தேசிய கீதம் செய்த “குடி”அரசியல் – ஒரு சிறப்பு பார்வை

சேதிகேளு  Published on: 26 ஜன 2022, 12:00 pm Edited on: 27 ஜன 2022, 2:57 pm

ஒரு நாட்டின் அடையாளங்களையும், ஒரு நாட்டின் வளங்களையும் பறைசாற்றும் வகையில் பாடப்படும் பாடல் தான் “தேசிய கீதம்”

உலக நாடுகளில் இருக்கும் அனைத்து மக்களுக்கும் இந்தியாவின் பெருமையை பறைசாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது நம் இந்தியாவின் தேசிய கீதமான, “ஜன கண மன” பாடல். இந்த பாடலை எழுதியவர், வங்க தேசத்தின் எழுத்தாளரான “ரவீந்திரநாத் தாகூர்”.

இந்தியா போன்ற அதிக பாரம்பரியம், கலாச்சாரம், வளமைகளை கொண்ட ஒரு நாட்டினை பற்றி ஒரே பாடலில் சொல்லிவிட முடியுமா என்பதில் பலவிதமான எதிர்க்கருத்துக்கள் வெளியாகி வந்தன.

இதற்கிடையில் தான், 1950 ஜனவரி 26 ஆம் நாள் இந்தியா குடியரசு அடைந்த நாளில், “ஜன கண மன” தேசிய கீதமாகவும், “வந்தே மாதரம்” தேசிய பாடலாகவும் முடிவு செய்யப்பட்டது.

Republic day

இன்றைய நம் நாட்டின் தேசியகீதம், அதன் பதவியை அடைய ஏராளமான எதிர்ப்புகளை தாண்டி தான் வந்துள்ளது என்பதே நிதர்சனமான உண்மை.

இந்தியாவில் முகலாயர்கள்

இந்தியா என்பது பற்பல மாகாணங்களாக, தனித்தனி மன்னர்களால் ஆளப்பட்டு வந்தது. அப்படி ஆளப்பட்டு வந்த இந்த வரலாற்று நாட்டில் 1526 முதல் 1712 வரை முகலாய மன்னர்களின் ஆட்சி உச்சத்தில் இருந்தது.

அதற்கு முதல் காரணமாக இருந்தவர் முகலாய மன்னர் பாபர். பாரதம் என்றும் இந்துஸ்தானம் என்றும் அறியப்பட்ட அக்காலத்து இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் போன்ற அனைத்து நாடுகளையும் அடக்கிய ஒரு பெரும் நிலப்பரப்பாக இருந்தது.

முகலாய மன்னர்களான பாபர், அக்பர், ஜெஹாங்கீர், ஷாஜகான் மற்றும் ஔரங்கசீப் போன்றவர்களின் நாடு பிடிக்கும் ஆசையினாலும், தொடர்ந்து நடந்த போர்களாலும் நாட்டின் நிலப்பரப்பு மேலும் பெரிதாகி கொண்டே சென்றது.

அத்தகைய சமயங்களில் இந்தியாவை ஒருங்கிணைக்கும் புரட்சி கவிதைகளின் தேவை இருக்கவில்லை. முகலாய மன்னர்களின் ஆட்சியின் போதும் சரி, அதற்கு முன்னதாக இருந்த விஜயநகர பேரரசின் ஆட்சிக் காலத்திலும் சரி அப்போது இருந்த இந்தியாவின் நிலப்பரப்பை விட சோழ மன்னர்களின் ஆட்சி காலத்தில் சோழ அரசர்களின் கடல்தாண்டிய ஆளுமையினால் அதன் சாம்ராஜியம் கடல் கடந்தும் விரிந்து காணப்பட்டது என்பது இந்த நேரத்தில் நினைவுக் கூற தக்கது.

Also Read: இந்திய அரசியலமைப்பு தினம் பற்றி தெரியாத உண்மைகள்

காலணி ஆதிக்கம்

1750 ஆம் ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் காலணி அதிக்கம் நிலைபெற்றிருந்த காலத்தில், இந்திய நாட்டின் தேசிய கீதமாக, பிரிட்டனின் “காட் சேவ் தி குயின்” என்ற பாடலே இருந்து வந்தது.

