கணித உலகின் “பை” தினம் இன்று!

சேதிகேளு  Published on: 14 மார் 2022, 3:40 pm Edited on: 31 மார் 2022, 10:56 am

நமக்கு தெரிந்ததெல்லாம் காதலர் தினம் மட்டும் தான்! அது என்ன “பை” தினம்.

நாம் பள்ளியில் படித்த காலங்களில் கணிதம் என்றாலே பலருக்கு அலர்ஜி. இதில், இந்த பைக்கு முக்கியப் பங்கு உண்டு. இந்த பை நம்மை ஆட்டி படைத்திருக்கும். எனவே, இந்த கணித மாறிலி பையை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது என்று நம்புகிறேன்.

இதில் சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், ஆங்கில மாதத்தில் மூன்றாவது மாதம் மார்ச்14-ஐ வைத்து 3.14 உலக பை தினமாக கொண்டாடப்படுகிறது.

இயற்கையில் பல பொருட்கள் வட்ட வடிவில் காணப்படுவதால் பை என்பது இயற்கையோடு இயைந்தது என்றேக் கூறலாம். வட்ட வடிவம் எங்கு தோன்றுகிறதோ அங்கு பையும் தோன்றும்.

pi day

பை என்ற எண்ணைக் கற்காலம் முதல் தற்காலம் வரை உள்ள மனிதர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். எனவே, கணிதத்தில் தோன்றும் எண்களில் அதிக அளவு பயன்படுத்தப்பட்ட எண்ணாக விளங்குவது, இதன் தனிச்சிறப்பு.

வில்லியம் ஜோன்ஸ் என்ற கணித அறிஞர் π என்ற எண்ணுக்கு 1706-ல்  இன்று நாம் பயன்படுத்தும் குறியீட்டை அறிமுகப்படுத்தினார். ஒரு கணினி, முறையாக வேலைசெய்கிறதா? எனத் தெரிந்துகொள்வதற்கு, π-ன் தசம இலக்கக் கணக்கீடுகள் மிகவும் அவசியம். எனவே, கணினியின் துணை கொண்டு பல அறிஞர்கள் பையின் மதிப்பை இன்று 13 டிரில்லியன் தசம இலக்கங்களுக்கு மேல் கண்டறிந்துள்ளனர்.

அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பை தினமான மார்ச் 14-ல் பிறந்தவர். இவர் கணிதத்தில் பல சமன்பாடுகளை சரி செய்தவர், ஆகையால், இவரின் பிறப்பு நாள் இந்த பை நாளுக்கு ஒப்பிடப்படுகிறது.

pi day

பை நாள் என்பது பல்வேறு நாட்களிலும் கொண்டாடப்படுகிறது. பொதுவாக இது ஐரோப்பிய நாட்கணக்குகளில் ஜூலை 22-ல் இது கொண்டாடப்பட்டு வருகின்றது. பையின் பின்ன எண்ணளவு 22/7 .

இந்த நாள் முதன்முறையாக 1988-இல் கலிபோர்னியாவில் உள்ள அறிவியல் தொழில்நுட்ப சாலையான எக்ஸ்புளோடோரியத்தில் கொண்டாடப்பட்டது. எனவே, இந்த தினத்தை, ‘பை அப்ராக்சிமேஷன் டே’ (Pi Approximation Day) என்ற பெயரில் கணிதவியல் அறிஞர்கள் கொண்டாடுகிறார்கள்.

கி.பி.400-500 ஆண்டுகளில் வாழ்ந்த இந்திய அறிஞர் ஆரியபட்டா அவர்கள் பைக்கு கணக்கிட்ட அளவு அண்மைக்காலம் வரையிலும் மிகத் துல்லியமானது.

Also read: ஒரு பக்கம் உதடு மறுபக்கம் நெருப்பு சொர்க்கம் நடுவினிலே! நோயிலும் வாழ்வு! சாவிலும் வாழ்வு புகையின் மடியினிலே!

