வாக்சின் போடுங்க மக்கா…! வாக்சின் போடுங்க…! தேசிய தடுப்பூசி தினம் இன்று!

சேதிகேளு  Published on: 16 மார் 2022, 12:27 pm Edited on: 23 ஏப் 2022, 5:14 pm

இப்போதெல்லாம் வாக்சின், மாஸ்க், சானிடைசர், கொரோனா, வீட்டில் இருத்தல், விழித்திருத்தல் என்ற வார்த்தைகளை கேட்டே பழகிவிட்டோம்! தடுப்பூசி என்பது இப்பொழுது கொரோனா காலத்தில் வந்தது கிடையாது.

தடுப்பூசி போடும் நடைமுறை நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னமே நடைமுறையில் இருந்து வந்தது. உதாரணத்திற்கு கி.பி 1000­ஆம் ஆண்டே சீனர்கள் பெரியம்மைக்கான தடுப்பூசியை பயன்படுத்தி உள்ளனர்.

தடுப்பூசி என்றால் என்ன?:

தடுப்பூசி என்றாலே “ வரும் முன் காப்பதே சிறந்தது” என்ற கூற்றுக்கு உதாரணம். ஒரு நோய் நமக்கு முதலில் வரும்போது அந்த நோய்க் கிருமியை கண்டறிந்து அதை அழிப்பதற்கு நேரம் எடுக்கும், அதே நோய் கிருமி இன்னொரு முறை வரும்பொழுது அதனை நேரடியாக அழிக்கக் கூடிய ஞாபக சக்தியைப் பெற்று இருக்கும் இந்த தடுப்பூசி. இதனால் நோய்த் தொற்றில் இருந்து விடுபடலாம். தடுப்பூசிகள் ஒவ்வொரு ஆண்டும் 2.5 மில்லியனுக்கு அதிகமான உயிர்களை காப்பாற்றுகின்றன.

தடுப்பூசிகள் வெவ்வேறு வழிகளில் வழங்கப்படும். சில தடுப்பூசிகள் ஷாட்களாகவும், சில தடுப்பூசிகள் வாய் வழியாகவும் வழங்கப்படும்.

குழந்தைகளுக்கு எட்டு வாரங்கள் முதல் தடுப்பூசி போடப்படுகிறது.

தடுப்பூசி என்பது ஒரு செயலிழந்த வைரஸ்-ஐ மனித உடலுக்குள் செலுத்துதல் ஆகும்.

vaccine

ஏன் தடுப்பூசி போட வேண்டும்?

தடுப்பூசி என்பது நோய்த் தொற்றுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி தான். நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு அதிகமாக இருந்தால் தான், வரும் நோயைத் தடுக்க நமது உடல் தயாராக இருக்கும். உதாரணத்திற்கு கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட பலருக்கு நோய் எதிர்ப்பு சக்தியின் அளவானது அதிகம் இருந்ததாக கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

நம்மில் பலர் தடுப்பூசி எடுத்து கொள்ள தயங்குகிறோம். தடுப்பூசி என்பது எல்லோராலும் போடக் கூடிய ஒன்று தான் நாம் பயப்படும் அளவிற்கு எந்த ஒரு மாற்றமும் இருக்காது. என்ன சிறிது உடல் சோர்வாகக் காணப்படும் ஒரு, இரு நாட்களுக்கு. தடுப்பூசி போட்ட இடத்தில் சிறிது வலி இருக்கும்.

ஆஸ்திரேலியாவில் குழந்தை, இளமை மற்றும் முதுமை  பருவத்தில் தடுப்பூசிகள் கொடுக்கப்படுகின்றன. பயங்கரமான நோய்த் தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாப்பதற்காகத் தடுப்பூசி போடப் படுகிறது.

தடுப்பூசி வளர்ந்த வரலாறு:

தடுப்பூசியின் நிறுவனரான எட்வர்ட் ஜென்னர் 1976-இல் 13-வயது சிறுவனுக்கு பெரியம்மை நோய்த் தடுப்பூசியான கௌபாக்ஸ் என்ற தடுப்பூசியை அறிமுகப்படுத்தினார். 1798-ஆம் ஆண்டில் முதல் பெரியம்மை தடுப்பூசி உருவாக்கப்பட்டது. மேலும், 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் இந்த பெரியம்மை தடுப்பூசி, 1979-ல் நோயை ஒழிக்க வழிவகுத்தது. 1997-ற்கு பிறகு, பெரியம்மை ஒன்றும் பதிவு செய்யப்படவில்லை. பெரியம்மை முற்றிலும் ஒழிக்கப்பட்டது.

லூயிஸ் பாஸ்டரின் சோதனைகள் காலரா மற்றும் செயலிழந்த ஆந்த்ராக்ஸ் தடுப்பூசியின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது. மேலும், பிளேக் 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. 1890 மற்றும் 1950 க்கு இடையில் நாம் பயன்படுத்தும் BCG-த் தடுப்பூசி எனப்படும் தடுப்பூசி காசநோய், டிபிடி கக்குவான், தொண்டை அடைப்பான், ரண ஜன்னி, மீசல்ஸ் தட்டம்மை போன்ற நோயைத் தடுக்கிறது. மேலும், பாக்டீரியா தடுப்பூசி வளர்ச்சியும் அதிகரித்தது.

