ஒரு பக்கம் உதடு மறுபக்கம் நெருப்பு சொர்க்கம் நடுவினிலே! நோயிலும் வாழ்வு! சாவிலும் வாழ்வு புகையின் மடியினிலே!

சேதிகேளு  Published on: 09 மார் 2022, 1:06 pm Edited on: 31 மார் 2022, 10:36 am

புகையிலை எதிர்ப்பு நாள் இன்று..!

“புண்ணா போன மனதிற்கு புகையைப் போட்டு ஆற்றடா!” என்ற பழமொழியை எனது தாத்தா அடிக்கடி கூற நான் கேட்டு இருக்கிறேன்.

என்னதான் புகை பிடித்தல் புற்று நோயை உண்டாக்கும், புகை பிடித்தல் உயிரைக் கொள்ளும் , நான் தான் முகேஷ் என்று ஒருவர் பாடுபடுவதைக் காட்டினாலும். அதன் அபாயம் மரணப்படுக்கையில் கிடந்தாலும் அதனைப் பிடித்தவர்களுக்குத் தெரிவதில்லை;

அதுவும் இப்போதெல்லாம் ஆண், பெண் பேதமின்றி புகையிலையை ருசி பார்க்க துவங்கி விட்டனர்.

Smoking

எனது வீட்டிற்கு ஒரு வெளிநாட்டு பெண்மணி வந்திருந்தார். அவர் ஒரு நாளைக்கு குறைந்தது 3 பெட்டி சிகரெட்டை புகைப்பார்; இதில் என்ன வேடிக்கை என்றால் அந்த பெண்மணி என் தாத்தாவிற்கு புகைக்க கற்று கொடுத்து விட்டுச் சென்றார். அதிலிருந்து என் தாத்தா சாகும் நொடி வரை புகைக்கின்ற ஒன்றை மட்டும் நினைவில் வைத்திருந்தார். புகைப்பது எவ்வளவு பெரிய அடிமைத்தனம் என்று அப்பொழுது தான் புரிந்தது; தற்போதெல்லாம் பள்ளி படிக்கும் பருவத்திலேயே சிறுவர்களும் கற்றுக் கொள்கின்றனர். காரணம், சினிமாக்களில் கதாநாயகன் தாடி வைத்து கையில் நிமிடத்திற்கு ஒரு முறை சிகரெட்டை வைத்து இருந்தால் தான் மாஸ்; இல்லையென்றால்  வேஸ்ட் என்ற மனநிலைக்கு காண்போரை தள்ளிவிட்டது, இப்போது வரும் சினிமாக்கள்.

Smoking

இதை ஒழிப்பது என்பது சிறிது கடினம் தான் இருப்பினும் முயற்சிப்போம்! புகையிலை எதிர்ப்பு நாளாகிய இன்று, புகையிலையின் அபாயத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, உலக சுகாதார அமைப்பால் துவங்கப்பட்ட நாளாகும். புகையிலை பயன்பாட்டினால் வரும் தொற்றுநோய், அதனால் ஏற்படும் மரணம், சுகாதாரக்குறைவு மற்றும் பல எதிர்மறை விளைவுகளைப் பற்றின விழிப்புணர்வை உலக மக்களிடையே ஏற்படுத்துவதே இந்நாளின் நோக்கமாகும்.

Smoking

ஒவ்வொரு ஆண்டும் உலகில் 80 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த புகையிலையினால் வரும் நோய்த் தொற்றினால் மரணமடைகின்றனர். இதில் 12 இலட்சம் பேர் புகையிலை பயன்படுத்தாதவர்களும் உள்ளனர். அடுத்தவர் புகைக்கும் போது, அதனை சுவாசித்தவர்கள் தான் அவர்கள். 1984-ஆம் ஆண்டு சாம்பல் புதன் அன்று அயர்லாந்து நாட்டில் தேசிய புகைபிடித்தல் எதிர்ப்பு தினம் உருவானது. புகைப்பிடிப்பதை புற்று நோயுடன் இணைக்கும் மருத்துவ அறிக்கைகள் முதன்முதலில் 1920-களில் வெளிவந்தன.

