“காடுகள் இன்றி அமையா உலகு”… சர்வதேச காடுகள் தினம்!

சேதிகேளு  Published on: 21 மார் 2022, 5:16 pm Edited on: 29 மார் 2022, 4:34 pm

‘நீரின்றி அமையாது உலகு’ என்பது போல காடுகள் இன்றியும் உலகு அமையாது. காடுகள் மனிதனின் வாழ்வில் பெரும் பங்களிப்பை நல்குகிறது. இன்று சர்வதேச காடுகள் தினம்!

2012-ஆம் ஆண்டு யுனைடெட் ஜெனரல் நேஷனல் அசெம்ப்ளியின் ஆணைப்படி ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 21-ஆம் தேதி சர்வதேச காடுகள் தினம் (World Forest Day) கொண்டாடப்பட்டு வருகிறது.

1971-ஆம் ஆண்டு முதல் முறையாக 23-ஆம் ஐரோப்பியன் விவசாய மாநாட்டில் காடுகளைப் பற்றிய முக்கியத்துவத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு மார்ச் 21-ஆம் தேதி காடுகள் தினம் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

சர்வதேச காடுகள் தினம் என்பது பண்டிகைப் போல கொண்டாடப்படுவது அல்ல. காடுகளின் நன்மைகளை எடுத்துரைப்பதற்காக ஏற்படுத்தும் விழிப்புணர்வு ஆகும்.

ஒரு நிலமானது வாழ்வதற்கு ஏற்றதா? இல்லையா? என்று காடுகள் தான் முடிவு செய்கின்றன. இயற்கை வளங்களான காடுகள், நீர் நிலைகள், பறவைகள், விலங்குகள், ஜீவராசிகள் அனைத்தும் மனித வாழ்வுக்குத் தேவையான பொக்கிஷங்கள். இவற்றின் பாதுகாப்பு சுற்றுச்சூழல் சமநிலை மீது ஆதாரப்பட்டுள்ளது.

FOREST

ஆனால், இன்றைய நவீன காலகட்டத்தில் காடுகளை அழித்து பெரும் கம்பெனிகளையும், ரயில் தண்டவாளங்களையும் கட்டிக் கொண்டிருக்கிறோம். நாட்டின் வளர்ச்சியானது காடுகளை அழிப்பதன் மூலம் பெருகக் கூடாது. அதனை மேம்படுத்துவதன் மூலம் வளர வேண்டும்.
ஒரு நாட்டில் 33 சதவீதம் காடுகள் இருக்க வேண்டும் என்ற விதி இருந்தாலும், சாலைகள், குடியிருப்புகள் மற்றும் பாலங்களுக்காக காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன.

காடுகள் என்பது வன உயிரிகளுக்கு தாய்பூமியாக செயல்படுகிறது. ஒரு மனிதன் நிலத்தில் வளமாக வாழ்வதற்கு, வனத்தில் மிருகங்கள் நலமாக வாழ வேண்டும்.

காடுகளை அழிப்பதன் மூலம் பரப்பளவு குறைந்து விலங்குகள், மனித இடங்களுக்கு வருகிறது. இதனால் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதுமட்டுமல்லாமல், தண்ணீர் தட்டுப்பாடு, நிலச்சரிவு என பல இயற்கை பேரிடர்கள் காடுகளை அழிப்பதன் மூலமாகவே வருகிறது.

உலகில் அமேசான் காடு முதல் கடைக்கோடியில் உள்ள காடுவரை அனைத்தும் அழிக்கப்பட்டு வருகின்றன. இதனால், பூமி வெப்பமாகி காடுகள் தீப்பிடித்து வருகின்றன. இதன்மூலம், வன விலங்குகள் பலவும் உயிரிழந்து வருகின்றன.

உலக வனத்துறையின் சட்டப்படி ஒரு மரத்தை வெட்டும் போது 10 மரக்கன்றுகளை நட்டு வைக்க வேண்டும். ஆனால், கடந்த 20 ஆண்டுகளில் ஒரு சதவீதம் மட்டுமே புதிய மரங்கள் நடப்பட்டுள்ளன. மரங்களின் வேர்கள் மண்ணில் ஊடுருவி இருப்பதாலேயே மண்ணின் கெட்டித்தன்மை மாறாதிருக்கிறது.