Also read: கொடுமையை கண்டு கண்டு பயம் எதற்கு? நீ கொண்டு வந்தது என்னடா மீசை முறுக்கு? உலக நுகர்வோர் உரிமைகள் தினம் இன்று!

vaccine

1923-ம் ஆண்டில் ஃபார்மால்டிஹைடு, டன் டெட்டானஸ், நச்சுத்தன்மையை செயலிழக்க செய்வதற்கான தடுப்பூசியை அலெக்ஸ்சாண்டர் க்ளேனி ஆய்வு செய்தார். 1926 டிப்தீரியா தடுப்பூசி உருவானது. 1950 முதல் 1985 வரை உருவாக்கப்பட்ட வைரஸ் திசு வளர்ப்பு முறைகள் சால்க் சபின்களின் வருகைக்கு வித்திட்டது. வெகுஜன தடுப்பூசியாக போலியோ உலகளவில் பல நாடுகளில் கிட்டதட்ட அழிக்கப்பட்டது.

கடந்த ஆண்டை விட தடுப்பூசி  தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ளது, என்றே கூறலாம். ஒவ்வொரு ஆண்டும் மார்ச்.16 ஆம் தேதி இந்திய அரசால் தேசிய தடுப்பூசி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. மார்ச்.16, 1955 அன்று, பல்ஸ் போலியோ(PULSE POLIO) நோய்த்தடுப்பு திட்டம் செயல்பாட்டிற்கு வந்தப் பிறகு, இந்த நாள் முதன் முதலில் அதிகாரப்பூர்வமாக கொண்டாடப்பட்டது. 1988ஆம் ஆண்டு தொடங்கிய உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய போலியோ ஒழிப்பு முயற்சியின் கீழ், வாய்வழி போலியோ தடுப்பூசியின் முதல் டோஸ் 1955 இல் வழங்கப்பட்டது. 0-5 வயது உள்ள குழந்தைகளுக்கு சொட்டு மருந்தாக வழங்கப்பட்டன. போலியோவுக்கு எதிரான தடுப்பூசி 1978 இல் தொடங்கப்பட்டது. மார்ச்.27, 2014 அன்று உலக சுகாதார நிறுவனம் இந்தியாவை போலியோ இல்லாத நாடாக அறிவித்தது.

vaccine

ஹபடைடிஸ் பி மற்றும் பருவக்கால காய்ச்சல் தடுப்பூசிகளின்  வெற்றிகரமான வளர்ச்சி மற்றும் உற்பத்தியும் உயர்ந்துள்ளது. ஒவ்வாமை தன்னுடல் தாக்க நோய்கள் மற்றும் அடிமையாதல்  ஆகியவற்றுக்கான சிகிச்சை, தடுப்பூசிகள் உட்பட தொழில் நுட்பத்துடன் கூடிய தடுப்பூசிகளின் உற்பத்தியும் உயர்ந்துள்ளது.

இருப்பினும், இன்றைய காலக்கட்டத்தில் பன்றி காய்ச்சல், டெங்கு போன்ற நோய்கள் தடுப்பூசிகளுக்கே பெரும் சவால் தான்.

பெரிய அளவிலான தடுப்பூசி தயாரிப்பு:

தற்போது வரை இருக்கும் பெருந்தொற்றான கொரோனாவிற்கான மருந்து பூனேவில் உள்ள தேசிய வைரஸ் ஆராய்ச்சி மையத்தில் கோவிட்-19 நோய்க்காரணிக்ககான SARS-COV-2 வைரஸின் ஸ்ட்ரெய்ன் தனிமைப் படுத்தப்பட்டு, பாரத் பயோடெக் நிறுவனத்தில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியா கண்டுபிடித்துள்ள கோவிட்-19 நோய்க்கான எதிர்ப்பு தடுப்பூசி, கோவாக்ஸின் ஆகும். இதனை பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் இந்த மருந்தை எடுத்துக் கொள்ள யாரும் முன் வரவில்லை. பின்பு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி கோவாக்ஸின் முதல் ஷாட்டை எடுத்துக்கொண்டார். பின்பு, அனைவரையும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளுமாறும், கொரோனா இல்லாத இந்தியாவை உருவாக்கவும் வலியுறுத்தினார். மேலும், அவர் இந்த உலகளாவிய போராட்டத்தை வலுப்படுத்த உதவிய மருத்துவர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் நன்றி  செலுத்தினார்.

vaccine

ஏன் இந்த நாள் முக்கியம்:

தடுப்பூசிகள் மற்றும் தடுப்பூசி திட்டங்கள் உயிர்களை காப்பாற்றுகின்றன. மேலும், மனிதர்களின் ஆரோக்கியமான சமூக, பொருளாதார வாழ்க்கைக்கும் உதவுகின்றன. எனவே, குழந்தைப் பருவத்தில் இருந்தே முறையான தடுப்பூசியை செலுத்தி நோயற்ற உலகை உருவாக்குவோம். தடுப்பூசிகளின் வளர்ச்சி என்பது மனிதனின் மிகப்பெரிய மற்றும் இன்றியமையாத சாதனைகளில் ஒன்றாகும். தேசிய தடுப்பூசி தினம் மருத்துவ அறிவியலின் வெற்றிகளைக் கொண்டாடக்கூடிய ஒரு தினமாகும்.

நாம் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்யும், ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்க தேசிய தடுப்பூசி தினம் சரியான வாய்ப்பாகும். நம் உயிரைக் காக்கும் தடுப்பூசிகளை உருவாக்க அவர்கள் அயராது உழைக்கின்றனர்.

தடுப்பூசி பற்றி பலர் எழுப்பும் தவறான தகவல்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் நாளாகவும், தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் நாளாகவும் இந்த நாள் அமையட்டும்!

உங்கள் கருத்து

Your email address will not be published.

ட்ரெண்டிங் நியூஸ்

News TN Special

News TN Special