Smoking

   2022-ஆம் ஆண்டின் கருப்பொருள் உலக சுகாதார அமைப்பினால் வெளியிடப்படுகிறது; அது,புகையிலை நமது சுற்று சூழலுக்கு அச்சுறுத்தல். ஆம்..! இந்த புகையிலையினால் நமது உடலுக்கு மட்டுமின்றி, சுற்று சூழலுக்கும் கேடு தான்;

 உடலில் நுரையீரல், கண் மட்டுமல்லாமல் தோளில் சுருக்கம் ஏற்பட்டு இளமையிலேயே வயதான தோற்றத்தை காண முடிகிறது; கூடவே வாய் துர்நாற்றமும், மஞ்சள் பற்களும், கருப்பான உதடுகள், சுகாதாரமற்ற இழுக்கான தோற்றத்தை ஏற்படுத்திவிடுகிறது. இந்த புகை பழக்கம் புகை பிடிப்பவர்களை மட்டுமல்லாமல் உடனிருப்பவர்கள் உயிரையும் கொள்ளும் ஒரு பகையாளியாகும். தீய பழக்கங்களுடன் வாழ நினைப்போர் யாரும் இல்லை. தீய பழக்கங்களை என்றாவது விட்டு விட வேண்டும் என்றே நினைப்பர்.

Smoking

“அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது…அதனினும் அரிது கூன், குருடு, செவிடு, பேடு இன்றி பிறத்தல் அரிது”. அதனினும் கொடிது தன்னால் தானே இழப்பது… என்பது ஔவையாரின் கூற்று; மனிதனாய்ப் பிறப்பதே அரிது, அதிலும் கை, கால் ஊனமின்றி பிறத்தல் அதனினும் அரிது. இவ்வாறு கிடைத்த வாழ்கையை மனிதன் வீணாய் தன்னை தானே அழித்துக் கொள்ளக் கூடாது.

Smoking

சிகரெட்டில் உயிரை அழிக்கும் அளவிற்கு என்ன உள்ளது?

ஒரு சிகரெட்டில் சுமார் 12 மி.கி அளவிற்கு நிக்கோட்டின் என்ற வேதிப்பொருள்  உள்ளது. இந்த வேதிப்பொருள் தான் மறுபடி மறுபடி புகைக்க தூண்டுவது. அந்த 12 மி.கி அளவு புகையை நாம் உள்வாங்கும்போது, அந்த புகை நுரையீரலில் படிகிறது. ஆனால் ரத்தத்தில் கலக்கும் நிகோடின் அளவு என்பது வெறும் ஒரு மி.கி தான். இந்த ஒரு மி.கி நிகோடின் ரத்தத்தில் கலந்தபின் நம் மூளையில் இருக்கும் இரத்த செல்களில் நிகோடின் ரிசப்டார் (nicotinic receptor) எனப்படும் ஒரு ஏற்பி இருக்கும். அந்த ரிசப்டாரில் இந்த நிகோடின் படிந்து கொள்ளும். இந்த நிகழ்வு நடக்கும்போது நம்முடைய மூளையில் டோபோமைன் எனப்படும் நியூரோ டிரான்ஸ்மிட்டர் என்ற வேதி பொருளை உருவாக்கும். நியூக்கிளியஸ் அக்கும்பன்ஸ் ரீஜியனின் அளவு எப்போது அதிகரிக்கிறதோ அப்பொழுது புகை பிடிப்பவர் ஒரு வித மகிழ்ச்சியை உணருவார்.

Smoking

செயின்ஸ் ஸ்மோகர் (chainsmoker) என்பவர் அதிகம் புகை பிடிப்பவர். ஒருவர் புகைக்காமல் இருப்பதனால் அவரின் மூளை நிகோடினை எதிர்பார்த்து எரிச்சல், தூக்கமின்மை போன்ற உணர்வுகளைத் தூண்டும். மூளை செல்களில் இருக்கும் நிகோடின் ரிசப்டாரில் நிகோடின் படிவத்தின் மூலம் புகைப்பவரின் இதயத் துடிப்பும், ரத்த அழுத்தமும் கூடும். தினமும் புகைப்பதால் நமது மூளையும் அதற்கு பழகி விடுகிறது. எனவே, அந்த பழக்கதை விட முடியவில்லை. அதற்கு அடிமையாகவும் மாறி விடுகிறோம்.

எனவே, புகை பழக்கத்திலிருந்து வெளிவர நினைப்பதை விட அந்த பழக்கத்திற்குள் போகாமல் இருப்பதே சிறந்தது.

உங்கள் கருத்து

Your email address will not be published.

ட்ரெண்டிங் நியூஸ்

News TN Special

News TN Special