லாத பொருட்களை எரித்தல், பல சிறிய நெருப்புக்களை மூட்டுவதற்குப் பதிலாக ஒரே ஒரு நெருப்பை மூட்டுதல் உள்ளிட்ட வழிமுறைகளை கடைபிடித்தல் சிறந்தது.

இந்த ஹோலி நாளில் துன்பங்களை தூக்கி எரிந்து, வண்ணங்களை எப்பொழுதும் நம் உடலில் அல்ல, உள்ளங்களில் பூசிக்கொண்டு வாழுவோம்!

உங்கள் கருத்து

Your email address will not be published.

ட்ரெண்டிங் நியூஸ்

News TN Special

News TN Special