கொடுமையை கண்டு கண்டு பயம் எதற்கு? நீ கொண்டு வந்தது என்னடா மீசை முறுக்கு? உலக நுகர்வோர் உரிமைகள் தினம் இன்று!

சேதிகேளு  Published on: 15 மார் 2022, 8:11 pm Edited on: 23 ஏப் 2022, 5:16 pm

உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தை நாம் எதற்காக கொண்டாடுகிறோம்? நாம் இவ்வுலகிற்கு என்ன கொண்டு வந்தோம்…? எதற்காக உழைக்கிறோம்…? யாருடைய பொருட்களை வாங்குகிறோம்…? எதற்காக வாங்குகிறோம்…? ஏன் வாங்குகிறோம்…? இவ்வாறெல்லாம்.., ஏன்?, எதற்கு?, என்ற கேள்விகள் எல்லாம் நமக்குள் ஒரு பொருளை வாங்கும் முன் இருந்தால், தேவை இல்லாமல் உழைத்து கண்ட, பொருட்களுக்கு கொட்டமாட்டோம்!.

இந்த இயந்திர உலகில் புதிய புதிய கண்டு பிடிப்புகள் தினம் தோன்றிக்கொண்டு தான் இருக்கும். தரம்மிக்க ஒரு பொருள் இருந்தால், அதே தர நிறுவனத்திற்கு போலியான ஒரு பொருளும் உண்டு. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றவா வேண்டும்…? ஏமாற்று நடந்து கொண்டுதான் இருக்கும்.

consumer

நம் அறியாமை தான் எல்லாம். சிறு சிறு கடைகளில் ஏழை மக்களிடம் பேரம் பேசுகிறோம்; ஆனால், பெரிய பெரிய சாப்பிங் காம்ப்ளெக்ஸ்களில் அவர்கள் நிர்ணயித்த விலைகளுக்கு, பணத்தை வாரி இறைத்து விட்டு வருவோம். அதே போலத் தான் நாம் உண்ணும் உணவு, பழங்கள், காய்கறிகள் எல்லாம் நாம் நடக்கும் வீதிகளிலும், நாம் வீதிகளில் போட்டு நடக்கும் காலணிகள், கண்ணாடி மாளிகையிலும் வைக்கப்பட்டிருக்கும்.

என்ன செய்வது, யாரைச் சொல்வது எல்லாம் வியாபாரம் தான். நாம் என்ன வாங்க வேண்டும் என்பதை நாம் தீர்மானிக்கும் முன் நம்மைச்சுற்றி உள்ள விளம்பரங்கள் தீர்மானித்து விடும் நமக்கு என்ன தேவை என்று; அதுமட்டுமல்ல, நம்மிடம் உள்ள ஸ்மார்ட்போன் நாம் பேசுவதை வைத்தே, நமக்கு என்ன தேவை என்பதை காட்டி வாங்க வைத்தே விடும். இந்த சூழ்ச்சி மிக்க உலகில் நாம் கொஞ்சம் கவனமாக இருக்க தான் வேண்டும்.

consumer

நமக்கு தேவை, மற்றும் அவசியம், அத்தியாவசியத்தை தவிர்க்க முடியாது; எனவே, அப்படி நமக்கு தேவையான பொருள் விலைக்கு ஏற்ப தகுதியானதா? பொருள் தரம் வாய்ந்ததா? என்று பார்த்து வாங்க வேண்டும். அப்படி தரமோ, விலையோ குறைந்தால் அதை கேட்க நமக்கு உரிமை உண்டு! அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகத் தான் இந்த நாள் மார்ச்.15 நுகர்வோர் உரிமைகள் தினம்(World Consumer Rights Day) அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த தினம் ஏன் உலக நுகர்வோர் தினமாக அனுசரிக்கிறோம்!

  1962-ல் அமெரிக்க ஜனாதிபதியான ஜான்.எ.ஃப்.கென்னடி என்பவர் முதன் முதலில் நுகர்வோர் உரிமைக்காக வரலாற்று சிறப்புமிக்க ஒரு உரையை நிகழ்த்தினார். இந்த உரையில், அவர் நான்கு அடிப்படை நுகர்வோர்  உரிமைகளை உருவாக்கினார்; அவை, பாதுகாப்பு, தகவல் பெரும் உரிமை, தேர்வுசெய்யும் உரிமை, மற்றும் கேட்கும் உரிமை.  அதை நினைவு கூறும் வகையில்தான் 1983 மார்ச்.15-ஐ உலக நுகர்வோர் தினமாக நாம் அனுசரிக்கிறோம்.

