z நீங்கள் எதற்காக News TN ல் செய்திகளைத் தெரிந்து கொள்ள வேண்டும்? - News TN - Tamil Nadu News | Latest News Update | Live News

நீங்கள் எதற்காக News TN ல் செய்திகளைத் தெரிந்து கொள்ள வேண்டும்?

செய்தித்தளமும் செய்திகளும்

News TN என்பது முழுக்க முழுக்க இணையதளத்தில் இயங்கும் ஒரு செய்தித்தளம். இதில் வழங்கப்படும் செய்திகள் அனைத்தும் பல்வேறு கோணங்களில் அதன் உண்மைத்தன்மை ஆராயப்பட்ட பின்னரே செய்திகளாக வெளிவருகின்றன. இவ்வாறு வெளிவரும் செய்திகள் அனைத்தும் மிகத் துல்லியமாகவும் மிகச் சரியாகவும் இருக்கும். மேலும் ஒவ்வொரு செய்திகளும் பல்வேறு இடங்களில் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் எழுதப்படுகின்றன.

செய்திகளின் பின்புலமும் சேகரிக்கப்படும் விதமும்

எமது செய்தி அறைக்கு வரும் அனைத்தும் தகவல்களே. அதனை செய்திகளாக மாற்றுவதும் அல்லது அந்த தகவலுக்கு ஏற்றார்போல தனிப்பட்ட அல்லது அரசின் மூலமாகவோ உதவிகளைப் பெறுவதும் ஒவ்வொரு எழுத்தாசிரியர்களின் கைகளில் தான் உள்ளது. ஏனெனில் கிடைக்கும் தகவல்களின் தன்மைகள் படிக்கும் பலருக்கும் ஒருவித ஆர்வத்தை உண்டாக்கி News TN இணையதளத்திற்கு நன்மை தருவதாக இருந்தாலும், அத்தனிநபரின் வாழ்க்கைக்கு இடர்களை ஏற்படுத்தினால் இதனை News TN, செய்திகளாக வெளியிடாது. செய்திகளை சேகரிப்பதற்கென தலைநகரம், மாவட்டங்கள், வட்டங்கள்  வாரியாக கள நிரூபர்களையும் பன்னாட்டு செய்திகளைப் பெற தனிக் குழுவையும் தன்னகத்தே சிறப்பாகக் கொண்டு News TN செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் கிடைக்கும் தகவல்கள் அனைத்தும் பலகட்ட சோதனைகளுக்குப் பிறகே செய்திகளாக வெளியிடப்படும்.

எளிதில் படிக்க ஏதுவாக உள்ள செய்திப் பிரிவுகள்

பார்வையாளர்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட வயதினையும், தனித்துவமான விருப்பங்களையும் கொண்டவர்களாக இருப்பார்கள். இதனை அடிப்படையாகக் கொண்டு News TN செய்தித்தளம் பல்வேறு வகைகளை உள்ளடக்கியுள்ளது. அரசியல், பொது, விளையாட்டு, சினிமா, பொருளாதாரம், வாழ்வியல், சுற்றுசூழல், உடலும் உணவும், தொழில்நுட்பம்  போன்றவற்றோடு சில சிறப்பு பகுதிகளையும் உள்ளடக்கியுள்ளது. குறிப்பாக பாமரன் பஞ்ச், ஊர்க்கிழவி ஆகிய பிரிவுகள் பொதுவான செய்திகளுக்கு அப்பாற்பட்டு வாசகர்களை சிறிது நகைச்சுவையோடு சிந்திக்க வைக்கும் என்பதில் News TN நிறுவனத்திற்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. இதற்கு மேலாகவும் புதுமையான முறையில் செய்திகளை வழங்க NEWS TN பரிசீலித்து வருகிறது.

