“விஜய்சேதுபதி” எப்போது மக்கள் செல்வன் ஆனார்?

சேதிகேளு  Published on: 16 ஜன 2022, 10:00 am Edited on: 17 ஜன 2022, 5:28 pm

தமிழ் சினிமாவில் ஆரம்ப காலக்கட்டத்தில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வளர்ந்து வந்த நடிகர்கள் பலர் உள்ளனர். அதில் தனக்கென தனி இடம் பிடித்தவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. எந்த ஒரு சினிமா குடும்ப பின்னணியும் இல்லாமல் தனது கடுமையான உழைப்பு மற்றும் திறமையின் மூலமாக தனக்கென தமிழ் திரையுலகில் ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர் .

இவரை பற்றி சொல்ல வேண்டுமானால், இவர் ஒரு சிறந்த நடிகர், தயாரிப்பாளர், பாடகர், நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் பாடலாசிரியர் என்ற  பன்முகங்களைக் கொண்டவர் என்று சொல்லலாம்.

விஜய் சேதுபதியின் முழுப்பெயர் விஜய குருநாத சேதுபதி. இவர் தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராசபாளையத்தில் பிறந்தவர்.  ஜனவரி 16, 1978 – ஆம் ஆண்டு காளிமுத்து – சரஸ்வதி என்ற தம்பதிக்கு மகனாக பிறந்தவர். சிறுவயதிலிருந்தே படிப்பின் மீது பெரிதாக ஆர்வம் எதுவும் இல்லாமல் இருந்துள்ளது.

இவர் ஒரு நடிகராக வருவதற்கு முன் இளநிலை வணிகவியலில் பட்டம் பெற்று 3 ஆண்டுகள் துபாயில் கணக்காளராக பணியாற்றினார். அதன் பிறகு துபாயில், கேரளா மாநிலத்தில் உள்ள கொல்லம் பகுதியை சேர்ந்த ஜெஸ்ஸி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

கணக்காரர் பணி பிடிக்காததால்  2003- ஆம் ஆண்டு இந்தியாவுக்குத் திரும்பினார். விஜய் சேதுபதி மற்றும் அவரது மனைவி ஜெஸ்ஸிக்கு சூர்யா மற்றும் ஸ்ரீஜா என்று இரண்டு அழகான குழந்தைகள் உள்ளனர்.

vijaysethupathi

இவர் இந்தியா வந்த பின்பு சிறுது காலம் மார்க்கெட்டிங் கம்பெனியில் வேலை செய்துள்ளார். அதன் பிறகு இயக்குனர் சிகரம் பாலு மகேந்திரா உதவியுடன் அவரது நடிப்பு திறமையை வெளிக்காட்டினார். பல குறும்படங்களில் முதலில் நடிக்க தொடங்கினார்.

பின்  கார்த்திக் சுப்புராஜ் என்ற இயக்குனருடன் சேர்ந்து பணியாற்ற இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்பு புதுப்பேட்டை படத்திற்கான துணை நடிகர் தேர்வுக்குச் சென்றார். அதில்  தேர்வான இவர் தனுஷின் நண்பனாக நடிக்கும் வாய்ப்பு பெற்றதன் மூலம் அந்த படத்தில் துணை நடிகராக நடித்து முதன் முதலில் திரையில் தோன்றினார் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி.

அதை தொடர்ந்து வெண்ணிலா கபடி குழு, லீ, நான் மகான் அல்ல போன்ற படங்களில் கிடைத்த சிறு சிறு வேடங்களில் நடித்து திரையில் கால் பதித்தார். பின்பு “ தென்மேற்கு பருவகாற்று “என்ற படம் இவரது வாழ்க்கையை மாற்றியது. ஏனெனில் அந்த படத்தில் அவர் கதாநாயகனாக நடித்து வலம் வர தொடங்கினார்.

vijaysethupathi

அதை தொடர்ந்து “சுந்தரபாண்டியன்” என்ற படத்தில்  இவரது வில்லன் வேடம் இவரின் தனித்துவத்தை வெளி காட்டியது. மேலும் பீட்சா , நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்னும் படங்கள் விஜய் சேதுபதியின் வேறு வேறு நடிப்பு திறமைகளை காட்டியது.

எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் நடிக்க தயங்காமல் “சூது கவ்வும்” என்னும் படத்தில் ஒரு புது வேடத்தில் நடித்ததன் மூலம் சினமாவில் யாரும் படைக்காத புது இலக்கணம் படைத்தார்.

அதன் பின்பு வருடத்திற்கு ஐந்து படங்கள் என இவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதிலும் கடந்த 2௦17- ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியான “விக்கரம் வேதா” என்ற படத்தில் இவரது நடிப்பு தனித்துவமாக இருந்தததால் மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது.

இந்த படத்தின் 1௦௦- வது நாள் சென்னையில் கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் கலந்து பேசிய விஜய் சேதுபதி “எனக்கென்று வரலாறு ஒன்று எழுதினால், அதில் கண்டிப்பாக விக்ரம் வேதா படம் இருக்கும்” என்று பெருமையுடன் கூறியுள்ளார். அத்தகைய சிறப்பினை பெற்றுள்ளது அவர் படம்.

vijaysethupathi

மேலும், ‘96’, ‘சேதுபதி’, ‘கருப்பன்’ என்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில்  நீங்கா இடம் பிடித்த இவர் “மக்கள் செல்வன் விஜய்சேதுபதி” என்ற பெயரையும் பெற்றார். ‘96’, ‘சேதுபதி’, ‘கருப்பன்’ என்ற மூன்று படத்திற்கு பின்பு இவருக்கு பெண் ரசிகைகள் எண்ணிக்கை அதிகமானது.

Read more : இந்த லிஸ்ட்டுக்கே லிஸ்ட் போடணும் போலையே..! – விஜய்சேதுபதியின் 2022 Film List

 

இவர் பெண்கள் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டவர். தொடர்ந்து  “பேட்ட” படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்துள்ளார். “மாஸ்டர்” படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்துள்ளார். கதாநாயகனாக மட்டும் இல்லாமல் வில்லனாகவும் நடித்து மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வருகிறார்.

இவரை பற்றி அதிகமாக சொல்லி கொண்டே போகலாம். மனதில் பட்டதை உடனே துணிச்சலுடன் கூறுவார். இவர் எந்த கதாபாத்திரத்திலும் நடிக்க மாட்டேன் என மறுத்தது இல்லை. எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் துணிவுடன் நடிக்கும் நடிகர்.

மத்த கதாநாயகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். சாதிக்க துடிக்கும் ஒவ்வொரு இளைஞர்களுக்கும் முன்னணியாக திகழ்கிறார்.

மக்கள் செல்வன் என்று மக்களால் போற்றப்படும் நடிகர் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி வரும் ஜனவரி 16, அன்று  அவரது பிறந்தநாளை கொண்டாட உள்ளார்.

உங்கள் கருத்து

Your email address will not be published.

ட்ரெண்டிங் நியூஸ்

News TN Special

News TN Special