Also read: சந்திப்போமா! இருவரும் சந்திப்போமா! நீட் விலக்கை பற்றி ஒருமுறை சிந்திப்போமா! புறப்பட்ட ஸ்டாலின்! உறுதியளித்த ஆளுநர்

consumer

 ஒவ்வொரு ஆண்டும் மார்ச்.15 அன்று கொண்டாடப்படும் உலக நுகர்வோர் உரிமைகள் தினம், நுகர்வோர் உரிமைகள் மற்றும் தேவைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்ட ஒரு உலகளாவிய நிகழ்வாகும். நுகர்வோர் உரிமைகள் என்பது பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்கும் ஒவ்வொரு நபருக்கும் அந்த பொருட்களின் தரம், தூய்மை, விலை மற்றும் தரம் பற்றிய தகவல்களைப்பெற உரிமை உண்டு. ஒரு நுகர்வோர் என்ற முறையில் எங்கிருந்தும் எந்த நேரத்திலும் புகார் அளிக்க நமக்கு உரிமை உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆனால், பெரும்பாலான மக்கள் நுகர்வோர் என்ற முறையில் தங்களின் உரிமைகளைப் பற்றி அறிந்திருக்கவில்லை, எனவே இந்த நாளை கொண்டாடுவதன் மூலம், நமது உரிமையைப் பற்றி மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தலாம்.

யார் இந்த நுகர்வோர்?

“நுகர் வின்றி அமையாது மனித வாழ்வு” ஆம்…! மனிதர்களாகிய நாம் தான் நுகர்வோர்! ஒரு பொருட்களையோ, சேவையையோ பயன்பாட்டிற்காக வாங்குபவர்கள் தான் நுகர்வோர்.

நுகர்வோர் பாதுகாப்பிற்காக ஐக்கிய நாடுகள் சபையின் வழிகாட்டுதலின் படி, வகுக்கப்பட்டு இருக்கக்கூடிய நுகர்வோரின் உரிமைகள் மற்றும் நுகர்வோரின் கடமைகள்:

consumer

நுகர்வோரின் உரிமைகள்:

நுகர்வோரின் உரிமைகள் என்பது அவர்கள் ஒரு பொருட்களையோ, சேவைகளையோ, பயன்பாட்டிற்கு வாங்கும்போதோ, பெறும்போதோ இருக்கும் உரிமையாகும்.

1.அடிப்படைத் தேவைகளில் திருப்தி அடையும் உரிமை:தமது அடிப்படைத் தேவைக்காக வாங்கும் பொருட்கள் தமக்கு திருப்தியை அளிக்கிறதா? என தெரிந்து கொள்வது.

2.பாதுகாப்பு உரிமை: அந்த பொருளால் எந்த பாதிப்பும் ஏற்படுமா? என்பதை ஆராய்வது.

3.தகவல்களைத் தெரிந்து கொள்ளும் உரிமை:அதாவது, தாங்கள் வாங்கும் பொருட்களைப் பற்றிய முழுமையான தகவல்களைத் தெரிந்து கொள்ளும் உரிமை நுகர்வோர்களுக்கு உண்டு.

4.தேர்ந்தெடுக்கும் உரிமை: தங்களுக்கு என்ன பொருள் தேவை, எது தேவையில்லை என்பது குறித்த தேர்ந்தெடுக்கும் உரிமை உண்டு.

5.உத்தரவாதம் பெரும் உரிமை: தாங்கள் கொடுக்கும் பணத்திற்கு தகுந்த உத்தரவாதம் உள்ள பொருள் நமக்கு கிடைக்கிறதா? என்பது குறித்த தகவல் அறியும் உரிமை உண்டு.

5.நிவிர்த்தி பெரும் உரிமை: ஒரு வேலை தான் வாங்கிய பொருளால் திருப்தி இல்லை என்றால் அது குறித்ததான நிவிர்த்தியை அவர் கண்டிப்பாக பெற வேண்டும் என்ற உரிமையும் உண்டு.

6.நுகர்வோர் கல்வி பற்றி தெரிந்து கொள்ளும் உரிமை: தங்களுக்கு என்னென்ன உரிமைகள் இருக்கிறது என்பது குறித்து தெரிந்து கொள்வதற்கான உரிமை.