NEWS TN எழுத்தாளர்களின் சுதந்திரம் என்றும் மக்களின் கைகளில் தான்

ஒவ்வொரு பேனாவுக்கும் மையானது பொதுவாக இருந்தாலும் அப்பேனாவை பிடித்து எழுதுபவர்களின் கைகள் மாறுபடும். இதையே News TN நிறுவனத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரும் கையாளுகிறார்கள். குறிப்பிட்ட ஒரு பிரிவின் கீழ் எழுதப்படும் ஒவ்வொரு புள்ளியும் எந்தவொரு பெரும்புள்ளிகளின் இடையூறுகள் இல்லாமலும் சிறிய சாயப்புள்ளி கூட News TN மீது வைக்கப்பட்டு விடக் கூடாது என்பதிலும் கவனமாக இருந்து வருகிறோம். அதேசமயம் ஒரு தனிப்பட்ட நபர்/ பொருள்/ செயல் ஆகியவற்றைப் பற்றி எழுதும்போது முழுமையான பத்திரிகை சுதந்திரத்தோடு எழுதி வருகின்றனர். இதனை வாசகர்கள் வாசிக்கும் ஒவ்வொரு செய்தி கட்டுரைகளின் உள்ளடக்கமும் தெரிவிக்கும்.

உங்களுக்கான காப்புரிமை எங்களுக்கான முதல் நிலைப்பாடு

இந்திய ஊடக மற்றும் பத்திரிகை விதிகளில் கூறப்பட்டுள்ளது போல அனைத்து பத்திரிகை விதிகளும் NEWS TN தொடர்ந்து பின்பற்றும். அதேசமயம் NEWS TN நிறுவனத்திற்கு மூலங்கள் (Source) கிடைக்கப்பெறும் இடங்கள் எக்காரணத்தைக் கொண்டும் வெளியிடப்படாது. தனிநபர் ஒருவர் News TN செய்தித்தளத்தில் அவருடைய செய்திகளை வெளியிட விரும்பினால், அதன் உண்மைத்தன்மை ஆராயப்பட்டும் செய்தியின் அவசியத்தை உணர்ந்தும் அச்செய்திகள் வெளியிடப்படும். மேலும் பத்திரிகை விதிகளின் படி, பாதிக்கப்பட்டவர்கள் பெண்களாகவோ அல்லது குற்றம் புரிந்தவர்கள் சிறார்களாகவோ இருந்தால் அவர்களது நிஜப் பெயரினை News TN வெளியிடாது. NEWS TN எழுத்தாளர்களின் ஒவ்வொரு வார்த்தைகளும் அனைத்து வயதினரும் படிக்கும் விதத்திலும் மிக எளிய நடைமுறையிலும் இருக்கும்.

News TN ன் தனித்துவங்களை அறிய

இதில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளும் மற்ற அனைத்து ஊடகங்களில் வரும் முக்கியச் செய்திகளாகவே வாசகர்களாகிய நமக்குத் தென்பட்டாலும் அதன் உள்ளடக்க விவரங்கள் மாறுபட்ட கோணங்களில் உள்ள சிந்தனைகளை உள்ளடக்கியதாக இருக்கும் என்பதற்கு News TN உத்திரவாதம் வழங்குகிறது. மேலும் இம்மாதிரியான மாறுபட்ட செய்திகளுக்காக News TN செய்தித்தளம் புதிய பிரிவுகளையும் கொண்டுள்ளது. இம்மாதிரியான செய்திகள் ஒவ்வொரு வாசகர்களுக்கும் பிடித்தமான ஒன்றாக இருக்கும்.

வாசகர்களின் இலைமறை கருத்துக்களும் வரவேற்கப்படும்

News TN-ல் வெளியிடப்படும் ஒவ்வொரு செய்திகளும் அனைவருக்குமானதாகவும் ஒருபக்கச் சார்பற்றவாரும் இருந்தாலும், அதனைப் பற்றிய கண்ணோட்டம் ஒவ்வொரு தனிப்பட்ட வாசகரிடத்திலும் மாறுபட்டு காணப்படும். இதனை பரிபூரணமாக News TN ஏற்றுக் கொள்ளும். ஆனால், இதன் உச்சக்கட்டமாக மிக நேர்த்தியாக News TN செய்தித்தளத்தின் கட்டுரைகள் எந்தவொரு பிழையும் இல்லாமல் இருக்கும் என்பதே NEWS TN நிறுவனத்தின் முதன்மைக் குறிக்கோள்களில் ஒன்று.