காலணி-ய கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி இந்தியாவில் வேருன்றியது இந்திய மக்களுக்கு சறுக்கலாக அமைந்தது என்றால், 1765 ஆம் ஆண்டிலிருந்து ”திவான்” என்ற நிலவரி வசூலிக்கும் முறையை வங்கதேசம், பீகார், ஒடிசா போன்ற நகரங்களில் காலணி அரசால் கொண்டு வரப்பட்டது கூடுதல் சிக்கல்களை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து 1773 ஆம் ஆண்டு காலணி ஆதிக்கத்தின் மூலம் இந்தியாவில் நுழைந்த பிரிட்டன் அரசு காலணி ஆதிக்கத்தை அழித்து “பிரிட்டன் – இந்தியா” சட்டத்தை இந்தியாவில் அமல்படுத்தியது.

இத்தகைய காலக்கட்டத்தில் தான் இந்திய மக்கள் தங்களையே தாங்கள் வெறுக்கும் அளவிற்கு பல கொடுமையான சட்டங்களால் பாதிக்கப்பட்டனர். இதன் விளைவாகத்தான் 1857 ஆம் ஆண்டு இந்தியாவில் “சிப்பாய் கழகம்” தோற்றுவிக்கப்பட்டது.

Republic day

மக்களுக்கு அந்த அமைப்புகளின் மூலம் தான் சுகந்திர போராட்ட உணர்வு மேலிடத் தொடங்கியது. நாடெங்கும் மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். சுதந்திர உணர்வை மேம்படுத்தும் வகையில், மக்கள் நாடகங்கள் வாயிலாகவும், பாடல்கள் வாயிலாகவும் கிளர்ச்சிகளை ஏற்படுத்தினர்.

1911 டிசம்பர் 27

அந்த வகையில் தான், 1911 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் நாள் காங்கிரஸ் கட்சியின் அன்றைய தலைவரான பிஷன் நாராயண்தர், முவேந்தர் நாத் போஸ், அம்பிகா சர் போன்றோருடன், அன்றைய பிரிட்டன் நாட்டின் மன்னரான ஐந்தாம் ஜார்ச் மன்னரும் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.

இந்த கூட்டத்தின் போது தான், ரவீந்திரநாத் தாகூரின் உறவினரான சரளாதேவி சௌத்திராணி, தாகூரின் “ஜன கண மன” என்னும் பாடலை முதல் முறையாக பாடினர்.

இந்த பாடல் அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட மக்களுக்கு பிடித்ததாக இருந்ததால், தொடர்ந்து பல பொதுக் கூட்டங்களில் இந்த பாடல் பாடப்பட்டது.

1919 இசை வடிவு

இதனைத் தொடர்ந்து 1919 ஆம் ஆண்டு, ரவீந்திரநாத் தாகூர் ஆந்திர மாநிலம் மதனபள்ளிக்கு பயணம் மேற்கொண்டார். அங்கு தான் இந்த பாடல் முதல் முறையாக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, அதற்கு இசையமைக்கப்பட்டது.

1943 தேசிய ராணுவப் படை பாடல்

பிற்காலத்தில் சுகந்திர போராட்டத்திற்காக சுபாஷ் சந்திர போஸால் உருவாக்கப்பட்ட இந்திய ராணுவப்படைக்கு, பிரிட்டன் அரசை எதிர்த்து போராட மக்களை ஒன்றிணைக்க அவருக்கு பல வகைகளில் தேவைகள் ஏற்பட்டன. அதன் காரணமாக, 1943 ஆம் ஆண்டு இந்திய தேசிய இராணுவப்படையின் தேசிய பாடலாக “ஜன கண மன” என்னும் இந்த பாடலை தான் அவர் தேர்ந்தெடுத்தார்.

1947 சுகந்திரத்திற்கு பிறகு  

பல போராட்டங்களுக்கு பின்னர், 1947 ஆம் ஆண்டு பிரிட்டிஸ் அரசிடமிருந்து இந்தியாவிற்கு சுகந்திரம் அளிக்கப்பட்டது. அதற்கு பின்னர், இந்தியாவில் ஆட்சியில் இருந்த அரசு, இந்திய தேசிய கீதத்தை தேர்வு செய்யும் முயற்சியில் இறங்கியது.

அதன்படி, ரவீந்திரநாத் தாகூர் எழுதிய “ஜன கண மன” பாடலும், பக்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய “வந்தே மாதரம்” பாடலும், அல்லா மா முகமது இக்பால் எழுதிய “சாரே சஹார்ஜே அட்சா” என்ற பாடலும் முன்னுரிமை பட்டியலில் இருந்தது.