7.ஆரோக்கியமான சுற்றுசூழல் பெரும் உரிமை:

consumer

நுகர்வோரின் கடமைகள்:

1.பொருட்களின் தரம், விலை, உறுதிப்பாட்டை பரிசோதிக்க வேண்டும்: ஒரு பொருள் வாங்கினால் அனைத்தையும் பரிசோதித்த பிறகே அதை வாங்க வேண்டும்.

2.ஐ.எஸ்.ஐ. முத்திரை உள்ளதா? என்பதை கவனிக்க வேண்டும்.

3.உற்பத்தி மற்றும் காலாவதி தேதிகளை சோதிக்க வேண்டும்.

4.உட்பொருட்கள் பற்றிய விபரங்களை அறிய வேண்டும். அறிந்து கொண்ட பிறகு தான், தாங்கள்  பயன்படுத்தக்கூடிய அந்த பொருட்களை உபயோகிக்கலாமா? இதனால் எந்த பக்க விளைவும் ஏற்படுமா? என்பது குறித்து அவர்கள் உறுதி செய்த பிறகு தான் அவர்கள் அதை வாங்க வேண்டும்.

5.விலைக்கு ஏற்ற ரசீது பற்றி உறுதி செய்ய வேண்டும்: தாங்கள் வாங்கும் பொருட்களுக்கு தகுந்த ரசீது கொடுக்கப்படுகிறதா? அதில் வரிகள் அனைத்தும் சரியான முறையில் குறிப்பிடப்பட்டுள்ளதா? என்பது குறித்து நாம் கவனிக்க வேண்டும்.

6.கட்டணத்திற்கு ஏற்ற சேவை கிடைப்பதை கவனிக்க வேண்டும்: ஒரு பொருள் வங்கப் போனால் மட்டுமல்ல, ஒரு சேவையை பெறும்போதும் கூட அதாவது, மருத்துவமனைகள் ஆகட்டும், உணவகங்கள் ஆகட்டும், அங்கே அவர்கள் அளிக்கக் கூடிய சேவைகள் ஆகட்டும், தாங்கள் கொடுத்த கட்டணத்திற்கு, சரியான சேவை கிடைக்கிறதா? என்பதை நாம் கவனிக்க வேண்டும். ஆகையால், நுகர்வோராகிய நாம் நம்முடைய உரிமைகள் மட்டுமின்றி, நம்முடைய கடமைகளையும் பின்பற்ற வேண்டும்.

கடந்த 15-ந்து வருடங்களுக்கு முன்பு வரை இந்த நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் என்பது மிக வீரியமாகவே செயல்பட்டு வந்தது. இருப்பினும், படித்தவர்கள் மத்தியிலும், படிக்காதவர்கள் மத்தியிலும், விழிப்புணர்வு வந்ததின் பிறகு நுகர்வோரின் உரிமை என்பது குறைந்து வருவதைத்தான் காண முடிகிறது. அதற்கு காரணம் இந்த சட்டம் 1986-ல் கொண்டுவரப்பட்டது. இறுதியாக 2022-ல் நிறைய திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. அதன் பின், நுகர்வோர் பாதுகாப்பிற்கான வழக்கு போடப்பட்டால், அந்த வழக்கை நீதி மன்றத்தில் 90 நாட்களுக்குள் முடிக்க வேண்டும். அதற்காக, எந்த வழக்கறிஞர்களும் தேவை இல்லை. பாதிக்கப்பட்ட நுகர்வோர்களே சென்று நீதி மன்றத்தில் மனுவை தாக்கல் செய்து வாதாடலாம்.

consumer

ஆனால், வழக்கு 90 நாட்களுக்குள் முடிய வேண்டும் என்பதே இந்த சட்டத்தின் நோக்கம். தற்போதோ, பெரும்பாலும்  வழக்குகள்  90 நாட்களுக்குள் முடிவடைவது கிடையாது. காரணம், சட்டம் இயற்றப்பட்ட நோக்கினை அரசு கடைப்பிடிப்பது கிடையாது. ஆகையால், நுகர்வோரின் விழிப்புணர்வு குறைந்து கொண்டு தான் உள்ளது.