மரங்கள் இல்லையென்றால் மண் இளகி நிலச்சரிவோ அல்லது புதைமணலாகவோ மாறும் நிலைமையாகிவிடும். காடுகளில் கிடைக்கும் மூலிகைகளைக் கொண்டே இன்றைக்கும் ஆயுர்வேத, சித்த வைத்திய முறைகள் செயல்பட்டு வருகின்றன. மரங்கள் கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சி ஆக்ஸினை வெளியிடும் செயலைச் செய்யாவிட்டால் மனிதன் என்ற ஜீவனே உலகில் இல்லாமல் போய்யிருக்கும்.

FOREST

மேலும், கொரோனா காலத்தில் தான் முழுமையான சுத்திகரிக்கப்பட்ட காற்றை சுவாசித்திருப்போம். ஏனென்றால் கொரோனாவின் முழு ஊரடங்கில் தான் நாடு முழுவதும் எந்த ஒரு மாசும் இல்லாமல் பூமி தன்னுடைய இயற்கையான சுழற்சியில் சுழன்றது. அதுமட்டுமல்லாமல், கொரோனா காலத்தில் வளிமண்டலத்தில் மாசுகளும் குறைந்தன. அதனால், பருவ மழைகளும் தவறாது பெய்தன.

ஒரு மனிதனானவன் வெப்பம், மற்றும் காற்று மாசுவினால் கிராமங்களுக்கு சென்று விடுவோம் என்று நினைக்கிறானே தவிர இருக்கும் இடத்தில் ஒரு மரத்தினை நட்டு வைக்க வேண்டும் என்று எண்ணுவதில்லை.

ஒரு செடியானது வீட்டில் உள்ள நான்கு பேருக்கு தேவையான ஆக்சிஜனை வெளியிடுகிறது. அதுமட்டுமல்லாமல், “ஒரு ஏக்கர் காடு, ஆறு டன் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி, நான்கு டன் ஆக்சிஜனை வெளியிடுகிறது. இது 18 பேரின் வருடாந்திர தேவைகளை பூர்த்தி செய்யப் போதுமானது” என்று கண்டறிந்து யு.எஸ் வேளாண்மைத் துறை அறிவித்துள்ளது.

இப்படி, காடுகளினால் பல நன்மைகள் உள்ளன. மேலும் மரங்களை வளர்க்கக் கோரி பல தலைவர்கள் பல வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல், திருமண விழாக்களில் பரிசாக செடிகளையும், விதைகளையும் கொடுக்கின்றனர். இவ்வாறு பல வழிகளில் காடுகளை பராமரிக்கவும், மரங்களை வளர்க்கவும் மக்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

Also Read: டீசல் விலை உயர்வா…? கவலையில் தமிழ்நாடு அரசு…!

மேலும், காடுகளை பற்றி மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி. அப்துல்கலாம் கவிதை ஒன்று எழுதியுள்ளார்.

நான் ஒரு குருவியை வளர்த்தேன். ஆனால், அது பறந்து விட்டது. நான் ஒரு அணிலை வளர்த்தேன். அதுவும் ஓடிவிட்டது. பின்னர் நான் ஒரு மரம் வளர்த்தேன். அவை இரண்டும் திரும்பி வந்தன”.

காடுகளை அழித்து விட்டு ஒவ்வொரு நாளும் சிட்டுக் குருவி தினம், காடுகள் தினம் என்று நாட்களை மட்டுமே கொண்டாடி வருகிறோம். நாட்களை கொண்டாடுவதை விட்டு விட்டு அதற்கான செயல்பாடுகளில் ஈடுபடுவோம் நம் இளைய தலைமுறையினருக்கு இயற்கையை பரிசாக வழங்குவோம்.

உங்கள் கருத்து

Your email address will not be published.

ட்ரெண்டிங் நியூஸ்

News TN Special

News TN Special