Republic Day

“ஜன கண மன” என்னும் பாடல், பிரிட்டன் ஆட்சி காலத்தில் இந்தியாவை ஆண்ட ஐந்தாம் ஜார்ஜை புகழ்ந்து பேசும் வகையில் உள்ளது எனவும். “வந்தே மாதரம்” பாடல் சுகந்திர தேவியை காளி தேவியாக பாவித்து பாடப் பட்டுள்ளதாகவும், 1904 ஆம் ஆண்டு ஒரு வார இதழில் வெளியான “சாரே சஹார்சே அட்சா” என்னும் பாடல் வங்க பிரிவினையை பற்றி பாடப்பட்டுள்ளதாகவும் பல வகைகளில், பல இடங்களில் போராட்டங்கள் வெடித்தன.

தேசிய கீதம் மற்றும் தேசிய பாடல்

இத்தனை போராட்டங்களை தாண்டி, அப்போதைய இந்தியாவின் முக்கிய தலைவர்களாக இருந்த ஜவர்ஹலால் நேரு மற்றும் காந்தி ஆகியோரின் ஆலோசனையின் படி, “ஜன கண மன” தேசிய கீதமாகவும், “வந்தே மாதரம்” தேசிய பாடலாகவும் அறிவிக்கப்பட்டது.

1950 ஜனவரி 24

இதனைத் தொடர்ந்து, இந்திய நாடு குடியரசு பெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், 1950 ஜனவரி 24 ஆம் நாள் தேசிய கீதத்தையும், தேசிய பாடலையும் அப்போதைய இந்திய நாட்டின் ஜனாதிபதியாக இருந்த டாக்டர்.ராஜேந்திர பிரசாத் மக்களுக்கு அறிவித்தார்.

ஆனாலும், தேசிய கீதமாக ஒரு பாடல் தேர்வு செய்யப்பட, அரசியல் நிர்ணய சபையின் ஆலோசனையை பெறாமல் இதனை ஒரு அறிக்கையாகவே வெளியிட்டார் அன்றைய ஜனாதிபதி.

அந்த அறிக்கையில், “ ஜன கண மன” தேசிய கீதமாக அறிவிக்கப்படுகிறது. அதே வேளையில், “வந்தே மாதரம்” பாடலும் தேசிய கீத பாடலை போன்று சம மரியாதையில் தேசிய பாடலாக அறிவிக்கப்பட்டுள்ளது” என அந்த அறிவிப்பில் இருந்தது.

ஆனால், இந்த அறிவிப்பில் “சாரே சஹார்ஜே அட்சா” என்னும் பாடல் பற்றிய எந்த ஒரு தகவலும் இடம்பெற வில்லை. இந்த பாடலை எழுதியவர் ஒரு இஸ்லாமியர் என்பதால் தான் இந்த பாடல் நீக்கப்பட்டுள்ளதாக நாட்டில் பல இடங்களில் கிளர்ச்சிகள் வெடித்தன.

இது போன்ற பிரச்சனைகள் அனைத்தும் முடிந்து, ஒரே தீர்வாக தேசிய கீத பாடலாக “ஜன கண மன” பாடல் அங்கீகரிக்கப்பட்டது. அன்று தொடங்கி இன்று வரை நாட்டின் தேசிய கீதமாக நிலைபெற்று வருகிறது ரவீந்திரநாத் தாகூரின் கவி வர்ணம்.

பல சிக்கல்களை தாண்டி இன்று நம்மில் உயர்ந்து நிற்கும் பலவற்றில் தலையாயதாக தற்போது விளங்குவது “ஜன கண மன” என்னும் நம் தேசிய கீதம் தான்.

அத்தகைய பாடல் இன்றும் பல இடங்களில் சரியான மரியாதையை பெற வில்லை என்பது நிதர்சனமான உண்மை. அத்தகைய நிலை விரைவிலேயே மாற வேண்டும் என்பதே இங்கு பலரின் வேண்டுகோளாக இருக்கிறது.

புதியதை வியக்கும் நம்மிடையே பழையதை போற்றும் பழக்கமும் வந்தால் நன்றாக இருக்கும்.

உங்கள் கருத்து

Your email address will not be published.

ட்ரெண்டிங் நியூஸ்

News TN Special

News TN Special