ஒரு நுகர்வோர் எப்படி உரிமைகளைப் பெறுவது:

ஒரு பொருளை வாங்கும் போது, அந்த விற்பனையாளர் தன்னை ஏமாற்றி விட்டாலோ, அல்லது பொருளின் விலை தரத்திற்கு இணையாக இல்லை என்றாலும், வாங்குகின்ற பொருட்கள் கலப்படம் என்று தெரிந்தாலும், நாம் நுகர்வோர் நீதிமன்றத்தை தாராளமாக அணுகலாம். மேலும் அவர்களின் மீதும் வழக்கு பதிவு செய்யலாம். இதை போன்று நாம் நுகர்வோராக இருந்து விற்பனையாளர்களால் ஏமாற்றப் பட்டிருந்தால் வழக்கு தாக்கல் செய்வதற்கு நம்மிடம் ஆவணங்கள் தேவை.

உதாரணத்திற்கு அந்த கடையின் ரசீது போன்றவை; இது போன்ற நுகர்வோர்களின் உரிமையை நிலை நாட்டுவதற்காக நம் இந்தியாவில் தேசிய நுகர்வோர் பிரச்சினைகள் குறைப்பு ஆணையம், மாநில நுகர்வோர்  பிரச்சினைகள் குறைபாடு ஆணையம், மாவட்ட நுகர்வோர் பிரச்சினைகள் குறைப்பு கருத்து களம் போன்ற 3 நிலைகளில் நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. நீதிமன்றம் என்றால் அணுகுவது கடினம் என்று நினைப்போம்! அப்படியல்ல, மிக எளிமையாக புகார் அளிக்கலாம், நீதி மன்றத்தில் சென்று நேரடியாக நமக்கு நாமே வாதாடலாம்.

consumer

 மாவட்ட நுகர்வோர் பிரச்சினைகள் குறைப்பு கருத்து களம் இதில் நாம் அணுகும்போது 20 லட்சத்திற்கு கீழ் இழப்பீடு இருந்தால் மாவட்ட நீதி மன்றங்களை அணுகலாம். 20 லட்சத்திற்கு மேல் இழப்பீடு இருந்தால் அவற்றை மாநில அளவிலான நீதி மன்றத்திற்கு எடுத்து செல்லலாம். அதற்கும் மேல் கோடி கணக்கிலான இழப்பீடு இருந்தால் தேசிய நுகர்வோர் ஆணையத்தை அணுகலாம். நாம் ஒவ்வொருவரும் எப்பொழுதும் யாருக்காகவும் நம்முடைய உரிமைகளை விட்டுக் கொடுக்கக்கூடாது.

அப்போதிலிருந்து  உலக நுகர்வோர் தினம் பிரபலமடைந்து ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளுடன் கொண்டாடப் பட்டு வருகிறது. அதே போல் இந்த வருட கருப்பொருள் “நியாயமான டிஜிட்டல் நிதி( FAIR DIGITAL FINANCE)’.

consumer

டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், பணம் செலுத்துதல், கடன் வழங்குதல், காப்பீடு மற்றும் கடன் மேலாண்மை போன்றவை எல்லா இடங்களிலும் நிதிச் சேவைகளில் நுகர்வோருக்கு முக்கிய உதவியாளராக மாறுகின்றன. இந்த பெருந்தொற்று காரணமாக அதிகமான அளவில் உலகம் முழுவதும் டிஜிட்டல் நிதி சேவைதான். இதில் குறைந்த மற்றும் நடுத்தர வருமான மக்கள் நிச்சயம் பாதிப்பு அடைந்திருக்கக் கூடும். சில சமயங்களில் வங்கி கணக்கில் பணத்தை எடுத்து விட்டதாக குறுஞ்செய்தி(message) வரும். ஆனால் பொருட்கள் கையில் வந்து சேராது. நுகர்வோர்களின் பார்வையில் இந்த மாற்றம் பாதுகாக்கப்பட்ட மற்றும் தனிப்பட்ட தரவுகளுக்கு நியாயமான டிஜிட்டல் நிதியை உருவாக்கும் என நம்பப்படுகிறது.

consumer

பாதிப்பை அடைந்து விட்டு நீதிமன்றங்களை தேடி ஓடுவதற்கு இங்கு யாருக்கும் நேரம் இருப்பதில்லை. ஆகையால், பாதிப்பு அடைந்தவர்களும் போனால் போகட்டும் என்று இருக்காமல், பாதிப்பு ஏற்படும் முன் தன்னையும், தன் சமூகத்தையும் காத்துக்கொள்வது நல்லது!

உங்கள் கருத்து

Your email address will not be published.

ட்ரெண்டிங் நியூஸ்

News TN Special

News TN Special