பை தோன்றக்காரணம்:

பண்டைய மனிதனால் சதுரம், செவ்வகம், முக்கோணம் என பல வடிவங்களின் அளவையும் எளிதாய் அளக்க முடிந்தது. பல வித வடிவங்களையும் எளிதாய் அளக்க முடிந்த அவனுக்கு வட்ட வடிவம் மட்டும் வினோதமாகப் பட்டது. வட்டத்தை மட்டும் சரிவர அளக்க முடியவில்லை. பெரும் முயற்சிக்குப் பின், அவன் ஒரு அதிசயத்தைக் கண்டறிந்தான்.

pi day

ஒரு வட்டத்தின் சுற்றளவிற்கும் அதன் விட்டத்திற்கும் இடையே ஒரு பொது எண் இருப்பதைக் கண்டான். எந்த அளவு வட்டம் என்றாலும், அந்த விகிதம் மாறாமல் இருப்பதைக் கண்டு வியந்தான். அந்த எண் தான் கிரேக்கர்களால் “பை (Pi)” என்று அழைக்கப்பட்டது.

அந்த மாறிலியைக் கண்டுபிடித்தால் வட்டத்தின் பிரச்சனை தீர்ந்தது என்று எண்ணி அதனைக் கண்டறிய முயற்சித்தான். இதன் மதிப்பைக் கண்டறிய பண்டைய காலத்தில் இருந்தே முயற்சிகள் நடக்கின்றன. ஆனால், இன்றுவரை அந்த மாறிலியின் முழு எண்ணை யாராலும் கண்டறிய முடியவில்லை.

இதற்கு பல காலம் கழித்தே கிரேக்க மேதை அரிஸ்டாட்டில் பையின் மதிப்பை 3.1418 என்று கணக்கிட்டார். அதனைத்  அறிஞர் தாலமி 3.1416 என்று செம்மைப்படுத்தினார். நாம் பாட புத்தகங்களில் இதன் மதிப்பைக் கண்டறிந்தவர்கள் கிரேக்கர்கள் என்று படித்து இருக்கிறோம். ஆனால், 12-ஆம் நூற்றாண்டில் பையை ஒரு விகிதமுறா எண் என்பதைக் கண்டறிந்தவர்கள் ஐரோப்பியர்கள்.

ஆர்க்கிமிடிஸ் வழங்கிய தோராய மதிப்பான 3.14 என்ற எண்ணையே இன்று நாம் π -யின் மதிப்பாக வைத்து இருக்கிறோம்.  πயின் உண்மை மதிப்பு 3.14 என்ற  இரண்டு தசம இலக்கங்கள் வரையே சரியாக அமைகிறது.

பையின் தசம இலக்கங்களை மனப்பாடமாக ஒப்பிக்கும் பழக்கத்தைப் பலரும் முயன்று கொண்டிருக்கின்றனர். அகிரா ஹரகுச்சி என்பவர் ஜப்பான் நாட்டின் பொறியியலாளர் சென்ற வருட π தினத்தன்று 1,11,700 தசம இலக்கம் வரை சரியாகக் கூறியுள்ளார்.  ஆனால், இவரின் இந்த சாதனையை கின்னஸ் குழு பதிவு செய்யவில்லை.

மேலும், தமிழகத்தைச் சேர்ந்த வேலூர் பல்கலைக்கழகத்தின் மாணவரான ராஜ்வீர் மீனா 21/3/2015 அன்று π-ன் உண்மை மதிப்பை இன்செர்ட் (insert) தசம இலக்கம் வரை தனது கண்களை மூடிக்கொண்டு சரியாக ஒப்பித்துப் புதிய கின்னஸ் சாதனை படைத்தார்.

இன்றோ பல்வேறு கணித முறைகள் மற்றும் கணினி பயன்பாட்டால், “பை”யின் மதிப்பை ஒரு இலட்சம் எண்கள் வரை கணக்கிட முடியும். எனவே, பை யை பார்த்ததும் பயந்து ஓடாமல் இதன் பயன்களை இந்நாளில் தெரிந்து கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

உங்கள் கருத்து

Your email address will not be published.

ட்ரெண்டிங் நியூஸ்

News TN Special

News TN Special